அனுபவம்

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 39)

சில அத்தியாயங்கள் இடைவெளிக்கு பிறகு சூனியனை நாம் சந்திக்கிறோம். அவன் கோவிந்தசாமியைப் பார்த்து எண்ணுகிற எண்ணங்களுடன் தொடங்குகிறது அத்தியாயம். போகிற போக்கில் சூனியன் கோவிந்தசாமியையும் அவன் வணங்கும் கடவுளையும் கிண்டலடிக்க தவறவில்லை.
மேலும், அவன் ஏன் கோவிந்தசாமியை காப்பாற்றாமல் சிக்கலில் மாட்டிவிட நேர்ந்தது என்பதுபற்றி சொல்லிக் கொண்டே போகிறான்.
இந்தக் கதையின் கதாநாயகனான கோவிந்தசாமியை முட்டாளாக்கிவிட்டு கதாநாயகன் அந்தஸ்தை பறித்துக் கொண்ட சூனியன் தன்னை எழுத்தில் கொண்டு வந்த பா.ரா.வையும் கண்டபடி பேசுகிறான்.
சூனியன் கோவிந்தசாமியை நூலகத்தில் சந்தித்து பேசுகிறான். அந்த உரையாடலிலும் மீண்டும் மீண்டும் கோவிந்தசாமியின் முட்டாள்தனம் நிரூபிக்கப்படுகிறது.
‘அவனுக்கு உதவுவது போல அவனிடம் வந்து பேசிக்கொண்டிருக்கும் சூனியன் உண்மையிலேயே உதவத்தான் வந்தானா? அவனது உண்மையான நோக்கம் தான் என்ன?’ போன்ற கேள்விகளுடன் உங்களைப்போல நானும் காத்திருக்கிறேன்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி