தீபாவளியை முன்னிட்டு ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அனைத்துப் புத்தகங்களுக்கும் பதினைந்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமீபத்திய நாவல் மிருது, பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு உள்ளிட்ட, அச்சில் உள்ள 81 புத்தகங்களையும் பார்வையிட்டு வாங்குவதற்குக் கீழே உள்ள சுட்டியைப் பயன்படுத்துக. ஜீரோ டிகிரியில் பாராவின் புத்தகங்கள் வாசக நண்பர்களுக்கு மனமார்ந்த தீப...
எதற்கு இந்தப் புத்தகம்?
நீ வேறு, நான் வேறு: பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு பாலஸ்தீனத்து முஸ்லிம்கள் வேறு, இஸ்ரேலிய யூதர்கள் வேறு. அப்படித்தான் பலூசிஸ்தானில் வசிக்கும் பலூச்சிகள் வேறு, பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம்கள் வேறு. 1948 ஆம் ஆண்டிலிருந்து பாலஸ்தீனத்து முஸ்லிம்களுக்குச் சிக்கல் தொடங்கியது. இன்றுவரை அது தொடர்கிறது. அதே ஆண்டுதான் பலூசிஸ்தான் மக்களுக்கும் பிரச்னை ஆரம்பித்தது. இன்னும் ஓயவில்லை. அங்கே நடக்கும்...
பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு – புதிய புத்தகம்
1948 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் பலூசிஸ்தானின் விடுதலைப் போராட்ட வரலாறு மிக நீண்டது; தீவிரமும் தகிப்பும் கொண்டது. கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. விரிவான ஆய்வுக்குப் பிறகு மெட்ராஸ் பேப்பர் வார இதழின் தினசரிப் பகுதியில் இதனைத் தொடராக எழுதினேன்.
மிருது – புதிய நாவல்
சலத்தின் உக்கிரம், ஆக்ரோஷம், தகிப்பு அனைத்திலிருந்தும் முற்றிலும் விலகி, தொட்ட இடமெல்லாம் வருடித்தரும் விதமாக இதனை எழுதினேன்.
யதி – பிரியதர்சினி கோபால்
வாழ்க்கையைப்பற்றிய, உறவுகளைப்பற்றிய ஒரு குழப்ப நிலையில் நான் இருக்கும் போது ஓரிரு வருடமாக என் கையில் இருந்தும் இந்த புத்தகத்தை இப்போது ஏன் வாசிக்க வேண்டும்? அது தான் விதி.
Yathi – A review: Jinapriya AjithaDoss
The scary part comes in last parts. The actual plot. The plot leaves the reader so unsettled. I had to read thrice the last 500 pages to understand the way the knots are unknotted.
சலம்: ஒரு மதிப்புரை – கதிரவன் ரத்தினவேல்
சமீபத்தில் கூட ஒருவர் வால்கா முதல் கங்கை வரை புதினத்தை புளுகென்று திட்டிக் கொண்டிருந்தார். ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது அவரது வாதம். அவரெல்லாம் சலம் படிக்க வாய்ப்பேயில்லை என நினைத்து ஆறுதல் கொள்கிறேன்.
வாசன் மலர்
உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம் ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப் புத்தகத்தினும் சிறப்பானது, வீரியம் மிக்கது. வாசன் என்ற ஆளுமையை நேரில் கண்டு பழகியவர்களின் அனுபவங்கள்தாம். ஆனால் எதுவுமே வெறும் துதிக் கட்டுரைகள் அல்ல.
சலுகை வாரம்
உலகுக்கெல்லாம் புத்தக தினக் கொண்டாட்டம் ஒரு நாள் என்றால் என் பதிப்பாளர்கள் இம்மாத இறுதி வரை (ஏப்ரல் 30) அனைத்துப் புத்தகங்களுக்கும் இருபத்தைந்து சதவீதச் சலுகை அறிவித்திருக்கிறார்கள். இது என் புத்தகங்களுக்கு மட்டுமல்ல. ஜீரோ டிகிரி வெளியிட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் என்றாலும் நமது வாசகர்களுக்குத் தனியே எடுத்துச் சொல்வது கடமை அல்லவா? நேற்று வெளியான சலம் தொடங்கி, ஜீரோ டிகிரி இதுவரை...
இடமும் இருப்பிடமும்
எழுதுவதுடன் என் பணி முடிந்தது என்று பலர் இருக்கலாம். என்னால் அது முடியாது. எழுதுகிற ஒவ்வொரு புத்தகமும் தனது இறுதி வாசகனின் கரங்கள் வரை சிதறாமல் சென்று சேர வேண்டும் என்று நினைப்பேன். அது குறித்த பதற்றம் எப்போதும் இருக்கும். அதனாலேயே புத்தகப் பதிப்பை ஒரு பக்கவாட்டுத் தொழிலாகக் கொள்ளும் பத்திரிகைகளின் பதிப்பகங்களைக் கண்டு அஞ்சுகிறேன்.
காணாமல் போன காதல் டைரி
வீட்டுக்கு வந்ததும் என் வசம் உள்ள, வையவன் அனுப்பிய பிரதியைத் தேடத் தொடங்கினேன். நெடுநேரம் தேடியும் கிடைத்தபாடில்லை. அப்படி எங்கே வைத்துத் தொலைத்திருப்பேன் என்று தெரியவில்லை. புத்தகங்களின் எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் இருந்த வரை எந்தப் புத்தகத்தையும் சட்டென்று எடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது வைக்க இடமில்லாமல் என் அறையே ஒரு வில்லன் கொடோன் போலாகிவிட்டது.
யதி – ஒரு மதிப்புரை
என்றோ எழுதிய நாவல் என்றும் படிக்கப்படுவதினும் நம்பிக்கை தருவது வேறில்லை. செயல் சரியாக இருந்தால் விளைவு சரியாகவே இருக்கும்.
அபத்தங்களின் அபிநயம் – சி. சரவணகார்த்திகேயன்
துறைசார் அனுபவங்களில் புனைவேற்றி நாவல் எழுதும் வழக்கம் உலக இலக்கியத்தில் ஏற்கெனவே உண்டுதான். தமிழிலும் விவசாயம் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை பல துறை சார்ந்து நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ‘ஜந்து’ நாவல் அவ்வகைமையில் முக்கியமான உதாரணமாக நிற்கும். நானறிந்து பாராவுக்கு நான்கு துறைகளில் நிறைய அனுபவம் இருக்கிறது. ஒன்று பத்திரிகை, அடுத்து பதிப்பகம், அப்புறம் தொலைக்காட்சி நெடுந்தொடர், சமீப காலமாக...
ஜென் கொலை வழக்கு – புதிய புத்தகம்
நுண் கதைகள், குறுங்கதைகள், மைக்ரோ கதைகள் என்று பலவாறாக இன்றைக்குக்குறிப்பிடப்படும் மிகச் சிறிய கதை வடிவங்களின் தொடக்கம் ஜென் கதைகள், பஞ்சதந்திரக்கதைகள், ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகள் இயற்றப்பட்ட காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது. இந்த ஜென் கொலை வழக்கு என்னும் நவீன நாசகார ஜென் கதைகள், ஜென்கதை வடிவத்தைப் புறத் தோற்றமாகக் கொண்டு எழுதப்பட்ட நுண் கதைகளே. மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல்...
ஜந்து – புதிய நாவல்
பத்திரிகை உலகம் – பத்திரிகையாளர்களின் வீர சாகசங்கள் அல்லது துயர வாழ்க்கை சார்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் வார இதழ் உலகையே கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் முதல் நாவல் ஜந்துதான். ஆனால் இந்நாவலின் தனித்துவம் அதுவல்ல. இதன் களம் ஒரு தமிழ்ப் பத்திரிகை அலுவலகமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும், இது பேசும் உண்மைகள் உலகப் பொதுவானவை...
விமலாதித்த மாமல்லன் புத்தகங்கள் – மாணவர் சலுகை அறிவிப்பு
இலக்கியத்தில் ஆர்வமுள்ள / புத்தகம் வாங்க வசதியற்ற மாணவ மாணவியர் (அல்லது அவர்கள் சார்பாக அவர்தம் பெற்றோர்) மாமல்லனை வாட்சப்பில் தொடர்புகொண்டால் போதும்.
இந்த வருடம் இரண்டு புத்தகங்கள்
2023 ஆம் ஆண்டுக்கென ஐந்து திட்டங்களை வகுத்திருந்தேன். மார்ச் தொடங்கி அக்டோபருக்குள் நிறைவு செய்துவிட வசதியாக அன்றாடம் என்னென்ன / எவ்வளவு எழுத வேண்டும், எப்போது என்னென்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் மிகவும் கவனமாகக் கணக்கிட்டு திட்ட கமிஷன் துணைத் தலைவரைப் போலச் செயல்பட்டேன். இயல்பாகவே ரிஷப ராசி என்பதனாலா, சனிதசை கேது புக்தி என்கிற தனிச் சிறப்புக் காரணத்தாலா என்று தெரியவில்லை. நான் போட்ட ஐந்து...
யுத்த காண்டம்
வினுலா என்னிடம் எழுதக் கற்றுக்கொள்வதற்காக வந்தார். வகுப்புக் காலத்தில் அவர் எதையும் பேசிக் கேட்டதில்லை. ஒன்றிரண்டு அசைன்மெண்டுகளைத் திருப்தியாகச் செய்ததால் மெட்ராஸ் பேப்பரில் எழுதச் சொன்னேன். ஒன்றிரண்டுதான் அதிலும் எழுதியிருப்பார். அந்தச் சமயத்தில் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியது. மற்ற அனைத்தையும் மறந்து, அதைக் கவனிக்கச் சொல்லிவிட்டு வேறு வேலைகளில் மூழ்கிவிட்டேன். ஒரு சரியான...
நுட்பம்
மெட்ராஸ் பேப்பரில் இதனை முதலில் ஒரு கேடகரி தலைப்பாகத்தான் வைத்தேன். எந்த நுட்பமும் எளியோருக்கானதே என்கிற என் நிலைபாட்டிலிருந்து சற்றும் விலகாமல் வெங்கட் இந்தப் பகுதியில் எழுத ஆரம்பித்த சில வாரங்களிலேயே இந்தத் தலைப்பு அவரது கட்டுரைகளின் அடையாளமாகிப் போனது. மொபைல் போனும் கம்ப்யூட்டரும்தான் சப்ஜெக்ட். இதில் கம்ப்யூட்டரை அறியாத சிலர் இருக்கலாம். ஆனால் மொபைல் இல்லாதவர்கள் யாருமில்லை என்ற நிலை...
நல்லவனுக்கு எதற்கு இன்காக்னிடோ?
என்னுடைய எழுத்து வகுப்புகளுக்கு வருவோரில் சிலர் வரும்போதே அடிப்படை எழுத்துத் திறமையுடன் வருவார்கள். மிகச் சிறிய பிசிறுகளை மட்டும் சரி செய்தால் போதும் என்று தோன்றும். மிகச் சிலருக்கு அதுவும்கூட அவசியமாக இராது. பள்ளி நாள்களில் ஒழுங்காக இலக்கணம் கற்று , நிறைய புத்தகங்களும் படித்து, இங்கொன்றும் அங்கொன்றுமாக எழுதிப் பார்த்து, தனக்கு எவ்வளவு எழுத வருகிறது, இன்னும் என்ன வேண்டும் என்ற தெளிவான இலக்குடன்...


