சூனியனுக்கு சமமான ஒரு எதிரி கதையில் வரவில்லையே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அதுபற்றி ஆசிரியர் கடந்தசில அத்தியாயங்களாக சொல்லி வந்தது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது.
சூனியன் ஒரு அசுர சக்தி. அவனுக்கு இணையான ஒரு சக்தி மறுபுறம் இருக்கவேண்டுமென்றால் அது கடவுளின் அருளையோ அல்லது கடவுளுக்கு இணையாக இருக்கும் ஒருவரின் அருளையோ ஆசியையோ பெற்றவராக இருக்கவேண்டும் என்பது இயற்கைதானே.
தன்னை கோரக்கரின் ஆசிபெற்றவன் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரோடு சூனியன் யுத்தத்திற்கு தயாராவதில் வியப்பேதும் இல்லை.
கோவிந்தசாமி ஒரு கடைந்தெடுத்த சங்கி. சூனியன் தெரிந்தோ தெரியாமலோ அவன் பக்கம் நின்றுவிட்டதால் அந்த சக்தி இயல்பாகவே அவனுக்கு எதிர்தரப்பான அவனது மனைவி பக்கம் நிற்கிறது.
அத்தோடு மட்டுமல்லாமல் சித்தாந்த ரீதியாகவும் கோவிந்தசாமிக்கு நேரெதிர் துருவத்தில் நிறுத்த முற்படுகிறது. சித்தாந்த ரீதியில் இன்றைய தேதியில் சங்கிகளை கதறவிட்டுக்கொண்டிருக்கும் ஒரு சித்தாந்தத்தை அவள் மீது அந்த சக்தி திணிக்கிறது.
அது என்ன சித்தாந்தம்? கதை தற்கால அரசியலுக்குள் நுழைந்து பட்டும்படாமல் செல்லப்போகிறதா? அல்லது உள்ளதை உள்ளபடி சொல்லப்போகிறதா? என்ற கேள்விகளெல்லாம் உங்கள் மண்டையைக் குடைந்தால் நீங்களும் படிக்கத்தொடங்கிவிடுங்கள்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.