தேர்தல் 2009 – என்ன சொல்கிறது?

* தேர்தல் முடிவுகள் பெரிய அதிர்ச்சிகளைத் தராமல் வந்துகொண்டிருக்கின்றன.

* மத்தியில் ஆளும் காங்கிரஸ் திரும்பவும் ஆட்சியமைப்பது அநேகமாக உறுதியாகியிருக்கிறது. மீண்டும் மன்மோகன் சிங்கின் பெயரால் சோனியா ஆள்வார்.

*எதிர்பார்த்ததற்கு மாறாகத் தமிழகத்தில் திமுக கூட்டணி கணிசமான இடங்களில் முன்னணியில் இருக்கிறது.
எதிர்பார்த்தபடியே அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் மூச்சு விட்டுக்கொள்கிறது.

* ஈழப் பிரச்னையோ, மதவாதமோ அடித்தட்டு மக்களிடம் எடுபடாது என்பது நிரூபணமாகியிருக்கிறது.

* ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி, நிறைய பாலங்கள், சாலைகள், பேருந்து வசதிகள், வேலை நியமனங்கள்தான் திமுகவுக்கு சாதகமான வோட்டுகளாக மாறியிருக்கின்றன.

* குடும்ப உறுப்பினர் முன்னேற்றம், வாரிசு அரசியலெல்லாம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன. இழந்துகொண்டிருக்கும் இடங்கள்கூட ஈழத்தை முன்வைத்து கருணாநிதி அரங்கேற்றிய மிகச் சமீபத்திய கேலிக்கூத்து நடவடிக்கைகளால் மட்டுமே என்று நினைக்கத் தோன்றுகிறது.

* கட்சிகளின் பணபலம் தேர்தல் முடிவினைக் கணிசமாக பாதிக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.

* விலைவாசி உயர்வு ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படாதது ஆச்சர்யம்.

* தமிழகத்தைப் பொருத்தவரை திமுக – அதிமுக தவிர அவர்களது கூட்டணியில் உள்ள எந்த ஒரு கட்சியையும் மக்கள் சற்றும் பொருட்படுத்தவில்லை என்பது தெரிகிறது.

* பாமகவுக்கு விழுந்துகொண்டிருக்கும் அடி, இனி அவர்கள் மீண்டும் இடம் மாறும்போது ஒரு கணம் யோசிக்கச் சொல்லும்.

* பிரபல காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரும் குறிப்பிடத் தகுந்த அளவு முன்னணியில் இல்லை என்பது படித்த / முன் தலைமுறையைச் சார்ந்த வாக்காளர்கள் மத்தியில் அவர்கள் பெற்றுவரும் நம்பிக்கை இழப்பைக் காட்டுகிறது. ஈழப் பிரச்னைக்கு காங்கிரஸை மட்டும் தண்டித்தால் போதும் என்றும் தமிழ் மக்கள் கருதியிருக்கிறார்கள். ஈழம் ஒரு முக்கியப் பிரச்னையாகப் பார்க்கப்பட்டிருக்குமானால் பாமக, மதிமுக இத்தனை மோசமாகப் பின் தங்கியிருக்கா.

* இனி யோசிக்கவேண்டியது அழகிரிக்கு எந்தத் துறை என்பதைப் பற்றித்தான்.
(-காலை 11.27க்கு எழுதுவது. அப்டேட் செய்யப்படும்.)

Share

3 comments

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி