
ஜந்துவை வாட்சப் சேனலில் தொடராக எழுதிய சமயத்தில் எந்தப் போட்டி அறிவிப்பும் இல்லாமலேயே மீம் புரட்சி செய்த வாசக நண்பர்களுக்கு வணக்கம்.
உங்கள் ஈடுபாட்டை மதித்து இம்முறை போட்டி அறிவிக்கிறேன்.
1. அத்தியாயம் வெளியாகத் தொடங்கியதும் நீங்கள் உங்கள் வேலையைத் தொடங்கலாம்.
2. தொடர் முடிவடையும் வரை ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தவறாமல் மீம் அனுப்புவோர் மட்டுமே போட்டியாளர் பட்டியலில் இடம் பெறுவர்.
3. தொடரின் முடிவில் வெளியான அனைத்து மீம்களிலிருந்து மிகச் சிறந்த மூன்று தேர்ந்தெடுக்கப்படும்.
4. தேர்வாகும் மீம் கலைஞர்களுக்கு ‘மிருது’ நூல் வடிவில் வெளியாகும்போது பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
5. மிருது மீம் போட்டிக்கு நடுவராக இருந்து சிறந்த மீம்களைத் தேர்ந்தெடுத்துத் தர எழுத்தாளர் முகில் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு நமது நன்றி.
6. உங்கள் மீம்களை para.channelreviews@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டும் அனுப்பவும்.
முக்கியமான பி.கு: என்னுடைய மாணவர்கள் மீம் அனுப்பினால் பிரசுரிப்பேன். ஆனால் போட்டிக் கணக்கில் சேர்க்க மாட்டேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.