அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 37)

நீல வனத்தின் நூலக சமஸ்தானம் வெகுசுவாரசியமாய் கட்டமைக்க பட்டிருக்கிறது. சாகரிகாவும் ஷில்பாவும் நூலக சமஸ்தானத்திற்கு வந்து சேர்கின்றனர். அவர்கள் வரும் நேரமாய் ஒரு யாளி ஒன்று மயக்கத்தில் சமஸ்தான வாசலில் படுத்திருக்கிறது. நீல வனவாசிகள் எல்லோரும் அதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதை அடுத்து யாளியை குறித்து நடைபெறும் உரையாடல்கள் அனைத்தும் புனைவின் உச்சம்.
சாகரிகாவை பார்க்கும் மக்கள் அனைவரும் அவளைக் கொண்டாடுகின்றனர். சற்று நேரத்தில் அது சலிப்புறும் படியாக அமைகிறது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் ஷில்பாவின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் அதிலிருந்து தள்ளி வந்து யாளியை கவனிக்க தொடங்குகிறாள்.
அடுத்தபடியாக நம் கோவிந்தசாமியின் லீலைகள் வெண்பலகையில் அரங்கேறிவிட்டது. அதைப் பார்த்த சாகரிகா கடுங்கோபத்திற்கு ஆளாகிறாள். அதே நேரம், கோவிந்தசாமியும் நரகேசரியும் நூலக சமஸ்தானத்திற்குள் நுழைகின்றனர். அடுத்து என்ன நடக்கவிருக்கிறதோ? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி