புவியில் ஒருவர்

புவியிலோரிடம், 1998-99 ஆண்டில் நான் எழுதிய நாவல். 2000ம் ஆண்டு இது வெளியானது. இதற்குமேல் இந்த நாவலைப் பற்றிச் சொல்லப் பிரமாதமாக ஒன்றுமில்லை. வெளிவந்த வேகத்தில் விற்றுத் தீர்ந்தது என்று சொல்ல ஆசைதான். ஆனால் வெளிவந்த வேகத்தில் காணாமல் போனது என்றுதான் சொல்லமுடியும். என் கணிப்பில் சுமார் 75 முதல் 100 பேர் இதை வாங்கியிருக்கலாம், படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.  இட ஒதுக்கீடு பிரச்னையை முன்வைத்து – விபி சிங் பிரதமராக இருந்த காலத்து நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்நாவலைக் கச்சாமுச்சாவென்று பல பேர் திட்டியது மட்டும் நினைவிருக்கிறது. அவர்களில் 99% பேர் படிக்காமல் திட்டினார்கள் என்பதும்.

என்னைப் பொருத்தவரை இந்நாவல் பேசுகிற பிரச்னை, இன்றுவரை இந்தியப் பொதுவாக இருக்கிற ஒன்றே.

அது ஒருபுறமிருக்க, இந்நாவலின் பிரதி இருக்கிறதா, எங்கு கிடைக்கும் என்று கேட்டு அவ்வப்போது யாராவது அஞ்சல் அனுப்புவார்கள். இல்லை என்ற ஒரே பதிலை பல்வேறு சொற்களில் எழுதுவது வழக்கம். கையால் எழுதிய நாவல், ஓர் ஒளிநகல்கூட வைத்துக்கொள்ளாமல் அச்சுக்குக் கொடுத்தது என்பதால் மறு அச்சும் சாத்தியமில்லாமலே போய்விட்டது. என்னிடம் இருந்த ஒரு சில பிரதிகளையும் யார் யாருக்கோ கொடுத்துவிட்டிருக்கிறேன்.

அநேகமாக நான் இதை மறந்தேவிட்ட நிலையில் இன்று பால ஹனுமான் வலைப்பதிவில் என்றோ ராயர் காப்பி க்ளப்பில் நண்பர் திருமலை இதற்கு எழுதிய மதிப்புரை ஒன்றை மீள் பிரசுரம் செய்திருப்பதைக் கண்டேன். மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.

நாவல் இல்லாமல் போனால் என்ன? அதை ரசித்த ஒருவர் இருக்கிறார். போதும்.

 

கதையின் கரு சர்ச்சைக்குரியது. துணிந்து நாவலாக கொண்டு வந்துள்ள ராகவனது துணிவையும், கதைக்காக அவர் எடுத்துக் கொண்டுள்ள ஆராய்ச்சியும், உழைப்பும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. இட ஒதுக்கீட்டின் முரண்பாடுகள், அநீதிகள் என்ற கருவை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும், பாத்திரப் படைப்பிலும், கதை மாந்தர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிலும், கதை நடக்கும் களத்தினை விவரிக்கும் முறையிலும், வெகு நேர்த்தியான, கச்சிதமான நாவலைக் காண்கிறேன். சோகமான கதையோட்டத்திலும், பாராவின் மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆங்காங்கே புன்னகை பூக்க வைக்கிறது. பையனுக்குப் பெண்பார்க்கப் போகும் இடமும், ஜீயரை தரிசிக்கப் போகும் இடமும் குறிப்பிடத் தக்கவை…

மதிப்புரையை முழுமையாக வாசிக்க இங்கே செல்லலாம்.

புவியில் இன்னொருவரும் இருக்கிறார். அவர் இங்கே.

Share

17 comments

  • பாரா சார் – இந்த நாவல் உங்க சின்னப் பாட்டியோட குடும்பக் கதை தானே?

  • பாரா சார், நீலக்காகம் சண்டே பரக்கும்ன்னு சொன்னீங்களே, ஒண்ணயும் காணோமே? மண்டேவாது பறக்குமா?

  • ஜெராக்ஸ் காப்பி கிடைத்துவிடும் போலிருக்கே. பத்ரிகிட்ட கேட்டா இன்னொரு பதிப்பு போட மாட்டாரா?

  • இல்லை பாரா! நிறய பேர் படித்திருப்பார்கள் ! ஆனால் வெளி வந்த போது இருக்காது. புது புத்தங்கள் படித்து பிறகு தேடிபிடித்திருப்பார்கள் !

    சிங்கை நூலகத்தில் நான் படித்தேன் கொஞ்சம் “புளி” வாசம் வந்தாலும் என்னளவில் நெருக்கமாக உணர்ந்தேன் !

    பிறகு மேலும் வளரந்த பிறகு நீங்கள் அதை திரும்பவும் தொடவே இல்லையே 🙁

  • ஞாயிறும் ஆச்சு எங்கே நீலக்காகம் இன்னும் பறக்கவில்லை? “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி”

  • Sa.Thirumalai
    May 9th, 2011

    பாலஹனுமான்

    புத்தகப் பார்வையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. பிராமணர்களில் அனைவருமே வெள்ளை வேட்டிக் கொண்டு அள்ளித் தின்னும் உயர்மட்டத்தினர் கிடையாது. அங்கு அழுக்கு வேட்டிக் கொண்டு நக்கித் தின்னும் பிராமணர்கள் ஏராளம் உண்டு. ராமானுஜர் போகிற போக்கில் நாமத்தைச் சார்த்தி விட்டுப் போய்ச் சேர இன்று அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் அவதிப் படும் பிராமணர் ஆயிரக் கணக்கில் உண்டு. அவர்கள் எல்லோரும் அரசியல் குறுக்குச் சூட்டில் அடி வாங்கி அழிந்து போனவர்கள். இந்த நாவல் அப்படிப் பட்டவர்களின் கதையே. துணிந்து எழுதிய பா ரா வுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.

    பா ரா

    நான் ஹரனுக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்ன வாய் முகூர்த்தம் இந்தப் புத்தகம் என்னிடம் இருந்து தொடர்ந்து இரவல் வாங்கப் பட்டு வலம் வந்து கொண்டிருக்கிறது. அதனால் உடனடியாக அனுப்பி வைக்க இயலவில்லை. அடுத்த மாதம் நானே ஹரனிடம் நேரில் சேர்ப்பித்து விடுகிறேன். இப்பொழுது நண்பர் பால ஹனுமான் படித்துக் கொண்டிருக்கிறார். உங்களிடம் இருந்து விடுபட்டுப் போனத் தரவுகளையும் சேர்த்து நாவலை இன்னும் முழுமைப் படுத்தினால் மகிழ்வேன்.

    அன்புடன்
    ச.திருமலை

  • அன்பு பாரா, இது வரை உங்களின் இந்நாவலைக் கேள்விப்பட்டதில்லை. ஆனால், மதிப்புரைகளைப் படித்தவுடன் அதன் வீர்யம் புரிந்தது. நியாயமான கேள்விகள் எழுப்பியுள்ளீர்கள். இன்னும் எவ்வளவு காலம் தான் இந்த ஒதுக்கீட்டுப் பிரச்சினை இருக்குமோ? பொருளாதார அடிப்படை தான் சரியான அளவுக்கோல். நாவல் கிடைத்தால் கண்டிப்பாக படிப்பேன். கிழக்கின் மூலம் மறுபதிப்பை எதிர்பார்க்கிறேன்.

  • வணக்கம்.
    வணங்கி மகிழ்கிறேன்.
    உள்ளுக்குள்ளே கனன்று கொண்டே இருக்கும் ஒரு அக்னிக் குஞ்சொன்றை இங்கே காண்கிறேன். அந்த அக்னிக் குஞ்சின் முழு பரிமனாத்தை ஓரளவுக்கு சரியாக பிரதிபலிக்கும் வாக்கு லாவகம் உங்கள்வசம் பரிபூர்ணமாக உள்ளது என்பதாலே, அந்த ஒருவரை இப்புவியிலே எப்படியாவது வாசிக்க வேண்டும் என்கிற ஆவலை கூர் தீட்டி உள்ளேன்.முழுசும் படித்து உள்வாங்கும் ஆர்வம் உள்ளது.
    கிழக்கின் வெளிச்சமாக அது மீண்டும் வரலாம். அல்லது, யாரேனும் வேறு ஒரு மகானுபாவர் அதை செய்வார்.
    காட்டிடைப் போந்தினிலே வைக்கவேண்டிய அக்னிக் குஞ்சு அது.
    பாரா, பலரும் இதைப் பாராது போனால் பரவாயில்லை.
    பார்க்க வேண்டியவர்கள், பாராது இருக்க மாட்டார்கள்.
    அன்புடன் நினைவுகூர்ந்து பகிர்ந்தமைக்கு வந்தனமு.
    நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  • This is really fantastic noval. Its unfortunate that its not been read or sold. Its much more unfortunate that Para himself is not ready to promote. Its like Kamal’s old movies, which is ahead of its period. Definately, it will be a huge hit if you publish it again.

