தாத்தா சாஹேபுக்கு தாதா சாஹேப்

எனக்கு பாலசந்தர் படங்கள் பிடிக்காது என்று சொல்வது தீவிர சினிமா ரசிகர்களிடையே [இவர்கள் பெரும்பாலும் இலக்கியவாதிகளாகவும் இலக்கியவாதிகளாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் அங்ஙனம் காட்டிக்கொள்ள விரும்புவோராகவும் இருப்பார்கள்.] ஒரு ஃபேஷன். ஒன்றுக்கு இரண்டு முறை தனியே உட்கார்ந்து ரசித்துப் பார்த்துவிட்டுத்தான் இதை அவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அந்தப் பிரச்னை இல்லை. எனக்கு பாலசந்தர் படங்கள் பிடிக்கும். பாலசந்தரையும் தனிப்பட்ட முறையில் பிடிக்கும். 

கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம் முதலே அவரோடு பரிச்சயம் உண்டு. அவர் ‘கல்கி’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தபோது, நெருங்கிப் பார்க்கவும், பழகவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கிழக்கு ஆரம்பித்தபோது திரைக்கதை நூல்கள் வெளியிடலாம் என்று நினைத்ததும் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது அவருடைய சிந்துபைரவிதான். எத்தனை அழகான படம்! அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது கிடைத்திருக்கும் இந்நேரத்தில் என் உளப்பூர்வமான மகிழ்ச்சியினை இதன்மூலம் வெளிப்படுத்துகிறேன். தாத்தா சாஹேபுக்குக் கிடைத்திருக்கும் இந்த தாதா சாஹேப் இதன்மூலம் தன்னை கௌரவித்துக்கொள்கிறது.

கே. பாலசந்தர், தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை. எப்படி தமிழ் எழுத்துலகில் ஜெயகாந்தன் ஒரு திருப்புமுனையோ அப்படி. அந்தக் காலக்கட்டத்தில் யாரும் எண்ணிப்பார்க்காத கதைகளை சுவாரசியமான படங்களாகத் தொடர்ந்து வழங்கி, தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். வசனங்கள் அவருடைய பலம். நடிப்பில் சற்று மிகையிருந்தால் தப்பில்லை என்பது அவர் ஃபார்முலா. நாடக வடிவத்தின் சற்றே மேம்பட்ட தரத்தில்தான் அவருடைய படங்கள் இருக்கும். காட்சி ஊடகத்தின் சகல சாத்தியங்களையும் அவர் பயன்படுத்தியதில்லை. ஒரு கதையை, அதன் விறுவிறுப்பு கெடாமல் தனது கருவியின்மூலம் வழங்குவது என்பதே அவருடைய சினிமாவாக இருந்திருக்கிறது. சரியாகச் சொல்லுவதென்றால் நாடக வடிவத்தில் இருந்து சினிமா வடிவத்துக்குக் கலை நகர்வதற்கான ஒரு பாலமாக அவருடைய படங்கள் இருந்திருக்கின்றன. இவ்வகையில் அவரது தொடர்ச்சியான, நீடித்த பங்களிப்பு [101 படங்கள் இதுவரை] முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஒரு படத்தில் இயக்குநர் இருக்கிறார் என்பதை முதல் முதலில் இங்கே வெளிப்படுத்தியவை, பாலசந்தரின் படங்கள்தாம். அவரது ‘டச்’கள் சிலாகிக்கப்பட்ட அளவுக்கு விமரிசிக்கவும்பட்டிருக்கின்றன. சிலர் ஸ்ரீதருக்கு இந்தப் பெயரை அளிக்க நினைக்கலாம். ஸ்ரீதரின் திரை மொழியிலிருந்து பாலசந்தரின் மொழி முற்றிலும் வேறுபட்டது. புராணப் புளியோதரைகளிலிருந்து சினிமாவைக் காப்பாற்றியவர் ஸ்ரீதர் என்பதற்குமேல் என்னால் மதிப்பிட முடியவில்லை. மக்களை புத்திசாலிகளாக மதித்துக் கதை சொல்லுவது என்பது பாலசந்தரிடமிருந்துதான் ஆரம்பித்தது. வர்த்தக சினிமாவின் எல்லைகளைப் புரிந்துகொண்டு, அந்த வட்டத்துக்குள் அவர் செய்துபார்த்த சில பரீட்சைகள் – பலசமயம் தோல்வி கண்டிருந்தாலும் – மிகவும் முக்கியமானவை. பரீட்சார்த்த வர்த்தக சினிமா என்றொரு இனம் இங்கே இன்று சுப்பிரமணியபுரம் வரை தழைத்திருப்பதன் தொடக்கப்புள்ளியாக நான் பாலசந்தரையே காண்கிறேன். அவரது பரீட்சைகள், வெறும் அதிர்ச்சி மதிப்புக்காகச் செய்யப்பட்டவை என்று சொல்வோருண்டு. நான் அப்படிக் கருதவில்லை. கதை என்பது வாழ்வைப் பிரதிபலிப்பது. வாழ்க்கையென்பது மனிதர்களுடையது. மனிதர்கள் என்போர் உணர்ச்சிகளின் கலவை. பல்வேறுதரப்பட்ட உணர்ச்சிகளின் மோதலைத்தான் ஆகப்பெரிய இலக்கியங்களும் திரைப்படங்களும் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றன. உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே எப்போதும் நடைபெறும் துவந்த யுத்தமே பெரும்பாலும் பாலசந்தர் படங்களின் கருக்களாகியிருக்கின்றன. இந்த யுத்தத்தில் அதிர்ச்சி தவிர்க்க முடியாதது. ஆனால், அது மட்டும்தான் நோக்கம் என்றிருந்தால் பாலசந்தர் பத்துப் படங்களுக்குமேல் தாக்குப் பிடித்திருக்க முடியாது. இன்றுவரை ஒரு ஏ செண்டர் டைரக்டராகவே அவர் அறியப்பட்டாலும், கடைக்கோடி கிராமத்து ரசிகனும் அவரது படங்களைப் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் விரும்பக்கூடியவனாக இருப்பதையும் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும்.

தனிப்பட்ட முறையில், தொண்ணூறுகளுக்குப் பின் வந்த பாலசந்தர் படங்கள் என்னைப் பெரிதாகக்  கவர்ந்ததில்லை. டூயட், பார்த்தாலே பரவசம் போன்ற படங்கள் எனக்கு மிகவும் ஏமாற்றமளித்தன. சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், புதுப்புது அர்த்தங்கள் வரை அவரைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்திருக்கிறேன். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை போன்ற சில படங்களை நூற்றுக்கணக்கான முறை பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். அநேகமாக அவருடைய எல்லா படங்களையுமே பார்த்தவன் நான். படு மட்டம் என்று யாராவது சொன்னால்கூட, நான் பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றுதான் பதில் சொல்வேன். தொண்ணூறுகளுக்குப் பிறகு மக்களின் ரசனை மாற்றத்தோடு ஒட்டிவர அவர் மிகுந்த பிரயத்தனப்பட்டு, முடியாமல் சோர்ந்து அமர்வது போன்ற ஒரு தோற்ற மயக்கக் காட்சி எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒரு சரியான முடிவெடுத்து அவர் தொலைக்காட்சித் தொடர்களை இயக்க ஆரம்பித்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். ரயில் சிநேகம் இன்றுவரை என்னால் மறக்கமுடியாத தொடர். பிரேமி சில அத்தியாயங்கள் பார்த்தேன். பணிச்சுமையால் நான் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பது அரிதாகி, எப்போதாவது அவரது சீரியலில் சில காட்சிகள் மட்டும் பார்க்க நேரிடும். மிக நிச்சயமாக அவை மற்ற எந்த சீரியல் காட்சியைவிடவும் நேர்த்தியாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தமிழ் வர்த்தக சினிமாவின் திரைக்கதை என்னும் கலையைப் பயில விரும்புகிறவர்களுக்கு பாலசந்தர் மற்றும் பாக்யராஜின் படங்களே மிக எளிய கோனார் நோட்ஸ் என்பது என் அபிப்பிராயம். மற்ற இயக்குநர்களின் படங்களை ரசிக்கலாம், விமரிசிக்கலாம், ஆராயலாம் என்னவும் செய்யலாம். ஆனால் அவற்றிலிருந்து கற்க முடியாது. ஓர் இயக்குநராகக் கோடம்பாக்கத்தில் மூன்று தலைமுறைகள் தாண்டியும் தாக்குப்பிடிக்கிறவர்கள் பாலசந்தரைத் தவிர வேறு யாருமில்லை.

இது கேபியை வாழ்த்தவேண்டிய தருணம். வஞ்சனையில்லாமல் அதனைச் செய்ய அனைவரையும் அழைக்கிறேன்.



Share

24 comments

  • //இவர்கள் பெரும்பாலும் இலக்கியவாதிகளாகவும் இலக்கியவாதிகளாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் அங்ஙனம் காட்டிக்கொள்ள விரும்புவோராகவும் இருப்பார்கள்.//

    இப்படிச் சொல்வார்கள் என்று சொல்லி தன்னை ஒரு இனமாகக் காட்டிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி முதலிலேயே சொல்லிவிடுவதன்மூலம், இதுபோன்ற உண்மையான ரசனையைச் சொல்ல வருபவர்களைக்கூட ஒரு சிமிழில் அடைக்கும் உத்தி இது.

    பாலசந்தர் படங்கள் எனக்குப் பிடித்ததில்லை. நல்ல படங்களை பாலசந்தர் எடுத்ததே இல்லை என்பது என் ரசனை சொல்லும் செய்தி. பாலசந்தரின் சாதனை, ஒரு படத்துக்கு கதையின் முக்கியத்துவத்தை விளக்கியது, கதையின் முக்கியத்துவமே போதும் என்று அதனை இன்னும் விளக்கியது. இந்த இரண்டுக்காக பாலசந்தரை பாராட்டவேண்டும்.

    பாலசந்தர்த்தனம் என்ற ஒன்றுக்குள்ளிருந்து அவரால் வெளிவரவே முடியவில்லை. முடியவும் முடியாது.

    இளம் வயதில் பாலசந்தர் படங்களைத் தேடி தேடிப் பார்த்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். பிறகு ஒட்டுமொத்தமாக வெறுத்துவிட்டேன். தாதா சாகேப் பாலசந்தருக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியே. வாழ்த்துகள்!

  • சுவாரசியத்துக்காக வலுவில் திணிக்கப்பட்ட காட்சிகள் இராது அதே சமயம் எடுக்கும் காட்சிகளையே சுவாரசியமாக எடுக்கத் தெரிந்தவர். பாராட்டுகள்

  • //இது கேபியை வாழ்த்தவேண்டிய தருணம். வஞ்சனையில்லாமல் அதனைச் செய்ய அனைவரையும் அழைக்கிறேன்.//

    மகிழ்ச்சி! மனமார வாழ்த்துகிறேன்!!

    தமிழ் சினிமாவின் திருப்புமுனை திரைப்படங்கள்
    என்று நான் கருதுவது:

    1.சந்திரலேகா
    2.பராசக்தி
    3.அந்தநாள்
    4.ஒளவையார்
    5.எதிர்பாராதது
    6.வீரபாண்டிய கட்டபொம்மன்
    7.கல்யாணபரிசு
    8.கப்பலோட்டிய தமிழன்
    9.நெஞ்சில் ஓர் ஆலயம்
    10.காதலிக்க நேரமில்லை
    11.புதியபறவை
    12.தில்லானா மோகனாம்பாள்
    13.பதினாறு வயதினிலே
    14.மகாநதி
    15.நான் கடவுள்
    16.அன்பேசிவம்
    17.அஞ்சாதே
    18.சுப்ரமணியபுரம்
    19.அபியும் நானும்

    The best of Bala:
    மேஜர் சந்திரகாந்த்
    இருகோடுகள்
    அவர்கள்

    என்னை பொருத்தவரை
    தமிழ்திரை ரசிகர்கள் நன்றிக்கடன் பட்டிருப்பது:

    எஸ்.எஸ்.வாசன்.
    ஏ.வி.மெய்யப்பன்
    ஏ.பி.நாகராஜன்
    ஸ்ரீதர்
    பாரதிராஜா
    பாலசந்தர்
    மகேந்திரன்
    கமல்ஹாசன்
    பிரகாஷ்ராஜ்
    ராதாமோகன்

  • உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.பாலசந்தருக்கு இந்த விருது முன்பே கிடைத்திருக்க வேண்டியது.இப்போது கிடைத்தது தாமதம்தான் என்றாலும் மகிழ்ச்சியே!!!

  • என் சினிமாக் கனவுகளுக்கு வித்திட்டவர் கே.பி. அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் போன்ற படங்கள் ஏற்படுத்திய பாதிப்பு எவராலும் மறுக்க முடியாது. ஜெயகாந்தனுக்குக் கிடைத்த ஞான பீட விருது போலத்தான் கே.பி.க்குக் கிடைத்த தாதா சாஹேப் பால்கே விருதும். மிகவும் தாமதம். ஆனாலும் ஒரு ரசிகனாக மிக்க மிகிழ்ச்சி.

  • //ராதாமோகன்//

    என்ன நடக்குது?

    //The best of Bala:
    மேஜர் சந்திரகாந்த்
    இருகோடுகள்
    அவர்கள்//

    எதிர் நீச்சல் – நாகேஷ் உருவான இடம் !

  • நான் உண்மையிலேயே KB-யின் ரசிகன் என்பதில் பெருமைபடுகிறேன். வாழ்த்துக்கள் அவருக்கு.

    அவருடைய மேஜர் சந்திரகாந்த் கதாபாத்திரம், ஒரு ஹிட்ச்காக் படத்தில் இருந்து சுடப்பட்டது என்று அறிந்த போது கொஞ்சம் அதிர்ச்சியானாலும், அந்த இரு கதாபாத்திரங்களுக்கும் மலையளவு வித்தியாசம் இருந்தது.

  • டூயட், பொய், கல்கி பார்த்தாலே பரவசம் நீங்கலாக கே.பாலசந்தர் தாதா சாஹிப் பால்கே விருதுக்குப் பெருமை சேர்ப்பவர் தான்.
    ஒரு சின்ன கொசுறு

    101 படங்களை அவர் இயக்கவில்லை, 101 படைப்புக்கள் (சின்னத்திரை நாடகங்கள்) என்று பொய் படம் வெளிவந்தபோது அவரே சொல்லியிருந்தார்.

