எழுத்துப் பயிற்சி வகுப்புகள்

 

 

எதற்கு?

சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. ஏராளமாகக் கதைகள், கட்டுரைகள் எழுதிப் பார்க்கிறேன். எதுவும் சரியாக இல்லாதது போலவே தோன்றுகிறது. எனக்கு நன்றாக இருக்கிறது; ஆனால் படிப்பவர்கள் பாராட்டுவதில்லை. பத்திரிகைகளுக்கு அனுப்பினால் பிரசுரமாவதில்லை. ஃபேஸ்புக்கில் வெளியிட்டால் பத்து லைக் கூட வருவதில்லை. எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி எப்படி எழுதுவது?

எழுதத் தொடங்கும் எல்லோருக்கும் இயல்பாக இருக்கும் கவலைகள் இவை. ஆனால் இவற்றில் இருந்து மிகச் சுலபமாக வெளியேறிவிட முடியும். வாசகர்களைக் கட்டிப்போடும் விதமாக எழுதுவது ஒரு நுட்பம். உங்களிடம் சொல்வதற்கு ஒரு சரியான விஷயம் இருந்துவிடுமானால், அதற்குப் பொருத்தமான வடிவம் தந்து, துல்லியமாக இலக்கை நோக்கி நகர்த்திவிட முடியும்.

அந்த நுட்பத்தைச் சொல்லித் தருவதே இந்த வகுப்புகளின் நோக்கம்.

கதை – கட்டுரை – உரையாடல் – புத்தக எழுத்து – சமூக வலைத்தள எழுத்து என்பதெல்லாம் ஒரு வசதிக்கு நாம் சொல்லிக்கொள்வதுதான். உண்மையில் எழுத்துக்கு அடிப்படை கருப்பொருள் மட்டுமே. சரியான பொருள் அமைந்துவிட்டால் சரியான வடிவத்தை அடைவது சுலபம்.

சரியானவற்றை அடைவதற்கு இந்த வகுப்புகள் வழி காட்டும்.

எப்படி?

இது ஒரு ஆன்லைன் எழுத்துப் பயிற்சிப் பள்ளி. கட்டணம் உண்டு. வகுப்புகள் Zoom மூலம் நடத்தப்படும்.

ஒவ்வொரு அணியிலும் (Batch) அதிகபட்சம் பதினைந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நேரடி எழுத்துப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

வகுப்பு தொடங்கும் தேதி ஒரு வாரம் முன்னதாகப் பாராவின் இணையத்தளம், வாட்சப் சேனல், ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கப்படும். முதலில் பணம் செலுத்தி, பதிவு செய்வோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அம்மாத அணியில் சேர இயலாதவர்கள் அடுத்த மாத வகுப்பில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

பணம் செலுத்தி, குறிப்பிட்ட அணியில் இடம் பெற்ற பின்பும் தற்செயல் காரணங்களால் ஓரிரு வகுப்புகளைத் (மொத்தம் எட்டு வகுப்புகள்) தவறவிட நேர்ந்தால், அந்தக் குறிப்பிட்ட வகுப்பின் விடியோ பதிவு அனுப்பிவைக்கப்படும்.

இது பற்றிய விவரங்களை FAQ பகுதியில் காணலாம்.

யாரால்?

தமிழ் எழுத்தாளர் பா. ராகவன் இந்த வகுப்புகளை நடத்துகிறார்.

தனது முப்பத்தைந்து ஆண்டுக் கால எழுத்து அனுபவங்களின் அடிப்படையில் பா. ராகவன் இதற்கெனப் பிரத்தியேகமாகப் பாடத் திட்டங்களை உருவாக்கியிருக்கிறார். மொபைல் யுகத்தில் ஃபேஸ்புக்கே ஆனாலும் ஒரு see more-ஐ அழுத்தி மேற்கொண்டு படிக்க விருப்பமில்லாமல், முதல் நான்கு வரிகளுடன் நகர்ந்து ஓடிவிடும் இந்தத் தலைமுறை வாசகரை இழுத்து நிறுத்தி வாசிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல.

ஆனால் அநாயாசமாக இந்தத் தடைகளை எழுத்தின் மூலமே உடைத்தெறிந்து ஒவ்வொருவருக்குமான பிரத்தியேக வாசகர் வட்டத்தை அவரவரே அமைத்துக்கொள்ளும் அளவுக்கு எழுத்தில் நேர்த்தியும் தேர்ச்சியும் துலங்க இந்தப் பயிற்சி வகுப்புகள் மிக நிச்சயமாக உதவும்.

பா. ராகவனின் இந்த எழுத்துப் பயிற்சி வகுப்பு பதினாறு மணி நேரங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும் (சனி-ஞாயிறு) தலா இரண்டு மணி நேரம் நடைபெறும். ஒரு முழு வகுப்பு என்பது நான்கு வாரங்களுக்கு நீளும்.

புனைவு, அல்புனைவு, சமூக ஊடக எழுத்து, மொழிநடை ஆகியவை முதன்மைப் பாடங்களாக இருக்கும். இவற்றில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டும் பிறகு எடிட்டிங், புத்தகக் கட்டமைப்பு (Book Structuring) வகுப்புகள் நடத்தப்படும்போது அழைக்கப்படுவர்.

பத்திரிகை மற்றும் பதிப்புத் துறையில் ஆசிரியராக இருபதாண்டுகள் பணியாற்றியவரான பாரா, அக்காலக்கட்டத்தில் எழுத்தார்வம் மிக்க ஏராளமானவர்களுக்கு எழுதச் சொல்லிக் கொடுத்து புத்தகங்கள் எழுத வைத்திருக்கிறார். எழுத்து மற்றும் எடிட்டிங் பயிலரங்குகளை நடத்தியிருக்கிறார். அவரிடம் பயின்ற பலர் பிரபல எழுத்தாளர்களாக விளங்குகிறார்கள். ‘சொல்லித்தரும்’ பணியில் இருந்து பத்தாண்டுக் காலம் ஒதுங்கியிருந்தவர் இப்போது முழு வீச்சில் BukPet பயிற்சி வகுப்புகளை நடத்த ஆரம்பித்துள்ளர்.

எழுதச் சொல்லித்தரும் பல பயிற்சி நிறுவனங்கள் உலகளவில் நிறைய உண்டு. சல்மான் ருஷ்டி, ரஸ்கின் பாண்ட் போன்ற பல பிரபல எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு இத்தகைய வகுப்புகளை எடுக்கிறார்கள். தமிழில் இப்படி ஒரு முயற்சி எண்பதுகளில் ரா.கி. ரங்கராஜன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது பாரா இதனை முற்றிலும் நவீனமான முறையில், ஆன்லைனில் ஆரம்பித்திருக்கிறார்.

வகுப்பில் இணையும் அனைவருக்கும், கற்றுத் தரப்படும் அனைத்துப் பாடங்களும் பாட நூலாகவும் (பிடிஎஃப் வடிவில்) வழங்கப்படும்.

யாருக்கு?

இதுவரை எதுவுமே எழுதியிராதவர்கள். ஆனால் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்.

எழுத முயற்சி செய்துகொண்டிருப்பவர்கள். ஆனால் சரியாக வரவில்லை என்று கவலைப்படுபவர்கள்.

ஒரு சில பிரசுரங்கள் நடந்திருக்கின்றன; ஆனாலும் உரிய கவனம் கிடைக்கவில்லை என்று வருந்துபவர்கள்.

நிறைய பிரசுரமாகியிருக்கிறது; ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறது என்று தவிப்பவர்கள்.

தோன்றிற் புகழொடுதான் தோன்றுவேன் என்ற திட சித்தமுடன் களமிறங்குபவர்கள்.

எழுத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் முயற்சி செய்து பார்க்கவும் சாதனை புரியவும் ஆர்வம் கொண்டவர்கள்

சலிக்காமல் எழுதத் தயாராக இருப்பவர்கள். பரீட்சைகளில், புதிய முயற்சிகளில் வேட்கை கொண்டவர்கள்.

அனைத்துக்கும் மேலாக, நமக்குப் பிறகு நம் பெயர் நிலைத்திருக்க உறுதியாக நமது எழுத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்.

இவர்கள் அத்தனை பேருக்கும் இந்த வகுப்பு உதவும்.

FAQ
சிறுகதை எழுத மட்டும் – நாவல் எழுத மட்டும் – அபுனைவு எழுத மட்டும் என்று தனித்தனியே கற்க முடியாதா? மொத்தமாகத்தான் கற்க வேண்டுமா?
இப்பயிற்சி வகுப்புகளின் நோக்கம், வெற்றிகரமான எழுத்தின் அடிப்படைகளைச் சொல்லித் தருவது. அடிப்படை புரிந்துவிட்டால் ஒவ்வொரு துறையிலும் நுட்பங்களை அணுகிப் பயில்வது சுலபம். தனித்தனி வகுப்புகள் பிறகு வரலாம். இப்போது இல்லை.
இலக்கியமெல்லாம் சொல்லிக் கொடுத்து எழுத வராது என்கிறார்களே?
இது இலக்கிய வகுப்பல்ல. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், சமூக வெளி, ஓடிடி, புத்தகத் துறை, விளம்பரத் துறை எனப் பல்வேறு தளங்களில் எழுதத் தெரிந்தவர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. முறையான எழுத்துப் பயிற்சியின் மூலம் சரியான வாய்ப்புகளைப் பெற முடியும். மக்கள் விரும்பும் வெற்றிகரமான எழுத்தாளராக நீங்கள் உருவாக இந்த வகுப்புகள் உதவும்.
இந்த வகுப்பில் சேருவதன் மூலம் எனக்கு என்ன கிடைக்கும்?
* எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்ற தெளிவு முக்கியமாகக் கிடைக்கும்
* எதை எப்படி எழுதினால் ரசிப்பார்கள் என்ற நுட்பம் பிடிபடும்
* சொற்களை இடத்துக்கு ஏற்ப எப்படிக் கையாள்வது என்று புரியும்
* கதைகள், கட்டுரைகள் எழுதப் பயிற்றுவிக்கப்படும்
* கடினமான விஷயங்களைச் சுருக்கமாக, எளிமையாகச் சொல்வது எப்படி என்று தெரிந்துகொள்வீர்கள்
* உங்கள் எழுத்தைக் கொண்டே எழுதியது நீங்கள்தான் என்று அடையாளம் காணும் விதத்தில் எழுதுவது எப்படி என்று கற்பீர்கள்.
பதினாறு மணி நேர வகுப்பு என்பது எப்படி நடைபெறும்?
சனி-ஞாயிறுகளில் மட்டும் இந்திய நேரம் மாலை 7 முதல் 9 மணிவரை வகுப்பு நடக்கும். ஒவ்வொரு வகுப்பும் இரண்டு + இரண்டு மணி நேரம். இப்படி நான்கு வாரங்கள் – எட்டு வகுப்புகள்.
வகுப்பில் வேறென்னவெல்லாம் உண்டு?
ஒவ்வொரு நாளும் வகுப்பு நேரத்துக்குப் பிறகு கேள்வி நேரம், விவாத நேரம் உண்டு. சந்தேகங்களைக் கேட்டுத் தெளியலாம். சில வீட்டுப்பாடங்கள் தரப்படும். அவற்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்களுக்கான வாய்ப்புகள் சுட்டிக்காட்டப்படும்.
வகுப்புக்கு வந்தால் மெட்ராஸ் பேப்பரில் எழுத இடம் கிடைக்குமா?
உத்தரவாதம் கிடையாது. வகுப்பில் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து, பயிற்சிப் பாடங்களைச் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்து, கவனம் கவர்ந்தால் பத்திரிகை எழுத்துக்குப் பயிற்சி தந்து வாய்ப்பும் தரப்படும். இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட தேர்வு மட்டுமே. வேறு குறுக்கு வழியே கிடையாது.
வகுப்புக்கு வந்தால் புத்தகம் வெளியிடுவீர்களா?
வாய்ப்பில்லை. மெட்ராஸ் பேப்பரில் தொடர்ச்சியாக எழுதுவோரில் தனிச் சிறப்புடன் வெளிப்படுவோரின் முதல் புத்தகங்களை மட்டுமே மெட்ராஸ் பேப்பர் வெளியிடும். அதுவும் அபுனைவு நூல்கள் மட்டும்தான். கதை-கவிதைகள் கண்டிப்பாகக் கிடையாது.
கட்டணம் செலுத்தி வகுப்பில் சேர்ந்துவிட்ட பிறகு ஓரிரு வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் போனால் என்ன செய்வது?
பதிவு செய்யப்பட்ட விடியோ தரப்படும்.
பாடத்திட்டம் எழுத்து வடிவில் கிடைக்குமா?
அனைத்த வகுப்புகளும் முடிந்தபின்பு கிடைக்கும்.
இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்வதால் மட்டுமே நான் எழுத்தாளராகிவிட முடியுமா?
பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்திலும் பிறகு ஏதாவது கல்லூரியிலும் படித்துவிடுவதால் நீங்கள் உலக வங்கித் தலைவராகிவிட முடியுமா? அது போலத்தான் இது. உங்கள் இயல்பான எழுத்தார்வத்தை சரியான பாதையில் திருப்பிவிடுவதே இப்பயிற்சி வகுப்புகளின் நோக்கம். தொடர்ந்த, நீடித்த, சரியான முயற்சிகளும் புதிய அணுகுமுறைகளுமே வெற்றிகரமான எழுத்தாளராக உங்களை நிலை நிறுத்தும். அதற்கான அடித்தளம் நிச்சயம் இந்த வகுப்பில் அமைத்துத் தரப்படும்.
பயிற்சிக் கட்டண விவரங்களை எப்படிப் பெறுவது?
+91 8610284208  என்ற எண்ணுக்கு வாட்சப் செய்து விவரம் பெறலாம்.

எழுத்துப் பயிற்சி வகுப்புகள் குறித்த அனைத்து சந்தேகங்களையும் கேட்டறியவும் கட்டண விவரங்கள், வகுப்பு தொடங்கும் தேதி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளவும்  +91 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்க. அல்லது bukpetmedia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி