இன்று தொடங்கி எனது இத்தளத்தில் ‘ஸ்லேட்’ என்னும் புதிய சந்து திறக்கப்படுகிறது. இதுநாள் வரை ட்விட்டரில் நான் செய்துவந்தவற்றை இனி இங்கே செய்ய உத்தேசம். ஒரு புத்தகமாகத் தொகுக்கலாம் என்று நினைத்தால்கூட ட்விட்டரில் தேடித்தொகுப்பது பெரும்பாடாயிருக்கிறது. எழுதுபவை அனாமத்தாக வீணாவது பொறுக்கவில்லை. எனவே வாசகர்கள் / நண்பர்கள் இப்பக்கத்திலேயே என் ட்வீட்களுக்கு பதிலளிக்கலாம். விவாதிக்கலாம். அங்கு செய்யும் அனைத்தையும் இங்கு செய்யலாம்.
விஜயதசமிக்கு எதையாவது புதிதாகச் செய்வது என்பது ஒரு மரபு. விட்டுவைப்பானேன்? இத்தளத்தின் வார்ப்புருவை மாற்றியிருக்கிறேன். சிலேட்டுமப் படலத்தைத் திறந்துவைத்திருக்கிறேன். போதாது?
இனி கிறுக்கல், ஸ்லேட்டில் மட்டும்.
நல்லது. அங்கேயே கீச்சிட்டால் போகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரே சிரமம், இந்த மாதிரி சந்துக்களில் புகுந்து புறப்பட தினம் ஞாபகம் வைத்திருப்பது தான். நீங்கள் சொல்ல வருகிற விஷயம் புரிகிறது, ஆனால் டுவிட்டரின் சிறப்பே நாம் எல்லோரும் அங்கு தினம் வந்து சேருவது தான்.
மற்றபடி கிறுக்கல் என்ற வார்த்தையை காசு கொடுத்து வாங்கி வைத்திருக்கிறேன், உபயோகிக்கும் முன்பு யோசிக்கவும் 🙂
கவலைப்படாதீர்கள். நான் கிறுக்க மாட்டேன்.
“அனாமத்தாக வீணாவது பொறுக்கவில்லை”… then what about your serial writtings?