அன்புள்ள ராகவன் சார், இது நான் உங்களுக்கு எழுதும் முதல் மெயில். சாருவுடன் பலமுறை பேசியிருக்கிறேன். அவரிலிருந்து தான் நான் வாசிக்கவே தொடங்கினேன். இந்திய ஞான மரபு, சித்தர்கள் குறித்து ஓரளவு வாசித்துக்கொண்டிருந்தேன். நிறைய அபுனைவுகள், எனக்கு அவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவமோ பொறுமையோ இல்லை என்பதை வரிக்கு வரி நிரூபித்துக் கொண்டிருந்த வேளையில், எதேச்சையாக உங்கள் ‘யதி’ சலுகை விலையில்...
யதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்
அன்பு பா.ரா. சற்றுமுன் யதி நாவலை வாசித்துமுடித்தேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. சமீபகாலத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த நூல் இது. அலைதலும் அறிதலும் அமர்தலும் என்று சுற்றிபின்னப்பட்ட நடையில் மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தியது இந்த நாவலின் நடை. இந்த நாவல் அமைக்கப்பட்ட முறையும் மிக வித்தியாசமான முறையில் இருந்தது. நமது மரபின் ஞானத்தை எளிய முறையில் அதில் பரிட்சியம் இல்லாதவர்களுக்கும்...
யதி: ஒரு மதிப்புரை – இரா. அரவிந்த்
சிறு வயதிலிருந்தே நாம் ஆச்சரியமாகவும் புதிராகவும் காண்பது துறவிகளை அல்லது சாமியார்களை. கடவுளிடம் அதீத பக்தி கொள்ளுதல், பெரும் பொருளியல் இழப்பை சந்தித்தல், காதல் தோல்வி அடைதல், குடும்பக் கஷ்டங்களைத் தாங்க முடியாமை போன்றவை துறவைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுவான காரணங்களாகச் சொல்லப்படுகிறது. யாராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாத நம் அக ஓட்டம், மேற்சொன்ன காரணங்களுக்கு அப்பாலும், பல்வகை காரணிகளால்...
யதி: இருபது பார்வைகள்
நண்பர்களுக்கு வணக்கம். யதி வெளியானபோது அதற்கு மதிப்புரை எழுதிய இருபது வாசகர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மின்நூலாக வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தேன். விலையற்ற மின்நூலாக வெளியிட வழியுண்டா என்று போராடிப் பார்த்ததிலேயே நாள்கள் ஓடிவிட்டன. இன்றுவரை அதற்கான வாய்ப்பு டைரக்ட் பப்ளிஷிங் முறையில் வெளியிடுவதில் இல்லை. இப்படி வெளியிடுவதைத் தவிர எழுத்தாளர்களுக்கு இங்கு வேறு வழியும் இல்லை...
கிண்டிலில் யதி
கிண்டில் பதிப்புகள் திருட்டுக்கு உட்படாது என்று சொல்லப்பட்டது. அது இல்லை என்று சில தொழில்நுட்பத் திருடர்கள் நிரூபித்ததைச் சமீபத்தில் கண்டறிந்தேன். கணி யுகத்தில் சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை என்பதை அறிவேன். இருப்பினும் உயிரைக் கொடுத்து எழுதிய ஒரு பிரதியை சர்வ சுலபமாகக் கள்வர்கள் கொண்டு செல்ல எடுத்து வெளியே வைக்க விருப்பமில்லை. என்னால் முடிந்த மிக எளிய சில பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் செய்து...
அலமாரி இதழ் பேட்டி
அலமாரி, ஜனவரி 2019 இதழில் வெளியாகியுள்ள எனது பேட்டி: ஏன் திடீரென்று புனைவின் பக்கம் ஒதுங்கிவிட்டீர்கள்? எழுத ஆரம்பித்தது முதல் இன்றுவரை புனைவு மட்டுமே என் ஆர்வமாக இருக்கிறது. ராவ் குமுதத்தின் ஆசிரியராக இருந்தபோது முதல் முதலில் பாகிஸ்தானின் அரசியல் வரலாறை எழுதச் சொல்லி என்னை அந்தப் பக்கம் இழுத்துவிட்டார். அந்தத் தொடரின் எதிர்பாராத பெரும் வெற்றி, அடுத்தப் பத்தாண்டுகளுக்கு என்னை அரசியல் வரலாறுகளையே...
யதி வெளியீடு
புத்தகக் கண்காட்சியின் தொடக்க நாளான இன்று, யதி வெளியிடப்பட்டது. நண்பர் எஸ்.ரா. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பினாக்கிள் புக்ஸின் முதன்மை நிர்வாகி ஆர்விஎஸ்ஸிடம் இருந்து முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். எனக்காக வருகை தந்த எழுத்தாளர்கள் லஷ்மி சரவணகுமார், வாசு முருகவேல், காஞ்சி ரகுராம், நண்பர்கள் ஆர். பார்த்தசாரதி, ஹரன் பிரசன்னா, சேகர், கணேஷ் வெங்கடரமணன், பால கணேஷ், கவிஞர்...
பினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா
யதி நாவலை வெளியிடும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ஆர்ட் செண்டரில் நடைபெறவிருக்கிறது. நாகூர் ரூமி, சுதாகர் கஸ்தூரி, ஹாலாஸ்யன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன். வாய்ப்புள்ளோர் வருக. பினாக்கிள் வெளியீடுகள் அரங்கில் 20 சதத் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.