நேற்று பயிலரங்க அறிவிப்பை வெளியிட்டதும் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான அளவில் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. பங்கு பெற ஆர்வம் காட்டியிருக்கும் அனைவருக்கும் நன்றி. இன்றும் விண்ணப்பிக்கலாம். நேற்று நேரமில்லாததால் சிலவற்றைக் குறித்து விரிவாக எழுத இயலவில்லை. இப்போது எழுதிவிடுகிறேன்.
1) நிச்சயமாக இந்தப் பயிலரங்கம் எழுத்தார்வம் உள்ள, புதியவர்களுக்கு மட்டும்தான். நன்கு பழகிய கரங்களுக்கல்ல.
2) கூகுள் விண்ணப்பப் படிவத்தில் facebook அல்லது twitter id குறிப்பிடச் சொல்லியிருக்கிறோம். இதன் காரணம், விண்ணப்பிக்கும் நபர் உண்மையிலேயே எழுத்தார்வம் உள்ளவர்தானா, எழுத்துக்குப் புதியவர்தானா என்பதைத் தெரிந்துகொள்வதுதான். profile lock செய்திருப்பவர்கள் விண்ணப்பித்தால் விண்ணப்பம் ஏற்கப்படாது.
3) fake idக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். என் நண்பர்கள், முன்னோடிகள் நேரடியாகவோ, ஒற்றர்கள் மூலமோ விண்ணப்பித்தால் கண்டுபிடித்துவிடுவேன். அன்போடு அனுமதி மறுக்கப்படும். (இதற்காக என் அட்மின் ஒரு படு பயங்கர bot வைத்திருக்கிறார்.)
4) அடிக்கடி எழுதுவது சார்ந்த சந்தேகங்களைப் பலர் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். குறிப்பாக, கொம்பு முளைத்தவன் படித்துவிட்டு எனக்கு வந்த மின்னஞ்சல்களும் மெசஞ்சர் தகவல்களுமே இப்படியொரு பயிலரங்கின் தொடர்ச்சியான தேவை குறித்துச் சிந்திக்க வைத்தது. தக்ஷின் சித்ராவுக்காக நான் நடத்திய பயிலரங்குக்குப் பிறகு அம்மாதிரியான வகுப்பு மீண்டும் எப்போது நடக்கும் என்று பலபேர் விசாரித்தார்கள். நாளை மறுநாள் சனிக்கிழமை நடக்கப் போவது ஒரு முன்னோட்ட வகுப்பு மட்டுமே. விரைவில் சில நல்ல தகவல்களை அறிவிக்கிறேன்.
5. இந்தக் குறிப்பிட்ட பயிலரங்கம் 45 நிமிடங்களுக்கு நடக்கும். அடுத்த அரை மணி நேரம் சந்தேகங்கள் கேட்கலாம், விவாதிக்கலாம். மொத்தம் 1.15 மணி நேர நிகழ்ச்சி.
6. முதலில் 25-30 பேரை மட்டும் அனுமதிக்கலாம் என்று நினைத்தோம். வகுப்புச் சூழல் அப்போதுதான் இரு தரப்புக்கும் வசதியாக இருக்கும். ஆனால் வந்து குவியும் விண்ணப்பங்களைப் பார்க்கும்போது இது நியாயமில்லை என்று தோன்றியது. அதிகபட்சம் 100 பேரை அனுமதிக்கலாம் என்று bukpet நிர்வாகியும் தளத்தின் தொழில்நுட்ப வல்லுநர் செல்வமுரளியும் சொல்கிறார்கள். அதனால்தான் அனைத்து ப்ரொஃபைல்களையும் கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது. முகமற்றவர்கள், முகம் காட்ட விரும்பாதவர்கள், தமிழில் ஒரு வரி கூட எழுதியிராதவர்கள், வெறும் போட்டோ, பிறந்த நாள் வாழ்த்து மட்டும் போட்டிருப்பவர்கள், புனைபெயராளிகளுக்கு நிச்சயமாக அனுமதியில்லை.
7. பயிலரங்கில் பங்குபெற ஒரு கூகுள் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். நேற்று இரவெல்லாம் மின்னஞ்சல் வந்துகொண்டே இருந்தது. எனவே விண்ணப்பப் படிவ லிங்க்கை ஆட்டோ ரிப்ளையில் போட்டு வைத்தோம். யாருக்காவது லிங்க் வந்து சேரவில்லையென்றால் இப்போது தெரிவிக்கலாம். அல்லது கீழே மறுமொழியில் உள்ள லிங்க்கை அழுத்தி விண்ணப்பிக்கலாம்.
8. நிகழ்ச்சியை லைவ் ஆக ஒளிபரப்ப முடியுமா என்று பலர் கேட்டிருந்தார்கள். மன்னிக்கவும். இயலாது. நிகழ்ச்சி பதிவு செய்யப்படும். ஆனால் பொதுவில் வராது. பயிலரங்கில் கலந்துகொள்வோருக்கும் writeroom உறுப்பினர்களாவோருக்கும் மட்டும் பிறகு காணக் கிடைக்கும். உறுப்பினராவதற்கான விவரங்கள், இணையத்தளம் தயாரானதும் அறிவிக்கப்படும். bukpet-இன் ஃபேஸ்புக் பக்கத்தை like செய்து வைத்தால் அத்தகவல்கள் வெளியாகும்போது உடனுக்குடன் கிடைக்கும். ஃபேஸ்புக் பக்க லிங்க், மறுமொழியில் உள்ளது.
9. bukpet-இன் இம்முயற்சிக்குத் தொழில்நுட்ப வலு வழங்குபவர் என் நண்பர் செல்வ முரளி. நுட்பச் சிக்கல் ஏதும் இருக்குமானால் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.
10. படிவம் இங்கே உள்ளது. பங்குபெறத் தேர்வானால் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு இதர விவரங்கள் உங்களை வந்து சேரும்.