நண்பர்களுக்கு வணக்கம். பொதுவாக எனக்கு ஒரு ராசி உண்டு. புத்தகக் கண்காட்சி, லோக்சபா தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஏதாவது வெளியூர் நிகழ்ச்சி என்று லைவ் அப்டேட் செய்யலாம் என்று உத்தேசித்தால், விட்டேனா பார் என்று எப்போதும் விதி விளையாடும்.
உடம்புக்கு முடியாமல் போகும், கை கால் உடையும், ஜுரம் வரும், வேறு ஏதாவது வேலைகள் வரும், அட ஒன்றுமில்லையென்றால் இணையத் தொடர்பாவது இல்லாமல் போகும்.
எனவேதான் இன்றைய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை கவர் செய்யலாம் என்று தோன்றியபோது அது பற்றிய முன்னறிவிப்பு ஏதும் தரவில்லை.
இப்போதைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதால் மங்களகரமாகவே தொடங்கலாம் என்று நினைக்கிறேன். நடுவில் நின்றுபோனால் நான் பொறுப்பல்ல. நாராயணனே பொறுப்பு.
இன்று ஒருநாள் மட்டும் என் இணையத்தளத்தின் இந்த முதல் பக்கத்தில் இரண்டு போஸ்ட்கள் காண்பிக்கப்படும். முதலில் இருப்பது நகரும் செய்திகளுக்காக. அவ்வப்போது ரெஃப்ரெஷ் செய்தீர்களென்றால் ஏதாவது புதியது அகப்படும்.
கீழே உள்ள பதிவில் செய்தித் துணுக்குகள், தகவல்கள் வரும். அதையும் ரெஃப்ரெஷ் செய்துதான் பார்க்கவேண்டும். புதிய தகவல்கள் பதிவின் முதல் பேராவாக வரும்படி செய்கிறேன். நிறைய போஸ்ட் போட்டு போரடிக்காமல் ஒரே பதிவில் அப்டேட் செய்யலாம் என்று நினைத்ததன் விளைவு இது.
இந்திய ஜனநாயகம் தழைத்தோங்க, தொங்கு நாடாளுமன்றம் தங்கி விளையாட ஏதோ நம்மாலான சிறு சேவை.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
வாழ்த்துக்கள் சார் !!
உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போகாமல் இருந்தால், நாட்டுக்கு இவ்ளோ பெரிய சோதனை வரும்னு இப்பத்தான் தெரியுது!