அனுபவம்

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 19)

கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுத்தாலும்’ அதைப் பெற்று அனுபவிக்கும் குறைந்த பட்ச அறிவு இல்லாதவரால் எந்த நன்மையையும் அடைந்துவிட முடியாது. வாசகர்கள் அனைவரும் கோவிந்த சாமிக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ள வேண்டியதுதான்.
இந்தக் கோவிந்தசாமியை வைத்துக்கொண்டு சூனியன் அடையும் மனத்தடுமாற்றங்கள் பல. ஒருவழியாகக் கோவிந்தசாமியின் நிழலை அது புறக்கணித்துவிட்டது. இனி, சூனியனுக்குக் கோவிந்தசாமி மட்டும்தான் அடைக்கலம்.
இனி, கோவிந்தசாமியின் பெயரால், அவனுடலில் சூனியன் இயங்கப் போகிறான். ‘கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை’யைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போதுதான் நேரில் படிக்கிறோம்.
எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் வாசகரின் உள்ளங்களில் கூடுவிட்டுக் கூடு பாய்கிறார். ‘விஷம் முறிக்கும் விஷமரம்’, ‘செம்மொழிப் பிரியா’, ‘திராவிடத் தாரகை’, ‘கலாச்சார செயலர்’ என நாவல் பறக்கிறது.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி