போட்டு சாத்துங்கள் பொன்னியின் செல்வனை!

மாநிலம் ஒரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. ஆளும் கட்சிக்கு அத்தனை நல்ல பெயர் இல்லை. எதிர்க்கட்சியை இம்முறை திரும்ப நம்புவதற்கான நியாயமான காரணங்களும் ஏதுமில்லை. கூட்டணிக் காய்கள் தீவிரமாக நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்படுவதாகவும் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தினமொரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. எண்ணி ஒரே மாதம். இவரா அவரா ஆட்டத்தின் இறுதிக்கட்டம் வந்துவிடப்போகிறது. இந்தச் சூழ்நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் இலக்கியமா இல்லையா என்று அரதப் பழசான குடுமிப்பிடியைத் திரும்ப தூசு தட்டச் சொல்லி நண்பர்கள் நெருக்குகிறார்கள். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், எத்தனை விவாதங்கள், விமரிசனங்கள், விளக்கங்கள் தரப்பட்டிருந்தாலும் உலகில் தீராத சந்தேகங்கள் சில எப்போதும் இருக்கும். இது அதிலொன்று போலிருக்கிறது. நல்லது. கொஞ்சம் பேசிப்பார்க்கலாம் – திரும்பவும்.

எது இலக்கியம்?

*    அனுபவங்களின் அடிப்படையில் படைக்கப்படுவது
*    ஜோடனையற்றது. மேல் பூச்சுகள் இல்லாதது
*    தன் காலத்தைப் பிரதிபலிக்கக்கூடியது
*    வாசகனை சக படைப்பாளியாக ஏற்று அவன் பங்களிப்பைப் பெரிதும் கோருவது
*    சத்தமில்லாதது. பிரசாரமற்றது
*    நீதி சொல்லாதது
*    கதாசிரியன் குறுக்கே வரமாட்டான். பாத்திரங்கள் மட்டுமே வாழும்.
*    வாசிக்கும்போது வினாக்களையும் முடித்ததும் மாபெரும் பரவசத்தையும் ஒருங்கே தரக்கூடியது
*    திரும்பத் திரும்ப எடுக்கும்போதெல்லாம் புதிய புதிய தரிசனங்கள் தரக்கூடியது
*    பிராந்திய, தேசிய, சர்வ தேசிய எல்லைகளைக் கடந்து மனித குலத்துக்கே பொதுவான விஷயங்களை மட்டும் பேசுவது
*    என்றும் வாழ்வது.

இவ்வாறு இதுகாறும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. விமரிசகர்கள் தத்தம் தேவைகளுக்கேற்ப, அவ்வப்போது இதில் வெட்டியும் சேர்த்தும் சட்டத்திருத்தம் பண்ணிக்கொள்வார்கள். அது அனுமதிக்கப்பட்டது.

கல்கி வெகுஜன எழுத்தாளர். இன்னும் தெளிவாகச் சொல்லுவதென்றால் அவர் ஒரு கமர்ஷியல் எழுத்தாளர். கேளிக்கை என்கிற ஓரம்சம்தான் அவர் எழுத்தில் பிரதானம். தவிரவும் பிரசாரத் தொனி அதிகம் கொண்ட எழுத்து அவருடையது. லட்சியவாதப் பாத்திரப் படைப்புகள், மிகை நாடகத்தன்மை, குறுக்கே புகுந்து அவர் பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார்; போதனைகள் இருக்கும், ஏ மனிதனே என்னும் குரல் அடியில் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் – என்பன போன்றவை அவரது எழுத்து மீதான எதிர்த்தரப்புக் குற்றச்சாட்டுகளாக எப்போதும் இருப்பவை. தவிரவும் சரித்திரப் புனைகதைகளெல்லாம் இலக்கிய அந்தஸ்து பெறாது என்றும் சொல்லப்படும். சரித்திரம் என்பது மன்னர்களின் கதையல்ல; மக்களைப் பற்றிப் பேசாத சரித்திரம் எப்படி ஒரு சரித்திரமாகும்?

பிரபஞ்சன் மானுடம் வெல்லும் எழுதியபோது அதன் முன்னுரையில் ‘தமிழில் சரித்திர நாவல் இல்லாத குறை என்னால் தீர்ந்தது’ என்றே பிரகடனம் செய்தார். ரொம்ப சரி. சரித்திரம் என்பது மக்களுடையதுதான். சந்தேகமில்லை. மைனாரிடிகளுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்கி மன்னர்களைத் தம் கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பார். ஒழியட்டும். ஆனால் அவர் என்ன ஜெகஜ்ஜால ராஜாக்களின் ஜிலுஜிலு வாழ்க்கையையா விவரித்தார்?

அதைப் பார்க்கவேண்டுமல்லவா?

பொன்னியின் செல்வன் என்னும் அவருடைய கதை, ஆட்சியில் உள்ளோரைச் சுற்றி உள்ள பெரிய அதிகாரிகளின் உள் அரசியல் திருவிளையாடல்களைப் பற்றியே பெரிதும் பேசுகிறது. ஆட்சி மாற்றம் அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு. அதிலுள்ள பிரச்னைகள். ஆதரிப்போர் யார்? எதிர்ப்போர் யார்? ஆதரிக்கும் நபர்களை ஒருங்கிணைக்கும் பணி எப்படிப்பட்டது? அதில் வரக்கூடிய சிக்கல்கள் என்ன? ஒரு ரகசியம் எனப்படுவது எப்படி மெல்லக் கசிந்து வெளியே வருகிறது? அரசியலில் பெண்களின் பங்கு. அது முக்கியமானது. தவிரவும் அபாயங்கள் மிக்கது. அதனாலேயே அழகானது. நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்குமான இடைவிடாத மோதல் என்பது உலகு தொடங்கிய நாளாக இருந்துவருவது. அது ஓர் ஆட்சியை பாதிக்கும் விதம் எப்படியாக இருக்க முடியும்? ஆட்சியாளர்களின் அந்தரங்க விஷயங்கள் எப்படி அரசை பாதிக்கின்றன? மக்கள் எப்படி ஒரு நிலைபாடு எடுக்கிறார்கள்?

இதைத்தான் பேசுகிறது பொன்னியின் செல்வன். இம்மாபெரும் கதையின் நாயகனான வந்தியத்தேவனுக்கு இரண்டாயிரத்து சொச்சப் பக்கங்களில் ஒரு காதல் காட்சி கூடக் கிடையாது. இத்தனைக்கும் அவன் பெண்களால் அதிகம் விரும்பப்படக்கூடியவன். பெரிய வீரன். ஆணழகனும்கூட. கதையின் இரண்டாவது நாயகனான அருள்மொழி வர்மன், எண்ணூறு பக்கங்களுக்குப் பிறகு அறிமுகமாகிறான். அதுவும் போர்க்களத்தில். கதையின் பெரும்பகுதியைப் போர்க்களத்திலேயே கழித்துவிட்டு நாடு திரும்பி, ஆட்சியதிகாரத்தை இன்னொருத்தனுக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டு திரும்பவும் போர்க்களம் போவதிலேயே குறியாக இருக்கிறான். அவனுக்காவது காதல் உண்டா என்றால் கிடையாது. இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களிடம் இல்லாத காதல், கதையில் ஒரு கிழவனுக்குக் கொடுக்கப்படுகிறது. தள்ளாத வயதில் இளம் பெண்ணொருத்தியைக் காதலித்து மணந்துகொள்கிற பழுவேட்டரையர். அவருக்காவது காதல் களியாட்டங்கள் உண்டா என்றால் சனியன், அதுவும் கிடையாது. நந்தினியாகப்பட்டவள் பழிவாங்கும் எண்ணத்துடன் வந்திருப்பவள். எப்பப்பார் விரதம் அது இது என்று அளந்துவிட்டு, கிழவனார் தம் பக்கத்தில்கூட வரமுடியாதபடி செய்துவிடுகிறவள். வெறும் பேச்சிலேயே காதல் உணர்வை அவருக்கு அளித்து அதிலேயே திருப்தியடையச் செய்துவிடக்கூடிய சாமர்த்தியசாலி.

ஆயிரக்கணக்கான பக்கங்கள் நீளும் கதையில் ஒரு மார்க்கச்சை உண்டா, சப்ரமஞ்சம் உண்டா, இடுப்பின் நெளிவு சுளிவுகளில் தீர்த்த யாத்திரைதான் உண்டா? ஒரு எழவும் கிடையாது. கல்கி கழுத்துக்குக் கீழே எந்தப் பெண்ணையும் வருணிக்காத எழுத்தாளர். அவரால் அதிகபட்சம் ஆனது சுரங்க நடைபாதைகளையும் இருட்சிறைகளையும் கோட்டை கொத்தளங்களையும் இயற்கை வளம் மிக்க பிராந்தியங்களையும் ஏரிகளையும் குளங்களையும் புத்தர் சிலைகளையும் சிற்ப சாகசங்களையும் வருணிப்பதுதான். கதாநாயகர்கள் காதல் காட்சிகளில் ஈடுபடாவிட்டாலும் இது ஒரு கமர்ஷியல் கதைதான் என்றால் அவ்வண்ணமே ஆகுக. பலான பலான வருணனைகள் இல்லாது போனாலும் இது ஒரு பைங்கிளிக் காவியமே என்பீர்களானால் அதற்கும் ஒரு ஆமென்.

0

பொன்னியின் செல்வனில் சோழ வம்சத்தைச் சேர்ந்த சுந்தர சோழர் காலத்துக் கதை கூறப்படுகிறது. சரித்திரத்தை அணுவளவும் மாற்றாமல் கதையைக் கட்டியிருக்கிறார் கல்கி. இதனால்தான் கதாபாத்திரங்கள் திடீர் பல்டியடிப்பது கதையோட்டத்தைப் பின்பகுதியில் கெடுக்கிறது. ராஜ்ஜியமே வேண்டாம் என்று முதலிலிருந்து சொல்லிவரும் அருள்மொழி வர்மன், திடீரென்று பதவியேற்கிறேன் என்று சொல்வது ஓர் உதாரணம். தடாலென்று பதவியேற்பு தினத்தன்று அவன் கிரீடத்தை மதுராந்தகன் தலையில் வைத்து ட்விஸ்ட் கொடுப்பது இன்னொரு உதாரணம். இந்த இரண்டுமே சரித்திரத்தில் அப்படியே நடந்தவை. ஆதாரங்கள் உள்ளன. [கல்கியே அந்த ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார்.] ஆதித்த கரிகாலனை யார் கொன்றது என்பதற்குக் கதையில் பதில் இல்லாததன் காரணம், சரித்திரத்தில் அக்கேள்வி இன்னும் கேள்வியாகவே இருப்பதுதான். கதைக்காக கல்கி புதிய தீர்வுகளை ஓரிடத்திலும் அளிக்கவில்லை.

சோழ குலத்துக்கு உதவிய வாணர் குல வந்தியத்தேவனும், சோழ குலத்தை அழிக்கப் புறப்பட்ட வீரபாண்டியனின் ஆபத்துதவிப் படையும் அதன் ராணி நந்தினியும் [நந்தினி கிடையாது. எழுத்து வேகத்தில் வந்துவிட்டது.] ஒரு குட்டி இளவரசனும் கடம்பூர் சம்புவரையரும் மழவரையரும் பார்த்திபேந்திரப் பல்லவனும் மற்றவர்களும் இன்னமும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் அப்படியப்படியே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். எதுவும் புனைவல்ல. யாரும் புனையப்பட்டவர்கள் அல்லர்.

இந்தப் பாத்திரங்கள் எப்படிப் பேசியிருக்கலாம், எப்படி நடந்திருக்கலாம், எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று கற்பனை செய்தது மட்டுமே கல்கியின் பணியாக இருந்திருக்கிறது. காஞ்சியிலிருந்து தஞ்சைக்கு, பழையாறையிலிருந்து இலங்கைக்கு, இலங்கையிலிருந்து தஞ்சைக்கு என மூன்று பயணம் மேற்கொள்ளும் வந்தியத்தேவன் இடையில் எதிர்கொள்ளும் அனுபவங்கள் புனையப்பட்டவை. ஒரு புனை பயண அனுபவங்களின் ஊடாக ஒரு பேரரசின் சரித்திரத்தைச் சொல்வதுதான் பொன்னியின் செல்வனின் கட்டமைப்பு.

கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். நம்மில் எத்தனைபேர் பள்ளி, கல்லூரிகளில் சரித்திரப் பாடங்களை ஆழ்ந்து கவனித்திருக்கிறோம்? காரணம், அவை எதுவும் பொன்னியின் செல்வனைப் போல் சுவாரசியமாக எழுதப்படவில்லை என்பதுதான். சுவாரசிய வாசிப்புக்கான சந்தர்ப்பங்கள் மிகுந்த ஒரு சரித்திரத்தில் கவனமாக அதை மட்டும் விலக்கி வைத்துவிட்டு சக்கைகளைத் தொகுத்து அளிக்கிறது நமது பாடத்திட்டம்.

மிகச் சரி. எனில், பொன்னியின் செல்வனை ஒரு நல்ல கல்வி நூல் என்று சொல்லிவிடலாமே? என்றால், கல்வி நூலில் புனைவுக்கு இடமில்லை. எனவே சுவாரசியத்துக்கும் இடமில்லை. தமிழர்களுக்கு சரித்திரத்தின்பால் ஆர்வம் ஏற்பட கல்கியின் எழுத்துகள் மிக முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மன்னர்களின் சரித்திரத்தை எழுதியதுதான் அவர் செய்த பாவம் என்றால் அவர் ஒரு பாவியாகவே இருந்துவிட்டுப் போவதில் ஒரு பிரச்னையும் இல்லை. ஒரு காலக்கட்டத்தின் அரசு அமைப்பு, நிர்வாக முறை, ஆட்சியாளர்களின் மனோபாவம், சட்டதிட்டங்கள், அரசியல் உட்பகை, அண்டை நாடுகளுடன் உறவு அல்லது பகை, அந்தக் காலக்கட்டத்து ராஜதந்திரங்கள் போன்றவற்றை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேறு என்ன வழி உள்ளது?

எதற்கு சரித்திரம் என்று கேட்பீர்களானால் பேச்சே கிடையாது. எதற்கு இலக்கியம் என்றேகூடக் கேட்டுவிடலாம்.

இவற்றைக் கல்கி புனைந்து அளித்திருப்பாரேயானால் இந்தளவு இந்தக் கதை காலம் கடந்து வந்திருக்க வாய்ப்பில்லை. சரித்திரத்தை ஜோடிக்காமல் அப்படியே கலையாக்கியிருப்பதுதான் அவரது எழுத்தின் வெற்றி. அவரளவு மற்ற சரித்திரக்கதை எழுத்தாளர்கள் நிலைக்காதிருப்பதற்கும் இதுவே காரணம். ஒரு வரி சரித்திரத்தை எடுத்துக்கொண்டு ஆயிரம் பக்கத்துக்கு இழுக்கும் பணியல்ல, கல்கி மேற்கொண்டது. ஜேஜே சில குறிப்புகளில் ஒரு வரி வரும்.  ‘கோட்டாறில் ஒரு சண்டை நடந்ததாமே? அது பற்றி வாகான ஒரு சங்கப்பாடல், அல்லது பாடலில் ஒரு வரி கிடைத்தால் போதும். ஒரு பிடி பிடித்தால் ஆயிரம் பக்கங்களுக்கு இழுத்துவிடுவேன்’ என்பார் சரித்திரக் கதைச் செம்மல் திருச்சூர் கோபாலன் நாயர். சுரா கல்கியை நினைத்தேகூட இந்த வரியை எழுதியிருக்கலாம். ஆனால் பொன்னியின் செல்வனைப் பொருத்தவரை, ஒரு வரியல்ல; ஓர் அரச தலைமுறையின் அசல் வாழ்க்கையை அப்படியே எடுத்துக்கொண்டு, காட்சிப்படுத்தலுக்காகப் புனைவின் உத்திகளைக் கையாண்டு எழுதப்பட்டதுதான் அது.

0

இனி இது இலக்கியமா இல்லையா என்று பார்க்கலாம். திரும்பவும் அதே கேள்வி. எது இலக்கியம்?

*    அனுபவங்களின் அடிப்படையில் படைக்கப்படுவது – ஆசிரியருக்கு இதில் நேரடி அனுபவமில்லை. ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான்..
*    ஜோடனையற்றது. மேல் பூச்சுகள் இல்லாதது – ஜோடனை கிடையாது. மேல் பூச்சுகள் உண்டு.
*    தன் காலத்தைப் பிரதிபலிக்கக்கூடியது – எடுத்துக் கொண்ட காலத்தைப் பிரதிபலிக்கிறது.
*    வாசகனை சக படைப்பாளியாக ஏற்று அவன் பங்களிப்பைப் பெரிதும் கோருவது – இது கிடையாது. சைபர்.
*    சத்தமில்லாதது. பிரசாரமற்றது – இதுவும் சைபர். கல்கியில் கொஞ்சம் சத்தம் அதிகம்.
*    நீதி சொல்லாதது – ஒரு நீதியும் கிடையாது.
*    கதாசிரியன் குறுக்கே வரமாட்டான். பாத்திரங்கள் மட்டுமே வாழும். – வாய்ப்பே இல்லை. கல்கி கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரம்
*    வாசிக்கும்போது வினாக்களையும் முடித்ததும் மாபெரும் பரவசத்தையும் ஒருங்கே தரக்கூடியது – ஆம். அது உண்டு.
*    திரும்பத் திரும்ப எடுக்கும்போதெல்லாம் புதிய புதிய தரிசனங்கள் தரக்கூடியது – வாய்ப்பில்லை.
*    பிராந்திய, தேசிய, சர்வ தேசிய எல்லைகளைக் கடந்து மனித குலத்துக்கே பொதுவான விஷயங்களை மட்டும் பேசுவது – மனித குலமல்ல; அரச குலம் இதில்.
*    என்றும் வாழ்வது. – இன்றுவரை வாழ்கிறது.

ஆக பதினொன்றுக்கு ஏழு மார்க்.

ஆனால் பதினொன்றுக்குப் பதினொன்றும் வாங்கிய கதைகளெல்லாம் இருக்கின்றன. அவற்றில் எத்தனை காலம் கடந்து நிற்கின்றன? கல்கி ஏன் நிற்கிறார்? நீங்கள் திட்டுவதற்கும் உங்களுக்குக் கல்கிதான் தேவைப்படுகிறார், பாராட்டவும் அவர்தான் தேவைப்படுகிறார். இது எதனால்? மக்கள் ரசிப்பது ஒரு பொருட்டே இல்லை, கலை வேறு என்று டகால்டி காட்டுவது இங்கே உதவாது. எழுதி, பிரசுரமாகிவிட்டால் அது மக்களுக்கானதுதான். ஒரு படைப்பை உயர்ந்தது என்று நிறுவுவதற்காக மக்களை மூடர்கள் என்று சொல்வது சரியான அணுகுமுறையல்ல. இது தேர்தலில் தோற்கும்போதெல்லாம் கலைஞர் முரசொலியில் தமிழனின் சுரணையைக் கேள்விக்குள்ளாக்குவது போன்றது. உயர்ந்த படைப்புகளுக்கு சிபாரிசுகள் அநாவசியம். அவை தன்னால் வளரும், தன்னால் வாழும்.

இதே கல்கியின் சமூகக் கதைகளில் எது ஒன்றும் இந்தளவு உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறவில்லை, அவரது லட்சக்கணக்கான வாசகர்களிலேயே பெரும்பாலானவர்களால் நிராகரிக்கப்பட்டவை என்பதை நினைவுகூரவேண்டும். வெகுஜன வாசகர்களின் இயல்பு, அவர்கள் எந்த ஒரு படைப்பையும் நுணுக்கமாக அணுகி, சிறப்புகளைத் தனித்தனியே கவனித்து ரசிப்பதில்லை. மிக நேரடியாக மனத்தைத் தொடும் ஒரு படைப்பு அவர்களுக்கு முக்கியமானதாகிறது. அதன் உண்மைத்தன்மையின் சதவீதம் சொற்களற்ற வடிவில் அவர்கள் மனத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிகிறது. அது முக்கியமானதாகிறது. சந்தோஷம், துக்கம், பரவசம், புதிய தகவல்கள், தெரிந்த தகவல்களின் தெரியாத பரிமாணங்கள், புதிய கள அனுபவம், வாழ்க்கை முறை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றோ, எல்லாமோ முழுமையாக வழங்கப்பட்டிருந்தால், அது அவர்களுக்கு முக்கியமானதாகிறது. அனைத்துக்கும் மேலாக, தங்கள் மனம் வழங்கும் மதிப்பீடுகள், தீர்ப்புகளுடன் கதாசிரியன் வழங்கும் தீர்ப்பு ஒத்துப் போகுமானால், அது அவர்களுக்கு முக்கியமாகிறது. படைப்பை அவர்கள் வாழவைக்கிறார்கள்.

0

தமிழகத்தில் ஒரு மோசமான வியாதி பலகாலமாக இருக்கிறது. சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதுவதெல்லாம் அமர இலக்கியம், வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவோர் எழுத்து வியாபாரிகள், இலக்கியத்துக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அது.

வெகுஜனப் பத்திரிகைகளில் குப்பைகளுக்குப் பஞ்சமில்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே சமயம் நல்ல இலக்கியங்களும் வெகுஜன இதழ்களில் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.

பொன்னியின் செல்வனைப் பொருத்தவரை, எந்த முன்மாதிரிகளும் இல்லாத காலத்தில் ஒரு சரித்திரக்கதைக்கான வடிவத்தைத் தன்னியல்பாகத் தேடிக்கொண்டு எழுதப்பட்ட கதை அது. இலக்கியத்துக்கு ஒவ்வாத அம்சங்கள் பல அதில் இருந்தாலும் முற்றிலும் பொழுதுபோக்குக் கதை என்று ஒதுக்கிவிட முடியாத படைப்பு என்றே நான் கருதுகிறேன். அக்கதையின் மிகப் பலவீனமான பல அம்சங்களேகூட சரித்திரத்துக்கு நேர்மையாக இருக்க விழைந்ததன் காரணத்தால் உருவானதுதான்.  நீலகண்ட சாஸ்திரியிடம் போக முடியாதவர்கள் வெகு சுலபமாக கல்கியைப் படித்துவிட்டு சோழர்  கால ஆட்சிமுறை அடிப்படையை அறிந்துகொள்ள இயலும்.

ஆயிரம் இலக்கண வரையறைகள் வகுத்தாலும் காலம் கடந்து நிற்கும் ஒரு படைப்பே பேரிலக்கியமாக அடையாளம் காணப்படுகிறது. இந்தக் காலம் கடந்து நிற்பதென்பது முற்று முழுதாக வாசகர்களின் தீர்ப்பைச் சார்ந்தது. மக்கள் கண்ட குப்பைகளையும் அங்கீகரித்துவிடுவார்கள் என்பது விதண்டாவாதம். தாற்காலிக அங்கீகாரங்கள் ஒரு பொருட்டே அல்ல. தலைமுறை தோறும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு வருகிற ஒரு படைப்பு உண்மையில் ஓர் இலக்கியமே இல்ல, வெறும் கமர்ஷியல் குப்பை என்று சொல்வது ஆசிரியரையல்ல; வாசகர்களை அவமதிப்பதே அல்லாமல் வேறல்ல.

Share

58 comments

 • வரிக்கு வரி, கமாக்கு கமா, முற்றுப்புள்ளிக்கு முற்றுப்புள்ளி – உடன்படுகிறேன்.

  சண்டை ஆரம்பிச்சா சொல்லி அனுப்புங்க, திரும்பி வரேன்.

 • என்ன ஒரு மொழி லாகவம்! கடைசிவரை மூச்சைப் பிடித்துக்கொண்டு படித்தேன். பிரமாதம் பாரா!

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 • மாரியப்பன், மாரியப்பன், மாரியப்பன்

  எங்கிருந்தாலும் உடனே வருகை புரியவும்.

  ஜெமோ, சாருவின் புனைவுதான் இந்த மாரியப்பனா? 🙁 நேக்கு சந்தேகம்

  பாரா,

  புக் எப்போ ரிலீஸ், விளம்பரத்தை தொடங்கியாயிற்று போல ! 🙂

 • போன மாதம்தான் பொன்னியின் செல்வன் படித்தேன் ,(வெகு முன்பு சிவகாமியின் சபதம் , நன்றாக இருப்பதாக அப்போது தோன்றியது) போரடிக்கும் வர்ணனைகள் (கடைசிபாகம் கொடுமை ) எங்கெங்கோ சுற்றும் கதை , வந்தியதேவன் குந்தவையின் கணவன் என்ற ஒரு தகவலை வைத்து நாவல் முழுக்க வந்தியதேவனை முன்வைத்து கொண்டுபோகிறார் கல்கி ,

  கரிகாலனுக்கும் , பொன்னியின் செல்வனுக்கு இயல்பாக நடத்திருக்க கூடிய ஈகோ போட்டியை கேரக்டர்களின் இமேஜுக்காக மழுப்பிவிட்டார் , அவை முக்கியப்படுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தோன்றியது ,

  நந்தினி மட்டும் அட்டகாசமாக வந்திருந்தது , பெரிய பளுவேட்டரையரும் கூட,

  எனக்கு பொன்னியின் செல்வன் நல்ல பரப்பியல் நாவலாக தெரியவில்லை (சமீபமாக படித்த சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறமும் கூட போர் என தோன்றியது ) தமிழின் பெரும் நாவல்கள் பலவற்றை படித்த காரணமாக இருக்கலாம் ,

 • இந்தக் கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து வைக்க வேண்டும். விரிவான அலசலுக்கு எங்கெங்கெல்லாம் பயணிக்க வேண்டும் என்று பாடம் எடுக்கிறது கட்டுரை. நன்றி சார்!

  உங்கள் தலைமைப் பிக்குவே கொஞ்சம் முதுகைச் சுரண்டினார். இங்கே இந்தக் கட்டுரை முகத்தைப் பிராண்டுகிறது. உடனே பொன்னியின் செல்வனைக் கையில் எடுக்க வேண்டும், நான்காம் முறை படிக்க!

 • சரஸ்வதி உங்க பேனாவில் இருக்கா பா.ரா.. படித்து முடித்தவுடன் தான் சொக்கனின் பின்னூட்டம் பார்த்தேன். அதனுடன் அப்பிடியே ஒத்துப் போகிறேன். 🙂

  சொன்னா நம்ப மாட்டீங்க.. இந்த தளத்தில் உள்ள எல்லாப் பதிவையும் ஒரே நாள்ல படிச்சேன். (இப்போ இல்ல, கொஞ்ச நாள் முன்னாடி). பெரும்பாலான பதிவுகள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளன.

 • //நீலகண்ட சாஸ்திரியிடம் போக முடியாதவர்கள் வெகு சுலபமாக கல்கியைப் படித்துவிட்டு சோழர் கால ஆட்சிமுறை அடிப்படையை அறிந்துகொள்ள இயலும்.//

  என்னை தமிழ் திரும்பியும் படிக்க வைத்தவர் !!!

 • பொன்னியின் செல்வனும் இந்தப் பதிவும் ஒன்றுதான். ஆழங்களுக்குள் செல்வதில்லை.

 • /கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று //

  பொன்னியின் செல்வன் படித்து அதனால் ஈர்க்கப்பட்ட பலர் பொன்னியின் செல்வன் பேரவை என்ற அமைப்பு மூலம் இப்பொழுது பழைய கல்வெட்டுகளை ஆராய்ந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

 • பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சரித்திர நிகழ்வுகளை அதனுடன் ஒட்டி சில கற்பனை சம்பவங்கள் பாத்திரங்கள் கலந்து படைத்து இன்றளவும் வாசகர்களிடம் இளமையாக உள்ள பொன்னியின் செல்வனை இலக்கியம் இல்லை என்று சொல்பவர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள். அவர்களிடம் சொல்லி பயனில்லை.. அவர்களுடைய உறவினர்களிடம் சொல்லுகிறேன்.. இதோ பாருங்க உங்க ‍‍ இலக்கியமில்லை அது இதுனு தத்து பித்துனு பேசிகிட்டு இருக்காரு எதுக்கும் இந்த http://www.nimhans.kar.nic.in/ வெப்சைட்ல விபரம் பார்த்துட்டு அவரை அங்கே சேர்த்துடுங்க‌

  சிலருக்கு வரிந்து கட்டிக் கொண்டு நீதிபதியாகும் பழக்கம் உண்டு அவர்களை குறித்து

  http://mowlee.blogspot.com/2010/07/blog-post_29.html

  இங்கே பதிவு செய்திருக்கிறேன்.. மாரியப்பன் இந்த பதிவினை படித்து பயன் பெறுவாராக

 • பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சரித்திர நிகழ்வுகளை அதனுடன் ஒட்டி சில கற்பனை சம்பவங்கள் பாத்திரங்கள் கலந்து படைத்து இன்றளவும் வாசகர்களிடம் இளமையாக உள்ள பொன்னியின் செல்வனை இலக்கியம் இல்லை என்று சொல்பவர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள். அவர்களிடம் சொல்லி பயனில்லை.. அவர்களுடைய உறவினர்களிடம் சொல்லுகிறேன்.. இதோ பாருங்க உங்க ‍‍ இலக்கியமில்லை அது இதுனு தத்து பித்துனு பேசிகிட்டு இருக்காரு எதுக்கும் இந்த http://www.nimhans.kar.nic.in/ வெப்சைட்ல விபரம் பார்த்துட்டு அவரை அங்கே சேர்த்துடுங்க‌

  சிலருக்கு வரிந்து கட்டிக் கொண்டு நீதிபதியாகும் பழக்கம் உண்டு அவர்களை குறித்து

  http://mowlee.blogspot.com/2010/07/blog-post_29.html

  இங்கே பதிவு செய்திருக்கிறேன்.. மாரியப்பன் இந்த பதிவினை படித்து பயன் பெறுவாராக ok

 • ////நீலகண்ட சாஸ்திரியிடம் போக முடியாதவர்கள் வெகு சுலபமாக கல்கியைப் படித்துவிட்டு சோழர் கால ஆட்சிமுறை அடிப்படையை அறிந்துகொள்ள இயலும்//

  முழுக்க உண்மை.முதன் முதலில் நான் படித்த சரித்திரக்கதை பொன்னியின் செல்வன் தான்.அப்படியே ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்று கதாபாத்திரங்களை பக்கத்தில் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தி இருப்பார் கல்கி.வந்தியத்தேவனுக்கு இன்னமும் பலம் சேர்க்கின்ற காட்சிகள் இணைக்கப்படவில்லை என்பது என் எண்ணம்.இருப்பினும் வந்தியதேவனை விட அருண்மொழி வர்மரை வர்ணித்து அப்படியே கண்முன் கொண்டுவந்துவிடுவார்.ஆரம்பத்திலேயே கவனித்தால் சிறுவயதில் உள்ள வர்மருக்கு மனதில் உள்ளே பல குழப்பங்கள் நிலவுவதை முன்பே கோடிட்டு காட்டியிருப்பார்.யார் என்ன சொன்னாலும் சரி இவ்விசயத்தில் வாசகர் தீர்ப்பே இறுதியானது.உங்கள் அத்தனை ஆராய்ச்சிகளையும் மீறி என்றும் பொன்னியின் செல்வன் மனதில் நிறைந்தே இருக்கும்.
  தற்பொழுது அதனை மணிரத்னம் எடுக்கபோவதாக கேள்விபட்டேன்.பொன்னியின் செல்வன் மீது இருந்த இமேஜ் இவரால் கெடுக்கபட்டுவிடுமோ என்ற அச்சமே இருக்கின்றது.
  இப்பொழுது கூட நீங்கள் இவ்வளவு அலசினாலும் அதை திரும்ப எடுத்து படிக்க தூண்டுகிறதே அன்றி நீங்கள் எடுத்து வைத்த மைனஸ் மனதில் பதியவில்லை.அல்லது மனதில் பதித்து கொள்ள விரும்பவில்லை.

  //ஆயிரம் இலக்கண வரையறைகள் வகுத்தாலும் காலம் கடந்து நிற்கும் ஒரு படைப்பே பேரிலக்கியமாக அடையாளம் காணப்படுகிறது. இந்தக் காலம் கடந்து நிற்பதென்பது முற்று முழுதாக வாசகர்களின் தீர்ப்பைச் சார்ந்தது. மக்கள் கண்ட குப்பைகளையும் அங்கீகரித்துவிடுவார்கள் என்பது விதண்டாவாதம். தாற்காலிக அங்கீகாரங்கள் ஒரு பொருட்டே அல்ல. தலைமுறை தோறும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு வருகிற ஒரு படைப்பு உண்மையில் ஓர் இலக்கியமே இல்ல, வெறும் கமர்ஷியல் குப்பை என்று சொல்வது ஆசிரியரையல்ல; வாசகர்களை அவமதிப்பதே அல்லாமல் வேறல்ல.//

  நிச்சயம் வாசகர்களின் மனநிலையை பிரதிபலித்து இருக்கின்றீர்கள் .பாராட்டுக்கள் .குறுகிய வரிகளில் விளங்கச்சொல்வது சிலருக்கே கைவந்த கலை.உங்களுக்கும் அது இருக்கின்றது

 • Sorry about typing in English.

  1. I agree with the article 100% percent. Ponniyin Selvan is undoubtedly a literary treasure.

  2. Though I have read almost all your blog posts and some of your books, reading this article was a complete pleasure. Style of writing,content flow and the way your put forth your thoughts were simply beautiful.

 • திரு.பா.ராகவன் அவர்களுக்கு,

  பொன்னியின் செல்வனைப் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. வாசகர்களாகிய எங்களுக்கு இது ஒரு நல்ல திறவுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்ற அலசல்கள் மிக அவசியம் என்றே தோன்றுகிறது. மேலோட்டமான பதில்கள் யாரையும் யோசிக்க வைப்பதில்லை. நன்றாக இருக்கிறது என்றால் ஏன் நன்றாக இருக்கிறது. இல்லை என்றால் ஏன் இல்லை என்பதைச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் எங்களுக்கு. இது போன்ற பக்குவமான அணுகுமுறைகளை இன்றைய கல்விமுறை எங்களுக்குக் கற்பிப்பதில்லை. உணர்ச்சிவசப்படாமல் எதையும் அணுகுகின்ற போக்கு தமிழ்ச் சூழலில் உருவாக வேண்டும். எதையும் பொறுமையுடன் கேட்டு சரியா தவறா என்பதை அலச வேண்டும். தாங்கள் இதை நன்றாகவே உண்ர்ந்திருக்கிறீர்கள். தங்களை நோக்கும்போது நான் கற்றது தங்களது கால் தூசிக்குச் சமம்.

  இப்படிக்கு
  பா.மாரியப்பன்

 • 1940களில் எழுதப்பட்ட பிற பல கதைகளை படித்தால் அது 1940ல் எழுதப்பட்டு தெரியும்

  பொன்னியின் செல்வனில் அது தெரியாது

  அதுவே கல்கியின் பலம்

 • //தமிழகத்தில் ஒரு மோசமான வியாதி பலகாலமாக இருக்கிறது. சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதுவதெல்லாம் அமர இலக்கியம், வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவோர் எழுத்து வியாபாரிகள், இலக்கியத்துக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அது.

  வெகுஜனப் பத்திரிகைகளில் குப்பைகளுக்குப் பஞ்சமில்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே சமயம் நல்ல இலக்கியங்களும் வெகுஜன இதழ்களில் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.//

  வழிமொழிகிறேன்

  //ஆயிரம் இலக்கண வரையறைகள் வகுத்தாலும் காலம் கடந்து நிற்கும் ஒரு படைப்பே பேரிலக்கியமாக அடையாளம் காணப்படுகிறது. இந்தக் காலம் கடந்து நிற்பதென்பது முற்று முழுதாக வாசகர்களின் தீர்ப்பைச் சார்ந்தது. மக்கள் கண்ட குப்பைகளையும் அங்கீகரித்துவிடுவார்கள் என்பது விதண்டாவாதம். தாற்காலிக அங்கீகாரங்கள் ஒரு பொருட்டே அல்ல. தலைமுறை தோறும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு வருகிற ஒரு படைப்பு உண்மையில் ஓர் இலக்கியமே இல்ல, வெறும் கமர்ஷியல் குப்பை என்று சொல்வது ஆசிரியரையல்ல; வாசகர்களை அவமதிப்பதே அல்லாமல் வேறல்ல.//

 • //Chandramowleeswaran says://

  இவரை ரொம்பநாளா கவனிக்கிறேன் , 20 வருசத்துக்கு முன்னாடி எதை படிச்சாரோ அதை மட்டுமே சிறப்புன்னு புலம்பிக்கிட்டிருக்கார் , அதற்குபின் வந்த எதையும் படிக்கவேயில்லை அல்லது படிக்கும் அறிவை வளர்த்திகொள்ளவே இல்லை .

