சலத்தின் தீவிரத்தில் இருந்து விடுபட எனக்குள்ள ஒரே வழி, உக்கிரம் இல்லாத, மிருதுவான வேறொன்றை எழுதிக் கடப்பதுதான். எனவே, அடுத்த நாவல் ‘மிருது’வைத் தொடங்குகிறேன்.
சலம் – முகப்பு வெளியீடு
சலத்தின் முகப்பை நேற்று மாலை (மார்ச் 17) பதிப்பாளர் ராம்ஜி வெளியிட்டார். நாவல் என்பதாலும் அளவில் பெரிது என்பதால் விலை கூடும் என்பதாலும் முன்பதிவுச் சலுகை அறிவிக்கப்பட இருக்கிறது.
சலம் எதைப் பற்றிய நாவல்?
ரிக்வேதத்தில் சூத்திர குலத்தில் உதித்த கவசன் என்கிற ரிஷியின் பாடல் ஒன்று உண்டு. பல்லாயிரம் பாடல்களைக் (அல்லது மந்திரங்களை) கொண்ட வேதத்தில் பிராமணரல்லாத ஒரே ஒரு ரிஷியின் பாடல் என்றால், அதுதான்.
யதி – ஒரு மதிப்புரை
என்றோ எழுதிய நாவல் என்றும் படிக்கப்படுவதினும் நம்பிக்கை தருவது வேறில்லை. செயல் சரியாக இருந்தால் விளைவு சரியாகவே இருக்கும்.
சலம் – எடிட்டிங்
சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக்க வேண்டிய காரணங்களை அடித்தளமாக அமைத்துக் கொண்டு இதனை எழுதினேன்.
அலகிலா விளையாட்டு – சில நினைவுகள்
இன்று காலை ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாகக் கேட்டார். நீங்கள் எழுதியவற்றுள் உங்கள் மனத்துக்கு மிகவும் நெருக்கமான ஒரு நாவல் என்றால் எதனைச் சொல்வீர்கள்? இறவான் அல்லது யதியைச் சொல்வேன் என்று அவர் எதிர்பார்த்தார். உண்மையில் இந்தக் கணம் நினைத்துப் பார்க்கும்போதும் எனக்கு மிகவும் நெருக்கமானதென்று அலகிலா விளையாட்டைத்தான் சொல்லத் தோன்றுகிறது. ஒரு துறவி ஆகிவிட வேண்டும் என்ற வேட்கையுடன்...
நாவல் எழுதச் சில குறிப்புகள்
முன் எப்போதோ எழுதி வைத்த குறிப்புகள். என் மதிப்புக்குரிய எழுத்தாளர்கள் நேரில் சொன்னவை அல்லது கடிதம் மூலம் எனக்கு எழுதியவை. இன்று புதிதாக எழுத வரும் யாருக்காவது உதவலாம் என்பதால் வெளியிடுகிறேன். இதில் எதுவும் என் கருத்தல்ல. அனைத்துமே எனக்கு அளிக்கப்பட்டவை. 1. சுட்டிக்காட்டப் புதிதாக ஒரு வாழ்க்கை உன் வசம் இருந்தாலொழிய நாவல் எழுத எண்ணாதே. நாவல் என்பது கதை அல்ல. 2. அத்தியாயம் என்றல்ல; அடுத்த வரியைக்...
யதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N
அன்புள்ள ராகவன் சார், இது நான் உங்களுக்கு எழுதும் முதல் மெயில். சாருவுடன் பலமுறை பேசியிருக்கிறேன். அவரிலிருந்து தான் நான் வாசிக்கவே தொடங்கினேன். இந்திய ஞான மரபு, சித்தர்கள் குறித்து ஓரளவு வாசித்துக்கொண்டிருந்தேன். நிறைய அபுனைவுகள், எனக்கு அவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவமோ பொறுமையோ இல்லை என்பதை வரிக்கு வரி நிரூபித்துக் கொண்டிருந்த வேளையில், எதேச்சையாக உங்கள் ‘யதி’ சலுகை விலையில்...
இறவான்: ஒரு மதிப்புரை – கோடி
இதை எப்படி சொல்லுவது, எதைக்கொண்டு புரிய வைப்பது வார்த்தைகளால் புரிய வைக்க இது சாதாரண கதை இல்லை. அப்படியே புரிய வைக்க முயற்சித்தாலும் உலகத்தில் உள்ள அனைத்து போதை பொருட்களையும் கலந்த கலவையை உண்டவனின் வார்த்தை எப்படி புரியும்படியாக இருக்கும். ஆம், நான் இப்போது இமயத்தின் உச்சியில் அமர்ந்து இருக்கும் பறவையைப்போல போதையின் உச்சியில் “ஆப்ரஹாம் ஹராரி”யின் இசையுடன் உலாவி கொண்டு இருக்கிறேன். இது...
விருட்சம் பேட்டி
விருட்சம் 112வது இதழில் (மார்ச் 2020) வெளியாகியுள்ள எனது பேட்டி இது. அழகியசிங்கர் யதி வாசித்து முடித்ததன் விளைவு எனக் கொள்ளலாம். எழுத வேண்டுமென்று எப்போது தோன்றியது? அந்தச் சமயத்தில் உங்கள் வயதென்ன? ஆறாம் வகுப்பில் இருந்தபோது குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் சிறுவர் பாடல்களால் ஈர்க்கப்பட்டு எழுத ஆரம்பித்தேன். அவரது சந்தங்களை அடியொற்றியே எழுதினேன். அவரே அவற்றை கோகுலத்திலும் பிரசுரம்...