அனுபவம்

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 45)

கோவிந்தசாமி மருத்துவமனையில் இருந்து இரவுராணி மலரைப் பறிக்கக் கிளம்பி பல அத்தியாயங்களாக மலரைப் பறிக்காமல் அங்குமிங்கும் அலைய வேண்டி இருந்தது. ஆனால் அன்று தற்செயலாக அவன் முன்னால் அந்த தடாகம் இருந்தது. இரவு ராணி மலர் இருந்தது. இனி அவனுக்கு தடையெதுவும் இருக்க முடியாது அல்லவா?
அவன் சிரமப்பட்டான் என்பது உண்மைதான். சிலர் அவனை சிக்கலில் சிக்க வைத்தனர் என்பது உண்மைதான். ஆனால் அந்த சிக்கலெல்லாம் தீரும் நேரம் வந்து விட்டது என உணர்ந்தான். தன்னுடைய நிழலுக்கே இரக்கம் காட்டிய அவள் அவனுக்கு இரக்கம் காட்ட மாட்டாளா என்ன? அதுவுமன்றி இப்போது அவன் தனியாகச் செல்லப்போவது இல்லையே. இரவுராணியுடன் அல்லவா செல்கிறான். அந்த இரவுராணியை வைத்து தன் கனவுராணியை எப்படியெல்லாம் ப்ரோக்ராம் செய்ய வேண்டுமோ அப்படியல்லாம் ப்ரோக்ராம் செய்து வைத்திருந்தான். இன்னும் ஒன்றே ஒன்றுதான் பாக்கி. அதை எடுத்துச் சென்று அவளிடம் தர வேண்டும்.
ஆனால் அதற்குள் அந்த பாவிகள் நரகேசரியும் அதுல்யாவும் வந்து அதைக் கெடுத்துவிட்டார்கள். அவன் என்ன செய்வான் பாவம்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி