நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பின் கதைச் சுருக்கம்’ மறு பதிப்பு ஜீரோ டிகிரியில் வெளியாகியுள்ளது. நாவல்களைப் பற்றிய கட்டுரைகளெல்லாம் வாரப் பத்திரிகையில் வெளியாகுமென்று யாரும் கற்பனைகூடச் செய்ய முடியாத காலக் கட்டத்தில் இக்கட்டுரைகள் கல்கியில் வெளியாயின. (வருடம் மறந்துவிட்டது. குறைந்தது 20 ஆண்டுகளுக்கு முன்னர்.) அப்போது நான் மிகவும் ரசித்த, ஏதோ வகையில் என்னை பாதித்த நாவல்களைக் குறித்தும் அந்த நாவல்கள் உருவான சூழ்நிலை / பின்னணி குறித்தும் இந்தக் கட்டுரைகள் பேசும்.
இன்று #writeRoom வலைத்தளத்தில் இந்தப் புத்தகத்தில் இருந்து ஒரு கட்டுரையைத் தந்திருக்கிறேன். நாவல் எழுத விரும்பும் புதியவர்களுக்கு உதவும். நண்பர்கள் அதையும் வாசிக்கலாம்.