என்னுடைய அரசியல் புத்தகங்களில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இதுதான். இரண்டு காரணங்கள். அதிகம் பரிச்சயமில்லாத தேசங்களின் அரசியலை / பெரும் பிரச்னைகளை மிகக் குறைவான சொற்களில் புரிய வைக்க வேண்டும் என்று எனக்கு நானே விதித்துக்கொண்டு, எந்தக் கட்டுரையும் 500 சொற்களுக்கு மிகாதவாறு பார்த்துக்கொண்டேன். சுருக்கம் தருகிற வேகத்துக்கு நிகரே கிடையாது.
இரண்டாவது காரணம், இந்தப் புத்தகம் பேசும் பிரச்னைகள் எந்தத் தலைமுறை படித்தாலும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இன்றும் எம்.ஏ அரசியல் படிக்கும் மாணவர்கள் இதனைச் சமகால அரசியல் நிகழ்வுகளுடன் வியந்து ஒப்பிட்டு அடிக்கடி ஏதாவது எழுதுவார்கள். படிக்க, மகிழ்ச்சியாக இருக்கும்.
ஓர் இடைவெளிக்குப் பிறகு கலவர காலக் குறிப்புகளின் மறு பதிப்பு ஜீரோ டிகிரியில் வெளியாகியிருக்கிறது. ஆர்வமுள்ள புதிய வாசகர்களை வாசித்து விவாதிக்க வரவேற்கிறேன். தள்ளுபடி விலையில் முன்பதிவு செய்ய ஜீரோ டிகிரியின் இணையத்தள லிங்க் இங்கே உள்ளது.