அனுபவம்

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 41)

சூனியனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவமானப்பட்ட கோவிந்தசாமியும் அவனது நிழலும் ஒரு மதுபானக்கடையில் சந்திக்கிறார்கள். கோவிந்தசாமி எஜமானன் என்பதால் அவன் முன்பு அமர்ந்து குடிக்க மறுக்கிறது நிழல். மறைவாக சென்று குடித்துவிட்டு மிக்சர் சாப்பிடுகிறது.
நிழலுக்கு சாகரிகாவும் இல்லை, காதலியும் இல்லை என்றாகிவிட்ட நிலையில், கோவிந்தசாமிக்கு சாகரிகாவும் இல்லை வேறு யாரும் இல்லை என்றாகி இருவருக்கும் இது ஒன்றே வழியாகப்பட்டிருக்கிறது.
அங்கே வெண்பலகையில் ஒரு பெண் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைத் தொட்டுக்கொண்டு குடிப்பதாகச் சொன்னதும் குமுறி அழும் கோவிந்தசாமி, அவள் தொட்டுக் கொள்ளத் தகுதியான கவிதைகளை தான் மட்டுமே எழுதியிருப்பதாகச் சொல்லி புலம்புகிறான்.
சாகரிகா தன்மேல் கோபமாக இருப்பதால் இப்போது கோவிந்தசாமி அவளை சந்தித்தால் அவன்மீது அவள் இரக்கப்படுவாள் என சொல்லும் நிழல் அதற்கு ஒரேயொரு தடையாக ஷில்பா இருப்பாள் எனவும் அதற்கு சூனியனின் உதவியை எடுத்துக் கொளளுமாறும் நிழல் சொல்கிறது.
அத்தியாயத்தின் முடிவில் நிழல், தானே ஒரு சூனியன்தான் என்கிறது. நம்ப முடியவில்லை அல்லவா? கோவிந்தசாமி மலைப்புடன் இருக்கையில் அத்தியாயம் முடிகிறது.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி