கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 9)

இந்த அத்தியாயத்தின் முதல் சில வரிகளைப் படித்ததும் சற்றுக் குழம்பிவிட்டேன். கபட வேடதாரி தான் படித்துக் கொண்டிருக்கிறேனா அல்லது தவறுதலாக வேறு ஏதேனும் புத்தகத்தை திறந்து விட்டேனா என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது.
இல்லை கபட வேடதாரி தான். ஆனால் கதாசிரியர் கதையை வேறு ஒரு தளத்துக்குத் திருப்பி விட்டார் போலும். எனக்கு என்ன சந்தேகம் என்றால் சூனியனுக்குத்தான் உண்மையில் பாரா மீது கோபமா? அல்லது தான் எழுதிய அத்தியாயங்கள் மீது கதாசிரியருக்கு வருத்தமா? அல்லது நாம் எல்லோரும் சேர்ந்து எழுதுகின்ற அத்தியாயக் குறிப்புகளின் மீது எரிச்சலா தெரியவில்லை. ஆனால் சூனியனிடம் பாரா இத்தனை திட்டு வாங்க வேண்டாம்.
இந்த அத்தியாயத்துக்கு பிறகும் நீல நகரம் எது என்று கண்டறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று தோன்றுகின்றது.
பொதுவாக நடைமுறை வாழ்க்கையில் பெண்கள்தான் உணர்ச்சிப் பிழம்புகளாகவும் ஆண்கள் வாழ்க்கையை அசட்டையாகக் கையாள்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த எழுதப்படாத விதி கபட வேடதாரியில் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.
இதுவரை கிசுகிசு போல வந்த எல்லோருடைய பெயரையும் ஊகிக்க முடிந்தது. ஆனால் தமிழ் குடிமகன் யார் என்றுதான் என்னால் ஊகிக்க முடியவில்லை.
இந்த அத்தியாயத்தில் ஒரு இடத்தில் வருகின்ற அலர்ஜியும் தும்மலும் தொடர்புடைய வரி, பாராவின் பிரத்தியேகமான சுவாரசியமான பாணி சொற்றொடர். சிரித்து மாளவில்லை.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter