
இந்த ஆண்டின் இரண்டாவது எழுத்துப் பயிற்சி வகுப்புகளை ஏப்ரல் 5 முதல் தொடங்கவிருக்கிறேன். இது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படுகிற சில வினாக்களும் பதில்களும் கீழே உள்ளன.
எழுத்துப் பயிற்சி வகுப்பு FAQ
1. பத்திரிகைகளில் கதை-கட்டுரை எழுதிப் பிரசுரமாக வழி காட்டுவீர்களா?
பதில்: இல்லை. என்ன எழுதினாலும் எல்லா இடங்களிலும் கவனம் பெற என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவேன்.
2. பிரபல எழுத்தாளராவதெல்லாம் அதிர்ஷ்டத்தால் அமைவதல்லவா?
பதில்: ஆம். அதிர்ஷ்டத்துக்குத்தான் அதிகம் உழைக்க வேண்டும்.
3. இந்த வகுப்பில் கலந்துகொள்ளக் கதை எழுதத் தெரிந்திருக்க வேண்டுமா? கட்டுரைப் பயிற்சி அவசியமா?
பதில்: தமிழில் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். குறைவான பிழைகளுடன் எழுத முடிவது கூடுதல் தகுதி. பிழையே இல்லாமல் எழுதத் தெரியுமென்றால் வெற்றி விரைவில் வரும்.
4. எழுத்தெல்லாம் தன்னியல்பாக நிகழும் செயல் அல்லவா? அதை ஃபார்முலாக்களுக்குள் எப்படிப் பொருத்துவீர்கள்?
பதில்: ஆற்று நீர்தான் அக்வாஃபினாவாகவும் ஆகிறது.
5. பெண்ணெழுத்தாளர்களுக்கு இடம் உண்டா?
பதில்: எழுதத் தெரிந்த பெண்களுக்கு இடமுண்டு.
6. பயிற்சிக் கட்டணத்தை ஏன் பொதுவில் சொல்ல மாட்டேனென்கிறீர்கள்?
பதில்: பெரிய ராணுவ ரகசியமெல்லாம் இல்லை. மித்ரர்கள், சத்ருக்கள், அனுகூல சத்ருக்கள், பிரதிகூல மித்ரர்கள் எனப் பல தரப்பினரும் புனைபெயரில் வந்து உட்கார்ந்துவிடுகிறார்கள். நியாயமாக இடம் தேவைப்படுவோருக்கு இல்லாமல் போகிறது. அதைத் தவிர்க்கத்தான் வாட்சப்புக்கு வரச் சொல்வது.
வருக. (வாட்சப் எண்: 8610284208)
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.