Books

ஜந்து:

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் தொடங்கி, இந்நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் வரையிலான காலக்கட்டம், தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு மிக முக்கியமான தருணம். அசைக்க முடியாத பெரும் சக்தியாகத் திகழ்ந்ததொரு கட்டமைப்பு, தனது அனைத்து ஆற்றல்களையும் பெருமைகளையும் ஆளுமையையும் உதிர்த்துவிட்டு முற்றிலும் வேறொரு தோற்றம் கொள்ளத் தொடங்கியதன் அடிப்படைகளை இந்நாவல் ஆராய்கிறது.

ஜென் கொலை வழக்கு:

ஜென் கொலை வழக்கு என்னும் நவீன நாசகார ஜென் கதைகள், ஜென் கதை வடிவத்தைப் புறத் தோற்றமாகக் கொண்டு எழுதப்பட்ட நுண் கதைகளே.

மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல் இருந்துவிட்ட ஜென் கதைகளைப் போலவே தோற்றமளிக்கும். ஏனெனில் இக்கதைகளில் நிஜமான ஜென் குருமார்கள் வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், அன்றைய மன்னர் வம்சங்கள், அக்கால வாழ்க்கை முறை, அரசியல், அவற்றின்மீது மதங்களும் சித்தாந்தங்களும் செலுத்திய செல்வாக்கு எல்லாம் அப்படி அப்படியே பதிவாகும். இதில் எந்த இடத்தில் புனைவு ஒரு பூனையைப் போலப் புகுந்து இன்றைய நவீன வாழ்வையும் அதில் நாம் காணும் மனிதர்களையும் கொண்டு நிறைக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இதில் உள்ள சுவாரசியமான விளையாட்டு.

ஜந்து (நாவல்), ஜென் கொலை வழக்கு (நுண் கதைகள்) இரண்டு புத்தகங்களின் மொத்த விலை ரூ. 510. முன்பதிவுச் சிறப்பு விலை ரூ. 340 மட்டுமே. இச்சலுகை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இருக்கும். எழுத்து பிரசுரம் இந்நூல்களை வெளியிடுகிறது.

இரு புத்தகங்களையும் முன்பதிவு செய்வோருக்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று கையொப்பமுடன் அனுப்பிவைக்கப்படும்.

முன்பதிவு செய்ய இங்கே செல்க.

For the Complete list of Pa Raghavan’s Fiction & Non Fiction works, click Here.

All Books are available at Zero Degree Publishing’s Ezhuthu Prachuram. Amazon Kindle eBooks are Here.

 

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!