    ந ப ந பா

  • பாலச்சந்தர் ஒரு தண்டம் என்று சொல்லும் கூட்டம் – யாரும் சீந்தாமல், மதிக்காமல் ஓரமாக உட்கார்ந்து கொண்டு மற்றவர்களை திட்டும் ஒரு மிக மிக சிறு கூட்டமே! இதில் மற்றவர்கள் என்பது – “பார்பனர்கள்” மட்டுமே என்று எடுத்துக்கொள்ளவேண்டும்! பாலச்சந்தர் பிடிக்காமல் போனதன் ஒரே காரணம் அவர் பிராமணர் என்பதால் மட்டுமே!! அதாவது இந்த சிறு கும்பலுக்கு பிடிக்காமல் போனதன் காரணம்! மற்றபடி வெகுஜன தமிழர்களுக்கும் பாலச்சந்தருக்கும் மிக மிக நெருங்கிய தொடர்புதான் இருந்து வருகிறது! மணி ரத்தினமும் கிட்டத்தட்ட இதே இடத்தில்தான் இருக்கிறார்! பார்ப்பனர் இல்லாவிடினும், கவுதம் மேனனுக்கும் இதே போல வசவுகள் இந்த சிறு கூட்டத்திலிருந்து அப்பப்போ வந்து விழும் (என்ன இருந்தாலும் மேனன் என்றால் கிட்டத்தட்ட பாப்பாந்தானே)!! இதில் பாலச்சந்தர் (கமலும்தான்) இதை புரிந்து கொண்டு, தன்னின் பார்பன அடையாளத்தை எங்கே பெருதுபடுத்தி சாடப்போகிரார்களோ என்ற பயத்தில், கலைஞர் கருணாநிதி போன்றவர்களிடம் சரணடைந்து விட்டார்! அதாவது – பாருங்கள் நான் பார்பனன் என்றாலும், திராவிட இனத்தின்
    self proclaimed தலையான கருணாநிதியிடமிக நட்பாக இருக்கிறேன், ஆதலால் நானும் உங்களில் ஒருவன்தான், என்னை திட்டவேண்டாம் – என்று அப்பப்போ உலகிற்கு உணர்திக்கொண்டிருப்பார்! எந்த உலகிற்கு என்றால், கருணாநிதி – வீரமணி கூட்டணியில் எழுபதுகளில் உண்டான “என்னை எதிர்போறேல்லாம் ஆரிய பார்ப்பனன்” என்ற கதையை நம்பும் உலகிற்கு!!!! கமலுக்கும் இந்த பயம்தான்!! அவரும் இன்றுவரை இதையே செய்கிறார்! பாவம் கமல், இந்த உலகம் இப்பொழுது காணாமல் போய்விட்டது என்று அவருக்கு தெரியவில்லை, புரியவில்லை!

    இந்த பிளாக்-மெய்லுக்கு அதிகம் கவலைப்படாதவர் மணி ரத்தினம்தான்! ஏனென்றால் அதற்க்கு அவர் கொடுத்த விலை தன்னுடைய அற்புதமான
    திரைப்படமான இருவரில் அவர் சாகடித்த வரலாற்று உண்மைகள்! எம் ஜி ஆர் என்ற வரலாற்று இன்றியமையாமையை ஏதோ சுய பதிவி ஆசையின் வளர்ச்சியாக்கியதும், கருணாநிதியின் பாதையை தன்னலமற்ற ஒன்றாக திரித்தும் அதற்க்கு வியாக்கியானம் கொடுத்ததும், இதற்கெல்லாம் மகுடமாக
    ஜெயலலிதாவின் பாத்திரத்தை முற்றிலுமாக அசிங்கப்படுத்தியதேயாகும்! இது போதாதா இவரை கருணாநிதி வீரமணி அப்ப்ரூவுசெய்த “தமிழர்” ஆவதற்கு??

    போதாக்குறைக்கு இவரின் துணைவியார் சுகாசினி அவர்கள் ஒரு நாள் தனக்கு பிடித்த மிக சிறந்த தமிழ்நாட்டு தலைவர் யாரென்று கேட்டதற்கு பெரியார் என்று சொன்னார்! கூடவே இவரின் மகனும் சிவப்பு கொடி தூக்குகிறார் போலும்! இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சுகாசினி அவர்கள் சொன்னது “எனக்கு, என் கணவருக்கு மேலும் என் தந்தைக்கும் எந்த விதமான கடவுள் நம்பிக்கையும் கிடையாது” என்பது!

    பாலச்சந்தர் – ஒரு மிக சிறந்த இயக்குனர், படைப்பாளி. அவரின் திரைப்படங்கள் பல மிக சிறந்தவை (சொதபல்களும் இருக்கிறது). இந்த விருதை வாங்க முற்றிலும் தகுதி உள்ளவர் இவர். சந்தேகமே இல்லை!

    (இளையராஜாவிற்கு ஏன் இந்த மாதிரி ஒரு அங்கீகாரத்தை கொடுக்க மறுக்கிறார்கள் என்றுதான் எனக்கு புரியவில்லை. பாலச்சந்தர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்கள் மிக மிக மிக சிறந்த அற்புதமான கலைஞர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அதே சமயம் இவர்களின் ஆரம்பங்கள் ஒரு விதத்தில் ஒரு privileged position என்னும் இடத்தில் இருந்து தொடங்கியது என்பதையும் மறக்ககூடாது! ஆனால் அதற்கெல்லாம் நேர்மாறான இடத்திலிருந்து
    வந்தவர் இளையராஜா! ஆதிக்கத்தின் அடியில் நசுங்கிப்போன ஒரு இடத்திலிருந்து வந்தவர் அவர்! அதையெல்லாம் ஒரு பொருட்டாக பார்க்காமல், மற்றவரை சாடாமல், தன்னின் ஆரம்பங்களை மறக்காமல், அதை வைத்து மற்றவர்களிடம் அங்கீகாரம் தேடாமல், தன்னின் திறமையை வைத்தே வளர்ந்த ஒரு மாபெரும் கலைஞன் அவர்! நம் பண்பாட்டின் சின்னமாக திகழ்கிறவர் அவர். பறை அடிக்க மட்டுமே உரிமை உள்ள ஒரு சமூகத்தில் இருந்து வந்து இன்று ஜனரஞ்சக சாஸ்திரிய சந்கீகத்தின் ஒரு எடுத்துகாட்டாக, முன்னோடியாக இருப்பவர்!!! தமிழில் மட்டுமல்ல, தெலுங்கில், மலையாளத்தில், கன்னடத்தில் இவரின் பாடல்கள் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது!!! அப்பேற்பட்ட கலைஞனான இவருக்கு இந்த விருதென்ன, பாரத ரத்தினா கொடுத்தால் அதுவே இந்தியா இவருக்கு செய்யும் மரியாதையாகும்!! அந்த நாள் எந்த நாளோ???

  • படு மட்டம் என்று யாராவது சொன்னால்கூட, நான் பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றுதான் பதில் சொல்வேன். yeah

  • “பாலச்சந்தர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்கள் மிக மிக மிக சிறந்த அற்புதமான கலைஞர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அதே சமயம் இவர்களின் ஆரம்பங்கள் ஒரு விதத்தில் ஒரு privileged position என்னும் இடத்தில் இருந்து தொடங்கியது என்பதையும் மறக்ககூடாது!”

    என்ன சொல்றீங்க, சிவாஜி privileged position லேந்து சினிமாவுலக வாழ்வை ஆரம்பித்தாரா? சும்மா சகட்டு மேனிக்கு அடிச்சு விடுறீங்க.

  • கே.பி.க்கு வாழ்த்துகள்!…
    ஹ.பி க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • ### பாலச்சந்தர் பிடிக்காமல் போனதன் ஒரே காரணம் அவர் பிராமணர் என்பதால் மட்டுமே!! ###
    சீ சீ என்ன அசிங்கம் இது.
    என்னை மிகவும் பாதித்த ஒரு படம் “புன்னகை” அதன் பாதிப்பு என்னை
    பல விசயங்களில் பாதித்திருக்கிறது.

  • கிழக்கு பாலசந்தர் பற்றி ஒரு புஸ்தகம் வெளியிடலாமே? தீன்தயாள் எழுதினால் நன்றாக இருக்கும்…. ஏற்கனவே இவர் “கமல்” பற்றி எழுதிய புஸ்தகத்தில் பாலசந்தர் பற்றி எழுதியுள்ளார், எனவே பாலசந்தர் பற்றி எழுத அதிகம் ஆராய்ச்சி செய்யத்தேவையில்லை

  • ‘வானமே எல்லை’ 1990க்கு பின் வந்த படம் என நினைக்கிறேன். நல்ல படம். கவிஞர் வைரமுத்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட காலத்தில் இசையமைப்பாளர் மரகதமணியுடன் இணைந்து வந்த பாடல் அனைத்தும் சிறந்தவை. நடிகர் சிவாஜி கணேசன் வரிசையில் இயக்குனர் பாலச்சந்தரும் சேர்ந்துள்ளார். வாழ்த்துகள்.

  • கே.பாலசந்தர் செய்த தவறுகள்…

    தமிழர்கள் சாப்பிடும் உணவுகளிலே வித்தியாசம் காட்டுபவர்கள். அவிச்சா இட்லி,மாவை ஊத்தித் திருப்பினா தோசை,திருப்பலைனா ஊத்தப்பம், பிழிந்து அவிச்சா இடியாப்பம்.இப்படி சாப்பிட்டவர்கள் இப்போ பீட்ஸா, பர்கர்னு மாறிட்டாங்க. இன்னும் மாறாம ஒரே மாதிரி படத்தக் குடுத்தால் பிறகு ஓய்வு எடுக்க வேண்டியது தான்.

    கே.பாலசந்தர் செய்த தவறும் இது தான்.அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர். புராணப் படங்களும்,சமூக படங்களும் ஆண்களை முன்னிறுத்தி வந்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் பெண்களை மையமாக வைத்து படம் எடுத்தவர். அதையே அவர் கடைசி வரை செய்தது தான் தவறுகளின் உச்சம்.

    அப்படி அவரை ட்ரெண்ட் செட்டராக மாற்றிய படங்கள் – அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள்,அவர்கள்.

    இந்த படங்கள் தான் இன்றைய மெகாத்தொடர்களின் தொடக்கம்.

    தொலைக்காட்சி வந்த பிறகும் அதே பாணியில் அவர் எடுத்த படங்கள் – கல்கி, பார்த்தாலே பரவசம், பொய்.
    கே.பாலசந்தரின் படத்தின் கதையின் மையக்கரு ஒன்றுப் போலவே இருக்கும்.உதாரணம் 1 ஆண் : 3 பெண், 3ஆண் : 1 பெண். நாயகனையோ, நாயகியையோ இரண்டு முதல் மூன்று நபர்கள் அவர்களை விரும்புவார்கள்.

    1 ஆண் : 3 பெண் (சொல்லத்தான் நினைக்கிறேன், அழகன், கல்கி, பார்த்தாலே பரவசம்)

    3 ஆண் : 1 பெண் (மூன்று முடிச்சு, அவர்கள், டூயட்)

    2 ஆண் : 1 பெண் (மனதில் உறுதி வேண்டும், அபூர்வ ராகங்கள்)

    1 ஆண் : 2 பெண் (புதுப் புது அர்த்தங்கள்,புன்னகை மன்னன்,இரு கோடுகள்,சிந்து பைரவி)

    இப்படி கதைகளில் கோட்டை விட்டு விட்டு கதாப்பாத்திரத்தில் கொடியை நாடியவர். கோட்டை இல்லாமல் கொடியை வைத்து என்ன செய்ய முடியும்?

    மேலும் அவரின் பெரும்பாலான படத்தில் ஏதாவது முக்கிய கதாப்பாத்திரம் தனியாக நிற்கும்.அவருடைய சிஷ்யர்கள் (வசந்த்,சரண்) இது போன்ற கதைகளைத் துவைத்துக் காயப் போட்டதும் அவருக்கு ஒரு மைனஸ்.

    அதை விட கொடுமை சிந்து பைரவி படத்தின் இரண்டாம் பாகத்தைச் சஹானா என்று ஒரு தொடராக எடுத்து மக்களை ராவு ராவு என ராவியது. இப்படி கொடுமைப்படுத்துவதற்கு முன் தான் கையளவு மனசு, காசளவு நேசம், ஜன்னல் போல நல்ல தொடர்களைக் கொடுத்தார்.

    இன்னொரு குறை முப்பது வருடங்களுக்கு பிறகு வந்து வெற்றி பெற்ற “நான் அவனில்லை” மக்கள் புரிந்து கொள்ளாத 1974ம் ஆண்டு எடுத்தது.
    பாலசந்தர் களத்தை, காலத்தை இரண்டாக பிரித்து விடலாம்.

    அரங்கேற்றம் எடுப்பதற்கு முன்னால்,எடுத்ததற்கு பின்னால்.

    அரங்கேற்றம் எடுப்பதற்கு முன்னால் நகைச்சுவை, குடும்பம்,சஸ்பென்ஸ் படங்களையே எடுத்தார்.

    அரங்கேற்றம் படத்திற்கு பிறகு பெண்கள் சார்ந்த படங்களே நிறைய. அப்படி கொஞ்சம் அல்லது நிறைய வித்தியாசம் காட்டிய படங்கள் இங்கு.

    நிழல் நிஜமாகிறது – ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் உள்ள ஈகோ பற்றிய கதை.கம்பன் ஏமாந்தான் என்ற அருமையான பாடல் உண்டு .

    தப்புத்தாளங்கள் – ரவுடி ஒரு வேசியை திருமணம் செய்வது.

    நினைத்தாலே இனிக்கும் – ரஜினி நகைச்சுவையில் கலக்கிய படம்.

    தில்லு முல்லு , 47 நாட்கள்(சிவசங்கரி), உன்னால் முடியும் தம்பி(கணேஷ்)
    இந்த படத்தின் கதைகளை பாலசந்தர் பிறரிடம் எடுத்து அருமையான திரைக்கதை அமைத்தார்.

    இது போல அவர் பிறரின் வித்தியாசமான கதைகளுக்குத் திரைக்கதை அமைக்காமல் ஒரு பெங்காலி படத்தின் கதையில் அவரின் வழக்கமான திரைக்கதையை வைத்தார் – பார்த்தாலே பரவசம்.பெண்களுக்கானப் புரட்சிப் படம் எடுத்த காலத்தில் (1974-1990) பெண் சுதந்திரம் மிகக் குறைவாக இருந்தது. மக்களும் படத்தை ரசித்தார்கள்.
    பாலசந்தரின் இரு கோடுகள் படத்தில் வரும் சின்னக்கோடு பெரிதாக மாறும்.

    (1974-1990) சின்னக்கோடாக இருந்த பெண் சுதந்திரம் இப்பொழுது பெரியக்கோடாக மாறி வருகிறது.அனால் பாலச்சந்தர் மாறவில்லை.
    இதுவே அவர் செய்த தவறு.

    அதைப் போல பார்வையாளர்களின் ரசனை மாறிக் கொண்டே இருக்கிறது.படைப்பாளிகளின் ரசனை ஒரு எல்லையோடு நின்று விடுகிறது.

    இதுவும் பாலசந்தருக்கு நேர்ந்தது.

    பார்வையாளர்களின் ரசனைக் கோடுகள் வளர்கிறது.படைப்பாளிகளின் ரசனைக் கோடுகள் ஆரம்பம் முதல் ஒரே உயரத்தில் இருக்கிறது.

    –http://irumbuthirai.blogspot.com/

  • முறையற்ற உறவுகளையும் விவஸ்தை கெட்ட குணங்களை கதாபாத்திரங்கள் மூலமும் காட்டி புதுமை நாகரீகம் என்கிற பெயரில் அதிகப்பிரசங்கித் தனத்தையும் ஊரைக்கெடுத்ததையும் தவிற எந்த நல்ல விஷயமும் இந்த பாலச்சந்தர் செய்யவில்லை. விருது பெரியதோ இல்லையோ , விருது கொடுத்து கவுரவிக்கும் அளவுக்கு பாலச்சந்தர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. அவருக்கு கமலஹாசனின் புகழாரம் போதும்

  • //என்ன சொல்றீங்க, சிவாஜி privileged position லேந்து சினிமாவுலக வாழ்வை ஆரம்பித்தாரா? சும்மா சகட்டு மேனிக்கு அடிச்சு விடுறீங்க.//

    நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ரோட்டில் செருப்பு போட்டு அவர்கள் ஊரில் நடக்கலாம், பள்ளிக்கு தூற்றலில்லாமல் செல்லலாம். அதுதான் நான் சொன்ன
    privileged position!!! அவரை பணக்காரர் என்று சொல்லவில்லை. இளையராஜா போன்றவர்களுக்கு அந்த அந்தஸ்த்து முதலில் வழகப்படவில்லை. அது சரி நீங்க பேப்பர் எல்லாம் படிக்கறது இல்லை போலிருக்கு! போன வாரம் மதுரை பக்கம் பாண்டி என்பவரை பைக்கில் போககூடாது என்று சொன்னவர்கள் யாரு? பாண்டி என்பவர் யாரு??? சொல்லவந்த விடயம் புரியாமல் சகட்டு மேனிக்கு நீங்கதான் அடித்து விடக்கூடாது!!

    // ### பாலச்சந்தர் பிடிக்காமல் போனதன் ஒரே காரணம் அவர் பிராமணர் என்பதால் மட்டுமே!! ### சீ சீ என்ன அசிங்கம் இது.//
    ஐயா திரு பஷீரு நீங்கள் சமகால பதிவுலக மற்றும் முற்போக்கு உலக சிதாந்தங்களைப்பற்றி அறியாதவர் போல இருக்கு. ஆதலால் அதை பற்றி உங்களிடம் விளக்கி இன்னுமொரு முற்போக்கு டுபாகூரை உருவாக்க விருப்பமில்லை. one more point – நீங்கள் சொல்ல வந்த படம் புன்னகை மன்னனாக இருந்தால் – படத்தின் நிஜ ஹீரோ கமலோ KB யோ இல்லை. இளையராஜா மட்டுமே! ஏனென்றால் அந்த படத்தை பொறுத்த வரையில், interesting கரு, கமல் ரேவதி நல்ல ஜோடி, சூப்பர் பாடல்கள். ஆனால் ஒரு முழு படம் என்ற அளவில் பார்த்தால் ஒரு sophisticated சொதப்பல் மட்டுமே!! சாப்ளின் செல்லப்பாவை பார்த்து தேட்டரில் யாரும் சிரித்ததாக நினைவில்லை!!! ஆனால் யாரோட லக்கோ படம் ஹிட்டோ ஹிட்!!

  • பாலசந்தர் படங்களில் எனக்கு பிடித்த ஒரே படம் ‘கல்யாண அகதிகள்’. குறிப்பாக மதம் மாறுவதை வரதட்சணைக்கு மாற்றாக கேட்கும் கிறிஸ்தவ காதலனுக்கு கந்தர்சஷ்டி கவசம் மூலம் பதில் சொல்லும் காதலி. மற்றபடி அந்த ஆள் ஆலையில்லாத ஊருக்கு இலுப்பப்பூவை விட மோசமான ஏதோ ஒன்று.

  • இங்கு கேபி-யை பற்றி மாறுப்பட்ட விமர்ச்சனம் செய்பவர்கள் அவரை பற்றி எந்தளவு தெரிந்து புரிந்து உள்ளார்கள் என்பது விளங்கவில்லை..?வருத்தமாக உள்ளது…..அவ்ரை வாழ்த்த வயதில்லை…..எனினும் மகிழ்ச்சி..!

  • “” நீங்கள் சொல்ல வந்த படம் புன்னகை மன்னனாக இருந்தால் – படத்தின் நிஜ ஹீரோ கமலோ KB யோ இல்லை.””
    நீங்க ஒரு சீரியஸ் காமெடி பீசு போல தெரியுது.”” புன்னகை”” பாலச்சந்தரின் அற்புதமான ஒரு படம்.1971 ல் வெளிவந்தது.ஜெமினி கணேசன்,முத்துராமன்,ஜெயந்தி,நாகேஷ் நடித்தது.
    அதற்க்கான லிங்க் இதோ http://www.orutube.com/videos/9749/
    முடிந்தால் பாருங்கள்.

  • 1. “மக்களை புத்திசாலிகளாக மதித்துக் கதை சொல்லுவது என்பது பாலசந்தரிடமிருந்துதான் ஆரம்பித்தது.” – எஸ் பாலசந்தரிடமிருந்தா? 🙂
    2. “கே. பாலசந்தர், தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை.” – இல்லை. அவர் ஒரு முட்டுச்சந்து (dead end). எம்ஜிஆர், ரஜினிகாந்த், பாரதிராஜா, மைக் மோகன், கௌண்டமணி, சிம்ரன் போன்றோர் திருப்புமுனைகள் : இவ்வரிசையில் வந்தோரை போல் நாமும் செய்யலாம் என்று பலருக்கு நம்பிக்கை பிறந்தது. கேபி, சிவாஜி, தங்கவேலு, கமல், டிஆர் ராஜகுமாரி, பாக்கியராஜ், டி ராஜேந்தர் போன்றோர் முட்டுச்சந்துகள் – இவர்களை காப்பி அடிப்பது எளிதல்ல.
    3. “வசனங்கள் அவருடைய பலம்.” – முற்றிலும் உண்மை. பட்ஜட் சிக்கனம் மற்றொரு பெரும் பலம்.
    4. “நாடக வடிவத்தின் சற்றே மேம்பட்ட தரத்தில்தான் அவருடைய படங்கள் இருக்கும்.” – இதுவும் உண்மை.ஆனால் இது குறையில்லை. கேபியின் அவை அறிதல்.
    5. “காட்சி ஊடகத்தின் சகல சாத்தியங்களையும் அவர் பயன்படுத்தியதில்லை.” – பெரும்பாலான இந்திய இயக்குனர்களுக்கும் இந்த குறை உண்டு. ஆனால் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்களில் பலருக்கு இது குறையாக தெரியவில்லை.
    6. “புராணப் புளியோதரைகளிலிருந்து சினிமாவைக் காப்பாற்றியவர் ஸ்ரீதர்.” – புராணங்கள் முற்காலத்து சமூகங்களின் கதைகள். ‘புளியோதரையிலிடுந்து என்னை காப்பாற்று’ என்று எந்த தமிழன், எந்த மனிதன் புலம்பினான்? ஏபி நாகராஜனைத்தவிற புராண்ங்களை நன்றாக ப்டமாக்கும் திறமையான இயக்குனர் தமிழில் இல்லை. பட்ஜட்டும், மக்களின் எதிர்பார்ப்பும் கூடுதல் காரணங்கள்.

    அறுபதுகளில் பலமாக பாரதத்தை கவ்விய சோசியலிசத்தின் குழந்தை, கேபி. In the 90s his movie making became obsolete, his stories fit TV. Society surpassed his contrarian ideas.

    “இது கேபியை வாழ்த்தவேண்டிய தருணம்.” – பல்லாண்டு பல்லாண்டு.

  • //ஐயா திரு பஷீரு நீங்கள் சமகால பதிவுலக மற்றும் முற்போக்கு உலக சிதாந்தங்களைப்பற்றி அறியாதவர் போல இருக்கு. //

    ஆமாம் பாஷீர், சமகால முற்ப்போக்கு பதிவுலகம்ன்னா பாப்பான கண்டபடி திட்டணும்,`பாலச்சந்தரும் பார்ப்பனீயமும்`, `தாதாசாகேப்பும் பார்ப்பனீயமும்` ந்னு பதிவு போடணும் அதுதான் முற்போக்கு பதிவுலக உலக சிதாந்தம். பெரியார பற்றி எழுதணும்ன்னாலும் ` பெரியாரும் பார்ப்பனீயம்`ன்னுதான் போடணும். பார்ப்பனீயத்த பிராமணர்கள் விட்டாலும் இவர்கள் விடமாட்டார்கள்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி