* இன்று காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்தே திமுக பெற்று வந்த முன்னணி நிலவரங்கள், பொதுவில் நிலவிய அதிருப்தி மனநிலைக்கு எதிரான முடிவு வரப்போகிறது என்பதைச் சுட்டிக்காட்டியது.
* நாற்பது தொகுதிகளுக்கும் முடிவுகள் வந்துவிட்ட நிலையில் திமுக (18) கூட்டணி 28 இடங்களையும் அதிமுக(9) கூட்டணி பன்னிரண்டு இடங்களையும் பெற்றிருக்கின்றன. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற அபார வெற்றியுடன் இதனை ஒப்பிட இயலாது என்றபோதிலும் இந்த வெற்றியையும் கணக்கில்கொண்டாக வேண்டும். முக்கியமானதுதான்.
* இலங்கைப் பிரச்னை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவின் விளைவான வன்முறைச் சம்பவங்கள், வாரிசு அரசியல் ஆகியவை திமுகவுக்கு முற்றிலும் எதிரான தீர்வைத் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதி எதிர் மட்டுமே.
* அடித்தட்டு வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்ற கவர்ச்சித் திட்டங்கள் பிடித்திருக்கின்றன. நல்ல சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், பொதுவில் – மாநில அளவில் பெரிய பிரச்னைகள் இல்லாமல் இருப்பது ஆகியவையே முக்கியமாகப் பட்டிருக்கின்றன. நிறைவேற்றப்படாத பழைய தேர்தல் வாக்குறுதிகளைக் காட்டிலும் நிறைவேற்றப்பட்ட சில வாக்குறுதிகள் திருப்தியளித்திருப்பது உறுதியாகிறது.
* அதிமுகவுக்கு அவசியம் வாக்களித்தே தீரவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் பாமர மக்களுக்கு இல்லை. பொதுவில் திரண்ட திமுக எதிர்ப்பு வோட்டுகள் மட்டுமே அதிமுகவின் வெற்றி வோட்டுகளாகியிருக்கின்றன என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஜெயலலிதாவின் திடீர்த் தமிழ் ஈழ ஆதரவு அவருக்கு எவ்வித சாதகப் பலனையும் தரவில்லை.
* திமுக எதிர்ப்பு வோட்டுகள்கூட அதிமுகவுக்குப் போகுமே தவிர தமிழகத்தின் இதர கட்சிகள் அனைத்தும் உதிரிகள்தாம் என்பது உறுதியாகியிருக்கிறது. பாமகவின் படுதோல்வி, அக்கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலின்மீது மக்கள் கொண்டுள்ள கடும் வெறுப்பினை வெளிக்காட்டியிருக்கிறது. வைகோ தோற்றிருப்பது, இலங்கைப் பிரச்னையை மக்கள், வாக்களிக்கையில் யோசிக்க வேண்டிய விஷயமாகப் பார்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. சீமான், பாரதிராஜா போன்றவர்களின் பேச்சுகளை ரசித்தவர்கள், அதையும் திரைப்படக் காட்சிகளாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
* காலை வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் மிகவும் பின் தங்கியே இருந்தது. ஆனால் பிற்பகலில் நிலவரம் மாறி, காங்கிரசும் தமிழகத்தில் கணிசமான இடங்களை வென்றிருக்கிறது. இது, இலங்கைப் பிரச்னையை இந்திய தேசியத் தேர்தலுடன் முடிச்சுப்போட மக்கள் அறவே விரும்பவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.
* ஈழத்தை வைத்து இங்கே இனி அரசியல் செய்வது செல்லாது என்று எல்லா கட்சிகளுக்குமே புரியும் தருணமாக இது அமைந்திருக்கிறது.
* தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக, எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லையென்றாலும், பல இடங்களில் அந்தக் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை மிகுந்த வியப்பைத் தருகிறது. அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறார் என்று உறுதியாகத் தெரிகிறது.
* தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலையெடுப்பது என்பது அறவே சாத்தியமில்லை என்பதை இத்தேர்தல் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது. மதவாதம், இனவாதம், பிரிவினைவாதப் பேச்சுகளுக்குத் தமிழ் மக்கள் மனத்தளவில் தள்ளியே நிற்கிறார்கள் என்பது தெரிகிறது.
* திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும் இழந்திருக்கும் தொகுதிகள் பற்றி அவர்கள் நிச்சயம் யோசிக்கவேண்டியிருக்கும். ஐந்து வருடங்களில், மத்தியில் காங்கிரஸ் மீது வைத்த நம்பிக்கை சற்றும் மாறாத நிலையில் மாநிலத்தில் திமுகமீது கொண்ட நம்பிக்கை பாதியாகியிருப்பதன் காரணத்தை அவர்கள் யோசிக்கலாம்.
* இந்தத் தேர்தல் முடிவுகள், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான சரியான ஆயத்தங்களுக்கு அவசியம் வழிவகுக்கும். இரு பெரும் இயக்கங்களும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இதுநாள் வரை அளித்துவந்த முக்கியத்துவத்தை இனி விஜயகாந்தின் தேமுதிகவுக்கு அளிக்க நினைக்கக்கூடும்.
* அது நல்லதா அல்லதா என்பதை அதற்கடுத்த தேர்தல் நிரூபிக்கும்.
//* நாற்பது தொகுதிகளுக்கும் முடிவுகள் வந்துவிட்ட நிலையில் திமுக (18) கூட்டணி 28 இடங்களையும் அதிமுக(9) கூட்டணி பன்னிரண்டு இடங்களையும் பெற்றிருக்கின்றன. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற அபார வெற்றியுடன் இதனை ஒப்பிட இயலாது என்றபோதிலும் இந்த வெற்றியையும் கணக்கில்கொண்டாக வேண்டும். முக்கியமானதுதான்.//
சென்ற முறை இருந்த கூட்டணியில் இருந்த 4 கட்சிகள் எதிர்முகாம் சென்றதை வைத்து பார்த்தால் இந்த வெற்றி தான் பெரிது
//* அடித்தட்டு வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்ற கவர்ச்சித் திட்டங்கள் பிடித்திருக்கின்றன. நல்ல சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், பொதுவில் – மாநில அளவில் பெரிய பிரச்னைகள் இல்லாமல் இருப்பது ஆகியவையே முக்கியமாகப் பட்டிருக்கின்றன. நிறைவேற்றப்படாத பழைய தேர்தல் வாக்குறுதிகளைக் காட்டிலும் நிறைவேற்றப்பட்ட சில வாக்குறுதிகள் திருப்தியளித்திருப்பது உறுதியாகிறது.//
2006ல் அளித்த 37 வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேறிவிட்டன சார்
//* அதிமுகவுக்கு அவசியம் வாக்களித்தே தீரவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் பாமர மக்களுக்கு இல்லை. பொதுவில் திரண்ட திமுக எதிர்ப்பு வோட்டுகள் மட்டுமே அதிமுகவின் வெற்றி வோட்டுகளாகியிருக்கின்றன என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஜெயலலிதாவின் திடீர்த் தமிழ் ஈழ ஆதரவு அவருக்கு எவ்வித சாதகப் பலனையும் தரவில்லை.//
உண்மை !!
//* திமுக எதிர்ப்பு வோட்டுகள்கூட அதிமுகவுக்குப் போகுமே தவிர தமிழகத்தின் இதர கட்சிகள் அனைத்தும் உதிரிகள்தாம் என்பது உறுதியாகியிருக்கிறது. பாமகவின் படுதோல்வி, அக்கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலின்மீது மக்கள் கொண்டுள்ள கடும் வெறுப்பினை வெளிக்காட்டியிருக்கிறது. வைகோ தோற்றிருப்பது, இலங்கைப் பிரச்னையை மக்கள், வாக்களிக்கையில் யோசிக்க வேண்டிய விஷயமாகப் பார்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.//
உண்மை
//காலை வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் மிகவும் பின் தங்கியே இருந்தது. ஆனால் பிற்பகலில் நிலவரம் மாறி, காங்கிரசும் தமிழகத்தில் கணிசமான இடங்களை வென்றிருக்கிறது. இது, இலங்கைப் பிரச்னையை இந்திய தேசியத் தேர்தலுடன் முடிச்சுப்போட மக்கள் அறவே விரும்பவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.//
திமுக போட்டியிட்ட இடங்களில் எத்தனை சதம் வெற்றி
காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் எத்தனை சதம் வெற்றி என்ற எளிய கணக்கு போட்டு பார்த்தால் உண்மை என்னவெண்ரு அழுத்தம் திருத்தமாகவே தெரிகிறதே சார் 🙂 🙂
//* தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக, எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லையென்றாலும், பல இடங்களில் அந்தக் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை மிகுந்த வியப்பைத் தருகிறது. அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறார் என்று உறுதியாகத் தெரிகிறது.//
அடுத்த முறையும் தனித்து போட்டியிட்டால் மட்டுமே !!
//* தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலையெடுப்பது என்பது அறவே சாத்தியமில்லை என்பதை இத்தேர்தல் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது. மதவாதம், இனவாதம், பிரிவினைவாதப் பேச்சுகளுக்குத் தமிழ் மக்கள் மனத்தளவில் தள்ளியே நிற்கிறார்கள் என்பது தெரிகிறது.//
உண்மை
//* திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும் இழந்திருக்கும் தொகுதிகள் பற்றி அவர்கள் நிச்சயம் யோசிக்கவேண்டியிருக்கும்.//
திமுக இழந்தது மூன்று மட்டுமே. காங்கிரசுக்கு தான் பெரிய இழப்பு.
//ஐந்து வருடங்களில், மத்தியில் காங்கிரஸ் மீது வைத்த நம்பிக்கை சற்றும் மாறாத நிலையில் மாநிலத்தில் திமுகமீது கொண்ட நம்பிக்கை பாதியாகியிருப்பதன் காரணத்தை அவர்கள் யோசிக்கலாம்.//
இல்லை சார்
திமுக 21ல் மூன்றில் மட்டுமே தோற்றிருக்கிறது. அதிக இடங்களை இழந்தது காங்கிரஸ் தான். அதிலும் இது நாடாளுமன்ற தேர்தல். இதை வைத்து பார்த்தால் மாநிலத்தில் திமுக மீது வைத்த நம்பிக்கை சற்றும் மாறாமல் காங்கிரஸ் மீது கொண்ட நம்பிக்கை பாதியாகியுள்ளது என்றே கருத வேண்டும்
காரணம் – ஈழம் தவிர வேறு ஏதாவது இருக்கிறதா என்ன
[…] http://writerpara.com/paper/?p=677 […]
காங்கிரஸ் 16ல் 8 இடம் வெறி
திமுக 21ல் 18 இடம் வெற்றி
மீதி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
நேற்று வரை
இவன் இருந்தான்
வன்னியனாக !
இன்று முதல்
இவன் ஆக்கப்பட்டான்
அன்னியனாக !!
இவன் நம்மை
விட்டுப்போனான் ஏழரைச்
சனியனாக !!!
(2002 முதல் 2009 வரை 7,1/2 ஆண்டுகளாக ரஜினி ரசிகர்களை ஆட்டிப்படைத்த சனியன் இன்றுடன் ஒழிந்தது)
Bruno’s analysis does not make sense. If Eelam is anywhere on top of the mind for people, then the most pro Eelam candidatee Vaiko would not have lost to Congress which is the most anti-Eelam party. The different rates of success for DMK and congress can be attributed to local factors- for example, congress chances were hurt in some western tamil nadu constituencies like Erode due to the formation of Goundar party. Also, congress organization is much weaker compared to DMK.
பா.ம.க. ஒழிந்தது என்று சந்தோஷப்படுகிறார் ரஜினி ரசிகன். ஆனால், இங்கே விட்டால் அங்கே, அங்கே விட்டால் இங்கே என்று மாறி மாறி அவரைக் கூட்டுச் சேர்த்துக்கொள்ள இரு கழகங்களும் தயாராக இருக்கின்றனவே..! அதிருக்கட்டும், திரு. பா.ரா. இலங்கைப் பிரச்னையை மக்கள் பெரிதாக எடுத்துக்கொண்டார்களோ இல்லையோ, தகுதி வாய்ந்த ஒரு தலைவரான வைகோ இந்தத் தேர்தலில் தோற்றுப் போனதில் எனக்கு வருத்தம்தான்.
//Bruno’s analysis does not make sense.//
You could have pointed out which part does not make sense, so that it will be easy to substantiate my position
//If Eelam is anywhere on top of the mind for people, then the most pro Eelam candidatee Vaiko would not have lost to Congress which is the most anti-Eelam party.//
Eelam was not at the TOP of the mind
The issue at the Top of Mind was Tamil Nadu -> A pro public polpulist government in Tamil Nadu should complete the term.
Eelam was obviously next to the issue of a good government at the state.
What may appear as good government for you need not appear as good government to the majority of people in Tamil Nadu –> there lies your problem 🙂
//The different rates of success for DMK and congress can be attributed to local factors- for example, congress chances were hurt in some western tamil nadu constituencies like Erode due to the formation of Goundar party.//
Not at all.
You can compare the previous year election data.
Also note that the Bigwigs of Congress has lost which surely tells you the message. Whether the message is to your liking or not is another issue altogether
//If Eelam is anywhere on top of the mind for people, then the most pro Eelam candidatee Vaiko would not have lost to Congress which is the most anti-Eelam party.//
May be the public were not ready to accept them taking sides with a party which has been vehemently anti-eelam for so many years
//Also, congress organization is much weaker compared to DMK.//
OK Tell me whether Congress was weak in Theni or Myladothurai 🙂 Then why did they loose in Myladothurai.
The answer is for every one to see, whether you personally like it or not 🙂 🙂
Offering money and comforts for vote is a good sign indicating that people who do this have fell in trap where they can never satisfy people, because, these or just ghee poured on fire and not water. People will never say enough, after all they are a collection of indhriyas…
Contentment is achieved only by showing the way and making people work for it.
// கட்சிகளின் பணபலம் தேர்தல் முடிவினைக் கணிசமாக பாதிக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.//
உண்மை. கல்விச்சாலைகள் அரசிடமும், கள்ளுக்கடைகள் தனியாரிடமும் இருந்தது போய், கல்விச்சாலைகள் தனியாரிடமும், கள்ளுக்கடைகள் அரசிடமும் வந்த போதே எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. ஆண்களுக்கு டாஸ்மாக், பெண்களுக்கு மெகா ஸீரியல் என மூளையை மழுங்கடித்தது போதாதென்று, பணத்தை தண்ணீராய் செலவிட்டு, பணத்தை கொடுத்து. சேலையை கொடுத்து, பிரியாணி போட்டு மக்களின் மனசாட்சியை விலை பேசி பெற்ற வெற்றி இது. சென்ற தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் ஜெயலலிதா தன் கொள்கைகளை/நிலைப்பாடுகளை(சென்ற முறை கருணாநிதி டிவியா? நான் லேப்டாப் தருவேன் என்றது; இந்த முறை அவர் போர் நிறுத்தமா? நான் ராணுவம் அனுப்பி ஈழம் பெற்றுத்தருவேன் என்றது) திடீரென மாற்றிக்கொண்டதும் ஒரு காரணம். மொத்தத்தில் ஜனநாயகம், பணநாயகமாக மாறியது அனைவரும் அறிந்ததே. அண்ணன் அழகிரி ரயில்வே அமைச்சராக வாழ்த்துக்கள். 🙂
// கட்சிகளின் பணபலம் தேர்தல் முடிவினைக் கணிசமாக பாதிக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.//
உண்மை. விஜயகாந்த் பெட்டி பெற்றுக்கொண்டு வாக்குகளை பிரித்ததும் இன்னொரு முக்கிய காரணம். இல்லாவிட்டால் எதிர் கட்சிகள் மேலும் சில இடங்கள் வெற்றி பெற்றிருக்க வாய்ப்புண்டு.
[…] மே 18, 2009 · மறுமொழிகள் ஏதும் இல்லை பா ராகவன் :: Pa. Raghavan | writerpara.com » தேர்தல் 2009 – என்ன சொல்கிறது? | இந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன ச
விஜயகாந்த் ஒட்டுகள் அதிகம் பெறுவது மக்கள் இரு கழங்களை தவிர்த்து ஒரு மாற்று கட்சிக்கு ஏங்குவதை காட்டுகிறது. ஆனால் அவரால் ஓட்டுக்களை பிரிக்க முடிந்ததே தவிர ஒரு தொகுதியிலும் ஜெயிக்க முடியவில்லை. விஜயகாந்த் 2011 சட்டசபை தேர்தலுக்கு முன் நிறைய அரசியல் ஸ்டன்டுகளை நிகழ்த்தி மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பது நல்லது. முடிந்தால் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டு வைத்து ஒரு நல்ல எதிர்கட்சியாக செயல்படலாம், இதன் மூலம் அவரின் செல்வாக்கு மக்களிடையே உயரும்.
Friends
Just My opinion
1. The ideology of Eelam didnot play a role is not correct.
Because,When there was Anti DMK sentiments people voted to ADMK.When there was Anti ADMK sentiments, then everyone made DMK vivtorious. About Elam issue most of the people wanted a good solution. But there was no right reason to punish or support either of the kazhagams on the issue as both of them played drama. Half of the voters got confused and half of them ignored as there was no big complaints for a common on ruling party as such.
If the There had been some other oppurtunity where people would thought that they are punishing the parties of letting eelam in that state, that would have reflected in the party
2. It is a same sort of mistake what J did as BJP did in the countrywide. BJP could perform as an active Opposition, that is what the main reason for victory of congress.When it cannot find an alliance in few states, then how we can expect them to form a government.
3. MK has proved again how big master he is in the number game even when previous allies left him.
Even though bharathiraja,Seeman and others voiced, they did against congress and you can see the result by reduction in numbers.
The Anti Congress/DMK sentiment voters was given no proper choice and that is the major reason what MK was Succesful.
Otherwise do you think people vote on the basis of Manifesto. I dont know how many percentage people who voted are aware of that.
So viewers,please dont try to make a myth that there is no Eelam sentiments in tamilnadu and that too when we have the news that Prabhakaran is dead. Hope PaRa will also accept to this.
It is all politics, if someone can play smart then there will be no DMK sentiment tomorrow.
விமர்சகர்கள் எல்லாம் எல்லாத்துக்கும் போஸ்ட்மார்ட்டம் எல்லாம் நல்லாதான் பண்ணுறீங்க. எங்களை மாதிரி தொண்டர்கள் அல்லது குண்டர்கள் எலெக்சனுக்கு முன்னாடி கதறி கதறி சொன்னோமே கிரவுண்ட் லெவலை. யாராவது ஒத்துக்கிட்டீங்களா? அதுவும் கடைசி நேரத்தில் கூட ஒரு விமர்சகர் என்னை இப்படி தேற்றினார் “உன்னோட உணர்ச்சிகளை மதிக்கிறேன். ஆனா நெலைமை அப்படியில்லே”
தேவதூதர்களே இனிமேலாவது கொஞ்சம் தரையிறங்கி வாருங்கள் 🙂