  அவரால் படிக்க முடியாதை நல்லது என்று சொன்னால் ,அல்லது அவர் படித்தது சுமார் என்று சொன்னால் அதிச்சியில் நெஞ்சடைத்து திட்ட தொடங்கிவிடுகிறார்.

 • அய்யா சந்திரமெளலீஸ்வரன் , கல்கி , சுஜாதாவிற்கு பின் நீங்கள் எதையாவது படித்ததுண்டா ?

  ஜெயமோகனை சுஜாதை விமர்சிக்கிறார் என திட்டலாம் , அதற்க்கு முன் குறைந்தது எஸ்ராவையாவது படியுங்கள் .

 • கிழக்கில் புக் எப்போ ரிலீஸ் னு சொல்லுங்க சார். சட்டு புட்டு னு வாங்கி இரண்டாவது முறை படிக்க தொடங்கனும்!!!!!!

 • //தலைமுறை தோறும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு வருகிற ஒரு படைப்பு உண்மையில் ஓர் இலக்கியமே இல்ல, வெறும் கமர்ஷியல் குப்பை என்று சொல்வது ஆசிரியரையல்ல; வாசகர்களை அவமதிப்பதே அல்லாமல் வேறல்ல.// Well said PARA sir.

 • ஆனால், அலை ஓசையின் முன்னுரையில் அலை ஓசை தான் தன் மனம் கவர்ந்த நாவல் என்று கல்கியே சொல்லி இருக்கிறாரே? அது ஒரு தேசியவாதியின் உள்ளார்ந்த மகிழ்ச்சியா?

 • //ஆயிரம் இலக்கண வரையறைகள் வகுத்தாலும் காலம் கடந்து நிற்கும் ஒரு படைப்பே பேரிலக்கியமாக அடையாளம் காணப்படுகிறது. இந்தக் காலம் கடந்து நிற்பதென்பது முற்று முழுதாக வாசகர்களின் தீர்ப்பைச் சார்ந்தது. மக்கள் கண்ட குப்பைகளையும் அங்கீகரித்துவிடுவார்கள் என்பது விதண்டாவாதம். தாற்காலிக அங்கீகாரங்கள் ஒரு பொருட்டே அல்ல. தலைமுறை தோறும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு வருகிற ஒரு படைப்பு உண்மையில் ஓர் இலக்கியமே இல்ல, வெறும் கமர்ஷியல் குப்பை என்று சொல்வது ஆசிரியரையல்ல; வாசகர்களை அவமதிப்பதே அல்லாமல் வேறல்ல.//

  நன்று நன்று !

  To Mariyappan:

  பா ரா வை காக்காய் பிடிக்கவேண்டுமென்றால் தனியாக பிடியுங்கள். சொல்ல வந்ததை தெளிவாக சொல்லாமல், தங்களை ஒரு நோய் கூறு மனநிலை(உபயம்: பத்ரி ) பிடித்து ஆட்டுகிறது.கண்டபடி உளறாமல் பதிவினை திரும்பவும் படிக்கவும்.
  -end-

  யாராவது விடயம் தெரிந்தவர்கள் இலக்கியம் மற்றும் பொ.செ குறித்து சண்டை போட்டால் நன்றாய் இருக்கும்.

 • டியர் பா.ரா.
  ஒரு முதுநிலை தமிழ் இலக்கிய பட்டப்படிப்பிற்கு பாடமாக வைக்கும் அளவிற்கு உன்னத தரம் வாய்ந்த கட்டுரை.ஆனால் இதற்கு உங்களுக்கு நன்றி சொல்லப்போவதில்லை.என் நன்றிக்கு உரியவர் திரு மாரியப்பன்.அவர் மட்டும் இந்த சர்ச்சையை தொடங்கி இராவிட்டால் நீங்கள் இதை எழுதியிருக்க மாட்டீர்கள்.
  நன்றி திரு.மாரியப்பன்
  நமஸ்கரிக்கிறேன் பா.ரா.

 • லோகம் அவர்களுக்கு,
  திரு.பாராவைக் காக்காப் பிடிப்பதால் எனக்கு என்னய்யா ஆதாயம்? கண்டபடி உளறினேன் என்கிறீர்கள்? விளக்கம் தேவை.

 • இந்த தொடர் இடுகைகள், பொன்னியின் செல்வனை மக்கள் மறுபடி படிக்க தூண்டும் முயற்சியா ??

 • // ஆக பதினொன்றுக்கு ஏழு மார்க்.//

  என்ன‌தான் இருந்தாலும்
  ந‌மீதா போல‌ மார்க் போட‌முடியுமா? 🙂

 • பொன்னியின் செல்வன் – கதை மட்டுமல்ல அக்காலத்தில் தமிழரின் வாழ்கை எவ்வாறு இருந்தன என்பதை கண் முன் நிறுத்தியவர் நம் கல்கி

 • இந்த வருட பொ.செ. படிப்பு கோட்டா – 15 நாளுக்கு முன்னாலதான் முடித்தேன். மறுபடியும் படிக்க வெச்சுருவீஙக போலிருக்கே….
  -ஜெகன்

 • Dear Para,

  Cant agree more.

  But I still feel that Sivakamiyin Sapatham is better than Ponniyin Selvan.
  I dont know why but I like Mahendra Pallavar and Paranjothi more than Vandiyathevan and Ponniyin Selvan.

  Arun

 • சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதுவதெல்லாம் அமர இலக்கியம், வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவோர் எழுத்து வியாபாரிகள், இலக்கியத்துக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அது.///

  நீங்கள் கல்கியில் இருந்ததால், எவ்வளவு நல்ல கதைகள் எல்லாம் வாசிக்கும் வாய்ப்பு பெற்றிருப்பீர்கள் என்பதை அறிய முடிகிறது. ஜனரஞ்சக பத்திரிகையில் இலக்கியம் சார்ந்த கதைகளை கல்கி தந்தது என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியுமா.

 • அன்பின் அநிருத்தன்

  என்னை ரொம்ப நாளாக கவனித்து வரும் உங்கள் அன்பை பாராட்டுகிறேன்.

  என்னைக் கவனிப்பது என்றால் எனது வலைப்பூவை நீங்கள் கவனிக்கின்றீர்கள் என நியாயமாக அர்த்தம் செய்து கொள்கிறேன்

  எனது விருந்தினராக சில மணி நேரங்கள் என் இல்லத்திற்கு உங்களை அழைக்கிறேன். அது எனது இல்லத்தில் உள்ள எனது சொந்த நூலகத்தினை நீங்கள் பார்வையிடவும் என்ன மாதிரி புத்தகங்கள் படிக்கிறேன் எத்தனை வருடமாகப் படிக்கிறேன் என நீங்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.. என்னைக் குறித்த் உங்கள் கவனிப்பு அறைகுறையாக இல்லாமல் பூரணமாக ஒரு வாய்ப்பு

  எனது வலைப்பூவில் எனது மொபைல் நம்பர் தந்துள்ளேன். அதில் என்னைத் தொடர்பு கொண்டால் எனது முகவரி தருகிறேன். நீங்கள் உங்கள் மொபைல் நம்பர் தந்தாலும் நான் உங்களுக்கு போன் செய்கிறேன். நேரில் வந்து உங்களை என் இல்லத்துக்கு அழைத்து வருகிறேன். நீங்கள் நாகர்கோவிலிருந்தாலும் சரி அல்லது காஷ்மீரில் இருந்தாலும் சரி.. உங்களை சந்திக்க ஆசை வாய்ப்பு தாருங்கள்

 • அன்பின் அநிருத்தன்

  என்னை ரொம்ப நாளாக கவனித்து வரும் உங்கள் அன்பை பாராட்டுகிறேன்.

  என்னைக் கவனிப்பது என்றால் எனது வலைப்பூவை நீங்கள் கவனிக்கின்றீர்கள் என நியாயமாக அர்த்தம் செய்து கொள்கிறேன்

  எனது விருந்தினராக சில மணி நேரங்கள் என் இல்லத்திற்கு உங்களை அழைக்கிறேன். அது எனது இல்லத்தில் உள்ள எனது சொந்த நூலகத்தினை நீங்கள் பார்வையிடவும் என்ன மாதிரி புத்தகங்கள் படிக்கிறேன் எத்தனை வருடமாகப் படிக்கிறேன் என நீங்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.. என்னைக் குறித்த் உங்கள் கவனிப்பு அறைகுறையாக இல்லாமல் பூரணமாக ஒரு வாய்ப்பு சரியா

  எனது வலைப்பூவில் எனது மொபைல் நம்பர் தந்துள்ளேன். அதில் என்னைத் தொடர்பு கொண்டால் எனது முகவரி தருகிறேன். நீங்கள் உங்கள் மொபைல் நம்பர் தந்தாலும் நான் உங்களுக்கு போன் செய்கிறேன். நேரில் வந்து உங்களை என் இல்லத்துக்கு அழைத்து வருகிறேன். நீங்கள் நாகர்கோவிலிருந்தாலும் சரி அல்லது காஷ்மீரில் இருந்தாலும் சரி.. உங்களை சந்திக்க ஆசை வாய்ப்பு தாருங்கள்

 • அன்பின் அநிருத்தன்,

  உங்களிடமிருந்து போன் காலை எதிர்பார்க்கிறேன்.. அல்லது ஒரு எஸ்.எம்.எஸ்; அல்லது ஒரு மெயில்.
  கல்கி சுஜாதா இவர்கள் தவிர யார் யாரை சந்திரமௌளீஸ்வரன் விஸ்வநாதன் எனும் பாஸ்போர்ட் பெயர் கொண்ட ( சொல்லாடல் உபயம்; திரு. பா.ரா அவர்கள்) நான் படிக்கிறேன் என நீங்கள் தெரிந்து கொண்டால், நான் இதையெல்லாம் படிக்கவேயில்லை.. படிக்கும் அறிவை வளர்த்துக் கொள்ளவேயில்லை எனும் ஜட்ஜ்மெண்ட் ஸ்டேட்மெண்ட்கள் உதிர்க்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் என் இல்லம் வரும் போது உங்களுடன் எந்த சப்ஜெக்டில் விவாதிக்கலாம் என சொன்னீர்கள் என்றால் அந்த சப்ஜெக்டில் விவாதிக்க நான் தயார்.

  எனக்கு என் பெயரை சொல்லி , தொடர்பு எண்ணைச் சொல்லி, தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளும் தைரியம் இருக்கிறது ; நாகரீகம் இருக்கிறது. பொறுமை இருக்கிறது., கண்ணியம் இருக்கிறது.

  உங்களுக்கும் இருக்கும் என நினைக்கின்றேன்.

  இருந்தால் தொடர்பு கொள்க

  நீங்கள் தொடர்பு கொள்ளவில்லை எனில் , “நீங்கள் வெறும் சவடால் பேர்வழி என நினைத்துக் கொள்கிறேன்”

  தீர்ந்தது விஷயம்

 • அன்புள்ள பாரா

  உங்கள் எழுத்தின் பிரவாஹத்தில் மூழ்கி திக்குமுக்காடிப்போனேன் நண்பரே,என்ன ஒரு லாவஹம், ,மொழி ஆளுமை .Hats off Para, keep writing -mate.

  ராஜு-dubai

 • திரு பா.ரா அவர்களுக்கு
  உங்கள் இந்த விமர்சனம் என்னை வெகுவாக கவர்கிறது . உங்களின் பார்வை வாசகனையும் கணக்கில் கொண்டிருப்பது சிறப்பு . நீங்கள் சொன்னது போல ஆசிரியரை அல்லாமல் வாசகனை அவமான படுத்தும் நோக்கில் செய்யப்படும் விமர்சனம் நிறைய மலிந்து கிடக்கத்தான் செய்கிறது. பொன்னியின் செல்வன் நிறைய பேருக்கு இலக்கியத்தில் நுழைய பெரும் வாசலாக இருந்திருக்கிறது .
  நன்றிகள்
  பா.சதீஷ்

 • பாரா,

  ஒரு பெரியா தீஸிஸ்க்கு ஸ்கோப் இருக்கும் விவாதம். சற்றே மேலோட்டமென்றாலும் அதிக அகலத்தால் அட்டகாசாமாக வந்திருக்கிறது. ரசிக்கிறேன்.

  நன்றி,
  யுவா, பெங்களூர்.

 • There are novels which are sequen and prequel to ponniyin selvan. NO doubut ponniyin selvan is a amara kaviyam thaan
  Yours
  Dr L kailasam

 • சமீபத்தில் தான் மீண்டும் ஒரு முறை படித்தேன். மஹாபாரதம், ராமாயணம், சிவகாமியின் சபதம் ஆகியவைகளுக்கு அடுத்தபடியாக நான் அதிக முறை படித்த, பிடித்த கதை. நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். கலை, இலக்கியம் என்பதையெல்லாம் தாண்டி, மக்களுக்குப் பிடித்த, காலங்கள் கடந்து நிற்கும் படைப்பு.

  மணிரத்னத்தை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது.

 • Forget about the literary factor of Ponniyin Selvan, start worrying about the “Cinematic effect” of Manirathnam……The man has a good sense for making movies, not sure about his literary sense. Keeping my fingers crossed….

 • பா.மா. வேறு யாருடையவாவது ஆல்டர் ஈகோ வா?

  ஆள் அடையாளமே இல்லை. !? # டவுட்டு.

  மற்றபடி அழகான ஒரு கட்டுரைக்கு நன்றி.. கல்கியில் எழத ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து உங்களைப் படித்துக் கொண்டிருந்தாலும் இது போன்ற மயக்கு நடை நீங்கள் பதிப்பாசிரியர் அவதாரம் எடுத்ததிலிருந்துதான் கைப்பட்டிருக்கிறது என்பது எனது ஊகம்…

  நீங்களும் உடையார் மாதிரி ஏதாவது முயற்சியில் இருக்கிறீர்களா?!?

 • //வரிக்கு வரி, கமாக்கு கமா, முற்றுப்புள்ளிக்கு முற்றுப்புள்ளி – உடன்படுகிறேன்.//

  Me 2…

 • மாரியப்பனின் எழுத்தை புரியாமல் சிலர் உளறி இருக்கின்றனர். மாரியப்பன், தன் மனதில் பட்டதை தைரியமாக கூறி, அது சம்மந்தப்பட்ட பாராவின் கட்டுரைக்கும் நன்றி சொல்லும் அளவிற்கு மன முதிர்ச்சி பெற்றவராக இருக்கிறார். இந்த ஒரு முழுமை நிறைய வாசகர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேலை இதுதான் பெரும்பான்மையான தமிழரின் குணாதிசயமோ!. பாரா மிக கவனமாக இருக்க வேண்டும். உயிரோடு உள்ளே வைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து விடுவார்கள்! ஜாக்கிரதை!.

 • தங்கள் கட்டுரையை முதன் முதல் படிக்கும் வாய்ப்பு தற்போதுதான் அமைந்தது. தங்கள் தமிழாளுமை அருமையாக உள்ளது.
  பொ.செல்வனை தேடிக்கொண்டு இருக்கிறேன்!

 • தமிழர்களுக்கு சரித்திரத்தின்பால் ஆர்வம் ஏற்பட கல்கியின் எழுத்துகள் மிக முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது…. +1

 • Hi all, any one answer me these questions.
  1. Who kill Karikalan?
  (Nandhini or Ravidhasan)
  What is the secret of karikalan’s death?
  2. What is the secret Nandhini’s birth?
  3. What is the relation between Nandhini and Kundavai devi?
  4. What is the relation between Nandhini and Veera Pandian?

  Please answer my questions.
  Please send me the answers to my email:
  johnpandian.t@gmail.com

  please send me the answers.
  I need it quickly.

  My comment about kalki-ponniyin selvan.
  I dislike(but i like it) this novel.
  Because at the end he forget the hero vandhiya devan.
  He must finish the novel after vandhiya devan-kundavai devi’s marrige.
  And he didnot tell what happened for nandhini?

  Please reply my post to johnpandian.t@gmail.com

 • Hi all, any one answer me these questions.
  1. Who kill Karikalan?
  (Nandhini or Ravidhasan)
  What is the secret of karikalan’s death?
  2. What is the secret Nandhini’s birth?
  3. What is the relation between Nandhini and Kundavai devi?
  4. What is the relation between Nandhini and Veera Pandian?
  5. Who is the parents of old maduranthaka devar?
  Please answer my questions.
  Please send me the answers to my email:
  johnpandian.t@gmail.com

  please send me the answers.
  I need it quickly.

  My comment about kalki-ponniyin selvan.
  I dislike(but i like it) this novel.
  Because at the end he forget the hero vandhiya devan.
  He must finish the novel after vandhiya devan-kundavai devi’s marrige.
  And he didnot tell what happened for nandhini?

  Please reply my post to johnpandian.t@gmail.com

 • “ஜேஜே சில குறிப்புகளில் ஒரு வரி வரும். ‘கோட்டாறில் ஒரு சண்டை நடந்ததாமே? அது பற்றி வாகான ஒரு சங்கப்பாடல், அல்லது பாடலில் ஒரு வரி கிடைத்தால் போதும். ஒரு பிடி பிடித்தால் ஆயிரம் பக்கங்களுக்கு இழுத்துவிடுவேன்’ என்பார் சரித்திரக் கதைச் செம்மல் திருச்சூர் கோபாலன் நாயர். சுரா கல்கியை நினைத்தேகூட இந்த வரியை எழுதியிருக்கலாம்.”

  அன்பு பாரா, கல்கிக்கு கிடைத்த (நேரடி) உதை இதுவல்லவா ?

  “சிவகாமியம்மாள் தனது சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா ?”

  இன்னமும் சில கேள்விகள் இருப்பினும், இடம் சுட்டி பொருள் விளக்கம் தரும் அளவு விரிவான அலசலுக்கு நன்றி.

  அன்புடன்
  முத்து

 • Your list:

  அனுபவங்களின் அடிப்படையில் படைக்கப்படுவது
  * ஜோடனையற்றது. மேல் பூச்சுகள் இல்லாதது
  * தன் காலத்தைப் பிரதிபலிக்கக்கூடியது
  * வாசகனை சக படைப்பாளியாக ஏற்று அவன் பங்களிப்பைப் பெரிதும் கோருவது
  * சத்தமில்லாதது. பிரசாரமற்றது
  * நீதி சொல்லாதது
  * கதாசிரியன் குறுக்கே வரமாட்டான். பாத்திரங்கள் மட்டுமே வாழும்.
  * வாசிக்கும்போது வினாக்களையும் முடித்ததும் மாபெரும் பரவசத்தையும் ஒருங்கே தரக்கூடியது
  * திரும்பத் திரும்ப எடுக்கும்போதெல்லாம் புதிய புதிய தரிசனங்கள் தரக்கூடியது
  * பிராந்திய, தேசிய, சர்வ தேசிய எல்லைகளைக் கடந்து மனித குலத்துக்கே பொதுவான விஷயங்களை மட்டும் பேசுவது
  * என்றும் வாழ்வது.

  Question is:

  Which came first: the list or the novel?

  Because no writer shd begin to write a book – which will be considered as claasic by the readers – conscious of your list and attempting to realise the points in ur list.

  The novel came first. And, if it becomes a classic, the lit critics start to search for the traits which have made the book into a classic.

  Again, another novelists just dont care for the traits and begin new. Because, lit cant be made to order, like birthday cakes.

  A book can still be written and become a classic, wherein the lit critic will be amazed to see none of the traits found in his list, is found in this boom. So, defying the norms or traist, a book can be classic.

  Better allow the writer his freedom. Lit shd remain an unchartered territory where the writers are freely explore and come out with novelites to surprise us.

  I hav not read PS. When I do, I will respond to ur post on PS.

 • You may kindly replace my earlier mge with the following. Hav rewritten with spell check:

  The Question is this: Which came first: the list ? or the novel?
  Because no writer should begin to write a novel – which will be later on considered as a classic by readers – conscious of your list and attempt to realise the acclaimed traits in his novel.

  The novel came first. If it becomes a classic, only then the lit critics flock to it, like water birds to water bodies, with a view to search for those traits that could make the novel a classicc.
  Still, another novelist just does not care for all the traits and will begin from nowhere and end in discovering his treasure successfully namely, a good classical novel. Literature cannot be made to order, like birthday cakes.

  A novel can be written and become a classic, little worrying about ur list of traits, and the lit critic is amazed to see none of the approved traits is found in this novel. So, defying the norms or traits, a book becomes a classic.

  Better allow the writer his freedom. Lit should remain always an unchartered territory where the writer venture freely like a child to explore and come out with his serependitious discoveries.
  Generally, lit critics are hated as wreckers of literature by writers !

  I hav not read PS. When I do, I will respond to ur post on PS.

 • பெரும்பான்மையானோர் பொன்னியின் செல்வனின் நாயகனாக “வந்தியதேவனையே” பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் அருள்மொழிவர்மனே நாயகன். கல்கியின் முதல்பத்தி வர்ணனை நம்மை மயக்கம் கொள்ள செய்து வந்தியதேவனையே நாயகனாக நினைக்க வைத்துவிடுகிறது. முதல் அத்தியாத்தில் வந்தியத்தேவனை வர்ணிக்கும் போதெல்லாம் என்னை வ.தே வனாகவே பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. இது அனைவருக்கும்தான்!!

 • நல்ல கதை. நந்தினிக்கு யார் அப்பா ?நந்தினிக்கு யார் புருஷன்? கடைசி வரை தெளிவே இல்லை

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter