சூனிய உலக அதிகார அரசியலில் சிக்குண்டு, இரண்டு வருடங்களாக நிலக்கடலை ஓட்டினுள் சிறைப்பட்டுக் கிடந்த நம் சூனியனுக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அவனை கொல்வதற்கு, துரோகிகளின் எலும்புகளைக் கொண்டு செய்யப்பட்ட கப்பலில் இரண்டாம் அத்தியாயப் பயணம் தொடங்குகிறது.
சட்டென நெப்போலியப் போரில் பிரெஞ்சு சிறைக்கைதிகளை எலும்புகளாலான கப்பலில் கொண்டு சென்ற வரலாறு நினைவுக்கு வந்து சென்றது. எலும்புகளின் முக்கியத்துவம், அதன் விற்பனை கதைகள், உபயோகிக்கும் சடங்குகள் என நம் கற்பனை உலகம் விரிந்து கொண்டே இருக்கிறது.
பனிக்கத்தியால் துன்பறுத்தும் நிகழ்வு, சனிக்கோள் உருவகித்த விதம், பிசாசுக்களை விவரித்த வரிகளெல்லாம் என்னை மீண்டும் மீண்டும் படிக்க செய்தது. அற்புதமான புனைவு!
இறுதியில் கதைக்களத்தில் வரும் நீல நகரம் வெகுவாய் விறுவிறுப்பைக் கூட்டி விட்டது. பெருத்த சந்தேகமும் கூடவே தொற்றிக் கொண்டது. சூனியன் வேற்று கிரக வாசியா? அந்த நீல நகரம் பூமிப் பந்தா?
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!