சென்ற அத்தியாயத்தில் அறிமுகமான அமெரிக்கப் பேரழகி அதுல்யா அதற்குள் கதையின் முக்கிய கதாபாத்திரமான நமது கதாநாயகியை கலங்கடித்துவிட்டாள். அப்படி என்ன செய்தாள்? வெண்பலகையில் ஒரு சிறு நினைவுக் குறிப்பு. அவ்வளவுதான். ஆடிப்போய்விட்டாள் சாகரிகா.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்னர், சில தகவல்களுக்காக அதுல்யாவிடம் மெஸஞ்சரில் பேச, அவள் மீது இடி விழுந்தது போல இன்னொரு அதிர்ச்சி. அவளுக்கு கோவிந்தன் மீது கோபம் கோபமாக வருகிறது. அந்த கோபத்துடனே அவள் உறங்கிப் போகிறாள்.
அந்த வெட்கங்கெட்ட நிழல் தூக்கத்திவிருந்து எழுந்து வந்து முதலில் சாகரிகாவின் அழகையும் பிறகு ஷில்பாவின் அழகையும் அமர்ந்து ரசிக்கத் துவங்குகிறது.
நீலநகரத்தில் பெண்களை வெகுஇயல்பாக நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் என சொல்லி அவர்களிடம் நன்றியைப் பெற முடியும். நிஜவாழ்வில் முடியுமா என்று நிழல் கோவிந்தனது அனுபவம் ஒன்றையும் நினைத்துப் பார்க்கிறது.
அடுத்து நிழல் என்ன செய்யப் போகிறது? சாகரிகாவும் அதுல்யாவும் சந்திப்பார்களா? என்பதெல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் தெரியலாம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.