புத்தகக் காட்சியை முன்னிட்டு சன் டிவி வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் ஒரு பேட்டிக்கு அழைத்திருந்தார்கள். நேற்று (பிப்ரவரி 23) ஒளிபரப்பான அந்நிகழ்ச்சி இன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. கீழே அதனைக் காணலாம்.
விருட்சம் பேட்டி
விருட்சம் 112வது இதழில் (மார்ச் 2020) வெளியாகியுள்ள எனது பேட்டி இது. அழகியசிங்கர் யதி வாசித்து முடித்ததன் விளைவு எனக் கொள்ளலாம். எழுத வேண்டுமென்று எப்போது தோன்றியது? அந்தச் சமயத்தில் உங்கள் வயதென்ன? ஆறாம் வகுப்பில் இருந்தபோது குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் சிறுவர் பாடல்களால் ஈர்க்கப்பட்டு எழுத ஆரம்பித்தேன். அவரது சந்தங்களை அடியொற்றியே எழுதினேன். அவரே அவற்றை கோகுலத்திலும் பிரசுரம்...
அலமாரி இதழ் பேட்டி
அலமாரி, ஜனவரி 2019 இதழில் வெளியாகியுள்ள எனது பேட்டி: ஏன் திடீரென்று புனைவின் பக்கம் ஒதுங்கிவிட்டீர்கள்? எழுத ஆரம்பித்தது முதல் இன்றுவரை புனைவு மட்டுமே என் ஆர்வமாக இருக்கிறது. ராவ் குமுதத்தின் ஆசிரியராக இருந்தபோது முதல் முதலில் பாகிஸ்தானின் அரசியல் வரலாறை எழுதச் சொல்லி என்னை அந்தப் பக்கம் இழுத்துவிட்டார். அந்தத் தொடரின் எதிர்பாராத பெரும் வெற்றி, அடுத்தப் பத்தாண்டுகளுக்கு என்னை அரசியல் வரலாறுகளையே...