இந்த ஆண்டின் இரண்டாவது எழுத்துப் பயிற்சி வகுப்புகளை ஏப்ரல் 5 முதல் தொடங்கவிருக்கிறேன். இது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படுகிற சில வினாக்களும் பதில்களும் கீழே உள்ளன.
எழுத்துப் பயிலரங்கம்
நேற்று பயிலரங்க அறிவிப்பை வெளியிட்டதும் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான அளவில் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. பங்கு பெற ஆர்வம் காட்டியிருக்கும் அனைவருக்கும் நன்றி. இன்றும் விண்ணப்பிக்கலாம். நேற்று நேரமில்லாததால் சிலவற்றைக் குறித்து விரிவாக எழுத இயலவில்லை. இப்போது எழுதிவிடுகிறேன். 1) நிச்சயமாக இந்தப் பயிலரங்கம் எழுத்தார்வம் உள்ள, புதியவர்களுக்கு மட்டும்தான். நன்கு பழகிய கரங்களுக்கல்ல. 2) கூகுள் விண்ணப்பப்...