கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 49)

கபடவேடதாரியில் கடைசி இரண்டு அத்தியாயங்களே இருக்கின்றன. இந்த அத்தியாயத்தில், சூனியன் தனது மொத்த திட்டத்தையும் விவரமாக விளக்குகிறான். அவன் குற்றவாளியாக இருந்து தப்பித்தது முதல், நாம் மறந்திருந்த பூகம்ப சங்கு வரை நினைவுப்படுத்துகிறான்.
அனைத்துமே அவனது திட்டத்தின்படி நடந்து கொண்டிருந்தது. அப்போது தான் அதுல்யா அந்தப் பூகம்பச் சங்கை எப்போது பயன்படுத்தப் போவதாகச் சூனியனிடம் கேட்கிறாள். இந்தக் கேள்வியில் நரகேசரியும், முல்லைக் கொடியும் சேர்ந்து கொள்ள, காரணம் நாளைத் தெரியும் என்று சொல்லி விடுகிறான் சூனியன்.
இதற்கிடையில், சூனியனுக்கு, வெண்பலகையிலிருந்து ஆயிரக்கணக்கில் அழைப்புகள் வரவண்ணம் இருக்கிறது. அப்போது தான் அவன் திட்டத்தில் ஏதோ தவறு நடப்பதை உணர்கிறான். கோவிந்தசாமி சாகரிகாவை சந்தித்தது அவனது திட்டத்திலேயே இல்லை. ஷில்பா, சாகரிகாவை தனது கதாப்பாத்திரம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
கோவிந்தசாமியின் நிழலைப் பாரா தன் பக்கம் இழுத்து, ஷில்பாவை தீர்த்துக் கட்டுவதென முடிவு செய்யப்பட்டதாகச் சூனியனிடம் சொல்கின்றனர். இந்தப் புது குழப்பங்களால் சூனியன் படபடப்பாகிறான்.
நடப்பவையெல்லாம் அடுத்ததடுத்து சூனியனுக்கு அதிர்ச்சியையே தர, குழப்பம் விளைவிக்கக் காரணமானவரையே போட்டுத் தள்ளி விடும் முடிவோடு, பூகம்பச் சங்கைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறான் சூனியன்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *