கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 50)

கபடவேடதாரியின் இறுதி அத்தியாயத்திற்குள் நுழைந்துவிட்டோம். கோவிந்தசாமி முதன் முறையாகத் தனது அறிவை பயன்படுத்தி செயல்படுவதை பார்க்கிறோம். சூனியன் தான் அனைத்து பாத்திரங்களையும் படைத்திருக்கிறான், அதுவரையில் நமக்கிருந்த குழப்பம் தீர்க்கிறது.
ஒரு பக்கம் கோவிந்தசாமி தான் நூற்று முப்பது பெண்களைத் திருமணம் செய்யப் போவதாகவும், மேலும் சாகரிகாவை விர்ச்சுவல் விவாகரத்து செய்யப் போவதாகவும் அறிவிக்கிறான். இன்னொரு பக்கம், சூனியனின் படைப்புகளுக்குள் யார் யாரை படைத்தது போன்ற குழப்பங்கள் எழுகின்றது.
ஒரு கட்டத்தில் சாகரிகாவே வந்து ஷில்பாவை தான் படைத்ததாகச் சொல்கிறாள். இதற்கு மேல் தாங்க முடியாமல் மயங்குகிறான் சூனியன். பின் அவனே தெளிந்து எழுந்து ஒரு முடிவுக்கு வருகிறான்.
கோவிந்தசாமியின் நிழலும் கோவிந்தசாமியிடம் சேர்ந்துவிட்டது. கோவிந்தசாமியின் அறிக்கையால் மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்து சேர்கின்றனர். சங்கரி பாலாவையும் பாரா விட்டு வைக்கவில்லை.
முட்டாள்களின் கூட்டம் என அறிந்ததும், பூகம்பச் சங்கை பயன்படுத்த எத்தனிக்கிறான் சூனியன். அனைவரும் மையத்தை அடைந்தவுடன் வாயிற் கதவைப் பூட்டி சாவியை புதைத்து விட்டு, அதற்கு மேல் செடி ஒன்றை நடுகிறான் கோவிந்தசாமி. பின் தடாகத்திற்கு சென்று மூழ்கி உயிரை விடுகிறான்.
எனக்கு இரண்டு விடயங்கள் குழப்பமாகவே இருக்கிறது.
ஒன்று, பூகம்பச் சங்கை கொண்டு சூனியன் வகுத்த உண்மையான திட்டம் என்னவாக இருக்கும் ?
இரண்டு, சூனியனின் படைப்புகளுக்கிடையே குழப்பத்தை விளைவித்துச் சூனியனின் திட்டத்தை மாற்றியது யாராக இருக்கும் ? அதை எப்படி செயற்படுத்தியிருப்பர்?.
கபடவேடதாரி முற்றும்.
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி