கோவிந்தசாமி நூலக சமஸ்தானத்திற்குள் நுழைந்ததை முதலில் பார்த்தது ஷில்பா தான், அவள் சாகரிகாவிடம் விஷயத்தைச் சொல்லவும், அவள் கோவிந்த்சாமியின் கண்ணில் படாமல் வெளியேற ஷில்பா உதவுகிறாள். கமலி சாப்பிடும் கரடி, வெண்முரசு சாப்பிடும் முள்ளம்பன்றி, கசடதபற வாசிக்கும் எருது எனப் புனைவில் அதகளம் செய்திருக்கிறார் பாரா. அங்கே கமலி சாப்பிட்டு கொண்டிருக்கும் கரடியின் தலையைக் கழற்றி சாகரிகாவின் தலையில் மாட்டி விட்டுத் தப்பிக்க வைக்கிறாள் ஷில்பா. சாகரிகாவின் தலை இப்போது ஷில்பாவின் பையில் இருக்கிறது.
இதற்கிடையில் கோவிந்தசாமி ஷில்பாவின் முன்னாள் கணவன் என அறிந்த நூலக அலுவலர் சாகரிகா அங்கிருப்பதை கோவிந்தசாமியிடன் சொல்லி விடுகிறான். மீண்டும் அவளைத் தொலைத்து விட்டதை அறிந்த கோவிந்தசாமி கலங்குகிறான்.
இப்போது நரகேசரி அருகில் வந்து எவ்வளவு சொல்லியும் கோவிந்தசாமி கேட்காது போகவே அவனும் இடத்தை விட்டு நகர்கிறான். தலை இழந்த கரடி கோவிந்தசாமியிடம் உதவி கேட்பதோடு இந்த அத்தியாயம் முடிகிறது.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.