வியர்க்கிறதே என்பதற்காக மூளையைத் திறந்துவைக்க முடியுமா? முடியும். யதார்த்த வாழ்விலிருந்து ஓர் அடியாவது மேலெழ விரும்பாத மானுடர் யாரேனும் இருக்கிறார்களா? ‘இந்தச் சலிப்புற்ற உலகியலிருந்து விலகி, சில மணிநேரங்களாவது மகத்தான உலகில் சிறிது நேரம் நடந்து திரும்பலாமே!’ என்று விழையாத மானுட உள்ளத்தைப் பார்க்கவே முடியாது.
இரவிலோ பகலிலோ பேருந்தின் நெடும் பயணம் விரக்தியைத் தந்தால் சன்னல்வழியாகத் தெரிவதைப் பொருட்படுத்தியோ பொருட்படுத்தாமலோ காணத் தொடங்கிவிடுவோம். அங்குத் தெரிபவற்றை நமது கற்பனைக்கு ஏற்ப விரித்து, பொருத்தி, புதிதாக்கி மகிழத் தொடங்கிவிடுவோம். விரக்தியிலிருந்து தப்பிக்க பகற்கனவுகளைத் தவிர மாபெரும் மருந்து வேறு இல்லை.
கபடவேடதாரி மாபெரும் பகற்கனவு. நமக்குப் பதிலாக எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் கனவுகாண்கிறார். நாம் அவரின் கனவுக்குள் நுழைந்துகொள்கிறோம். இந்த முதல் அத்யாயத்தில் அந்தக் கனவு ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட ராட்ஷத பலூன் போலப் புடைத்தெழுந்துவிட்டது. இனி, அதைப் பிடித்துக்கொண்டு நான் பறக்கத் தொடங்கிவிட்டேன்.
எனக்னைப் பேரச்சம் பிடித்துக்கொண்டது. உடல் வியர்த்து, குளித்ததுபோல இருக்கிறது. இதோ, இப்போது நான் என் மூளையைத் திறந்துவிட்டேன். பா. ராகவனின் எழுத்துகளின் வழியாகக் கனவுக்காற்று நன்றாக அடிக்கிறது. என் மூளை குளிரத் தொடங்கிவிட்டது.
வாழ்த்துகள்
சார்.