Categoryவிருது

பூனைக்கதைக்கு வாசகசாலை விருது

பூனைக்கதைக்கு வாசக சாலை விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாசகசாலை அமைப்பாளர்களுக்கு நன்றி.
நாளை மாலை யதி அறிமுக நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாளையும் நாளை மறுநாளும் இந்த இரு விழாக்களிலும் இருப்பேன்.
பூனைக்கதை அறிமுகம் | கிண்டிலில் பூனைக்கதை
 

விருது மறுப்பு

ஜெயமோகன் பத்ம விருதை மறுத்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. சுற்றுச்சூழலைப் போல் தமிழ்ச்சூழல் எத்தனை மாசுபட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இவ்விருதைப் பெற அனைத்துத் தகுதிகளும் உள்ளவர் அவர். ஆயினும் காழ்ப்புக் கசடுகளை மனத்தில் கொண்டு இதனை மறுத்திருக்கிறார்.

நெய்வேலி பாராட்டு விழா

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவின் சில காட்சிகளை ஹரன் பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரு கேமரா அல்லது வீடியோ ரெக்கார்டர் மட்டும் கிடைத்துவிட்டால் மனிதர்களுக்குத்தான் எப்படி கலையுணர்வு பொங்கிப் பீறிட்டுவிடுகிறது! இருப்பினும் இச்சரித்திரப் பதிவைச் சாத்தியமாக்கியதன்மூலம் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட பிரசன்னாவுக்கு வேறு வழியில்லாமல் நன்றி சொல்லிக் கீழே ப்டம்...

தாத்தா சாஹேபுக்கு தாதா சாஹேப்

எனக்கு பாலசந்தர் படங்கள் பிடிக்காது என்று சொல்வது தீவிர சினிமா ரசிகர்களிடையே [இவர்கள் பெரும்பாலும் இலக்கியவாதிகளாகவும் இலக்கியவாதிகளாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் அங்ஙனம் காட்டிக்கொள்ள விரும்புவோராகவும் இருப்பார்கள்.] ஒரு ஃபேஷன். ஒன்றுக்கு இரண்டு முறை தனியே உட்கார்ந்து ரசித்துப் பார்த்துவிட்டுத்தான் இதை அவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அந்தப் பிரச்னை...

கொண்டாட ஒரு தருணம்

நல்லி செட்டியாருக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் தமிழர்கள் ஜீரணித்துவிடுவார்கள் என்றாலும், நாஞ்சில் நாடனுக்கு இவ்வாண்டு சாகித்ய அகடமி விருது என்னும் அறிவிப்பு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நாஞ்சிலுக்கு அன்பான வாழ்த்துகள். தலைகீழ் விகிதங்கள் தொடங்கி நாஞ்சில் நாடனின் ஒரு படைப்பையும் நான் விட்டதில்லை. நமக்கே நமக்கென்று அந்தரங்கமாகச் சில விஷயங்கள் எப்போதும் இருக்குமல்லவா...

சிரித்துத் தொலைக்காதே!

இன்றைய தினத்தை இரண்டு விருது அறிவிப்புகள் அலங்கரிக்கின்றன. சாகித்ய அகடமி விருது கவிஞர் புவியரசுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் பொற்கிழி விருதுகள் ச.வே. சுப்பிரமணியன், ஈரோடு தமிழன்பன், கு. சின்னப்ப பாரதி, ஆறு. அழகப்பன் ஆகியோருக்கு. எந்த விருது அறிவிப்பும் எல்லோருக்கும் திருப்தியளிக்காதுதான். ஆனால் சமீப காலத்தில் இது விருது பெறுவோரைத் தவிர வேறு யாருக்கும் திருப்தியளிக்காத நிலையை...

அம்பைக்கு இயல் விருது

2008ம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது,  கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது.  சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத்...

முதுமையின் மற்றொரு நோய்

ஆசை யாரை விட்டது? கலைஞருக்கு நோபல் பரிசு வேண்டியிருக்கிறது. பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமையில் இதற்காகப் பன்னிரண்டு பேர் கொண்ட குழு. குழுவில் கலைஞரின் பேத்தி கயல்விழியும் ஒருவர். மிகச் சமீபத்தில் மேடைக்கு வந்தவர் இந்தப் பேத்தி. தவிர சில கல்வியாளர்கள், கவிஞர்கள், ஒரு கவிப்பேரரசர். இந்தப் பன்னிரண்டு பேரும் கலைஞரின் எழுத்தோவியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் கமிட்டிக்கு...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!