“அட, அடிமடையா கோவிந்தா.. உனக்கெதற்கு பாண்டிச்சேரி விஜயம்? உன் எதிர்காலமே ததிங்கிணதோம் போட்டுக்கொண்டிருக்க, கடந்தகாலத்தை ஆராய்ந்து என்ன செய்யப்போகிறாய்?
ஆனால் மிகத்தெளிவாக இருந்தாள் சாகரிகா. பணம் போனால் போகிறதென கோவிந்தசாமியை பேக்கப் செய்தாள்.
அடிமுட்டாள் ,, அல்லது.. ஒரே நேர்கோடான சிந்தனை உடையவன் கோவிந்து என்றறிந்து அவனிடம் கிரைப் வாட்டர் என்ற கோட் வேர்டை சொன்னால், கோவிந்து பாண்டியிலிருந்து போத்தலை பிடித்து வந்து விடுவானா? குறைந்தபட்சம் க்ரேப் ஒயின் கூட கிடைக்காது! அதே க்ரைப் வாட்டர் தான்கிடைக்கும்!
90 களில் தமிழில் தான் கடை பெயர் பலகை வைக்கவேண்டும் என்ற அரசியல்வாதியும்.. வருவேன், வருவேன் என்றும் இன்று வரமாட்டேன் என்ற நடிகரும் பேமஸ்.
இந்நிலையில் எழுத்தாளர் பாரா “அவரின்” முன்னே நின்றிருந்தார்.
“உன்னால் தான் எல்லாம் சூனியனெல்லாம் என்னைப்பற்றி பேசும்படி ஆகிவிட்டது” அவரின் வார்த்தைக்கு பாரா பதிலளிக்கவில்லை.
“சாகரிகா பக்கம் நீ சாய்வதாக கேள்விப்பட்டது?”
“நீங்கள் அறியாததல்ல! மொழி மட்டுமே என் வசம். சிதறிக்கிடக்கும் சம்பவங்கள் அல்லவா என் பேனா முனையில் இருந்து கதையாக வருகிறது.. அது சாகரிகாவோ, கோவிந்தசாமியோ, சூனியனோ, நீங்களோ, நானோ…அதற்கும் அருள் செய்தவர் தாங்களல்லவா. நம்மை போல் இறையுணர்ந்தவர்கள் சாத்தான்களால் பழிக்கப்படத்தானே செய்வர்!”
பாராவின் மறுமொழி கேட்ட அவர் புருவங்கள் நெறித்தபடி கேட்டார்..”என்ன? நம்மைப்போலவா?” அவர்.. கோரக்கர்.
மேலும் வாசிப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.