புத்தாண்டு வாழ்த்துகள்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குட நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

[நன்றி: ஆண்டாள்]

10 thoughts on “புத்தாண்டு வாழ்த்துகள்”

 1. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ராகவன். புத்தகக் கண்காட்சியின் முக்குச் சந்தில் சிந்திப்போம்.

  🙂

 2. ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
  ஆயிரம் இருக்குது சுபதினம்
  அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
  ஆயுள் முழுவதும் சுபதினம்
  (நன்றி:கவியரசர்)

  உங்களுக்கு என் உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

 3. தமிழனாய்ப் பிறந்துவிட்டு ஹாப்பி நியூ இயர் என கதறிக்கொண்டே குடியும், சண்டையுமாய் பெரும்பாலோர்க்கு கழியப்போகும் இந் நாளில் ஹாப்பி நியூ இயர் என வாழ்த்த நேர்ந்த அபத்தத்தை நினைத்துக்கொண்டே வாழ்த்தும்..
  சரி, சரி, எலெக்‌ஷனுக்குள்ளையாவது தமிழ்ப் புத்தாண்டு இடம் மாறுமா? இல்லை சத்தமில்லாமல் மக்களே ஆள்பவர்கள் செய்த அபத்தத்தை மறக்கட்டும் என விட்டுவிடுவார்களா?

 4. பாரதி மணி

  எல்லா நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பாரதி மணி

 5. Ganpat,

  ‘ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி’ பாடலை எழுதியது கண்ணதாசன் அல்ல, வாலி என்று நினைக்கிறேன் – ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்டது, எப்படி உறுதி செய்வது என்று தெரியவில்லை!

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

Leave a Reply

Your email address will not be published.