  • அன்புள்ள பா ரா

    அடுத்த மாதம் கட்டாயமாக ஹரனிடம் சேர்ப்பித்து விடுகிறேன். இந்த புத்தகத்தை நன்றாக கெட்டி அட்டையில் பைண்ட் செய்து பெர்க்கிலி பல்கலை நூலகத்தின் தரையில் இருந்து நான்கு அடுக்குகள் கீழேயுள்ள தளத்தில் தமிழ் நூல்கள் இருக்கும் அலமாரி ஒன்றில் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். நீங்கள் தொலைத்தாலும் தமிழ் நூல்களைப் பத்திரமாகப் பாதுகாக்கும் இடங்கள் உலகில் சில உள்ளன 🙂

    அன்புடன்
    ச.திருமலை

  • அன்புள்ள பா ரா,
    ” தமிழ் நூல்களைப் பத்திரமாகப் பாதுகாக்கும் இடங்கள் உலகில் சில உள்ளன.”
    ஆஹா
    படிக்கும்போதும், கேட்கும்போதும்,காதிலே தேன் வந்து பாய்கிறது.
    இது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.
    அவ்வப்போது, இங்கே ஆஸ்திரேலியாவிலே லைப்ரரி உள்ளே பார்க்கும்போது தெரிந்து கொள்கிறேன்.
    உண்மை.
    நன்றி. வாழ்க வளமுடன்.
    வணங்கி மகிழ்கிறேன்.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  • dear paara,
    i am a fan of ur writings from ur kalki days.it is a pity i have not come across ur novel till date.whose mistake is this? any way many people like me want to read the same now.it is a burning problem for us,our unfortunate kith and kin.kindly arrange to give the novel in parts in ur blogspot.will u do this service?

  • dear paara,
    can we expect atleast excerpts from ur novel puviyiloridam ?
    pl take quick action.

  • அன்புள்ள பாரா
    வாழ்த்துக்கள்.

    புவியில் ஓரிடம் குறித்து புவியில் ஏதாவது புது நல்ல தகவல் உண்டோ ? முடிந்தால், ஒய்வு அமைந்த போது சொல்லி வைக்கவும். அறிந்து கொள்ள ஆசை. யாராவது மறுபதிப்பு செய்துள்ளார்களோ ? இதுவரை இல்லை என்றால், இனி செய்ய, எவ்வோளோவு பொற்கிழிகள் தேவை என்பதை தெரிந்து கொள்ள ஆசை.

    டிவி சீரியலால் சீராக சீரழிந்து ஒழியும் நமது சீந்துவாரில்லா சமூகத்திலே அந்த கைங்கர்யத்துக்கு உங்களால் ஆனதையும் நீங்கள் செய்கிறீர்கள்போல என்பதை கேள்விப் படும் பொது, YOU too Brutus என்றே தோன்றுகிறது. குறையொன்றுமில்லை என்று நீங்கள் இருப்பது வைகுந்தம் என்றாலும், ” நல்லா இரு ” என்று வாழ்த்தவே தோன்றுகிறது.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீநிவாசன்.

  • நன்றி பாரா ,
    நன்றி.
    ” புவியிலோரிடம் – உள்ளம் மாறவில்லை. ”
    மிகவும் சந்தோஷமாக இருக்குது.
    வாழ்த்துக்கள்.
    உம் நலத்துக்கு பிரார்த்தித்து வருவேன்.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி