சாகரிகா மீது கோவிந்தசாமியின் நிழல் கொள்ளும் மையல் கோவிந்தசாமி கொண்டதை விடவும் அதிகமாக இருந்த போதும் நிழலுக்கு சாகரிகா எதுவும் செய்யும் உத்தேசம் கொண்டிருக்கவில்லை. அதை நிழல் உணரவில்லை!
சாகரிகாவுக்கு எதிராக செயல்படுவது யார்? என்ற ஷில்பாவின் தூண்டிலுக்கு நாற்பதாண்டு காலம் தனக்குக் கூடு தந்தவனை விட்டுக் கொடுக்காமல் நிழல் பேசுகிறது! அதேநேரம், நிழலின் மூலம் தன் மீது விழுந்த பழியை துடைக்க சாகரிகா முயல்கிறாள்.
நீலநகரவனத்தில் குடியேறும் ஒவ்வொருவரும் ஒரு சமஸ்தானத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற வசதியைப் பயன்படுத்தி ஷில்பா கோவிந்தசாமியின் நிழலை நீலவனவாசியாக்கி அவன் உருவாக்கும் சமூகம் மூலம் சாகரிகாவுக்கு எதிரானவர்களை எதிர்கொள்ள திட்டமிடுகிறாள். தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் சமஸ்தானாதிபதியாக்கப் போகும் திட்டத்தை இருவரும் கோவிந்தசாமியின் நிழலுக்குச் சொல்கிறார்கள். இது போதாதா? அன்பின் பொங்கி வழியும் நிழல் தான் ஒரு சக்கரவர்த்தியாகப் போகும் உணர்வில் மிதக்க ஆரம்பிக்கிறது. மூவரும் நீலநகரவனம் நோக்கி பயணிக்கிறாள்.
இந்த பயணம் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றித் தருமா? காத்திருப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.