26 comments

  • வாழ்த்துக்கள் பாரா. இதுவரை இலங்கை பற்றி யாருமே தெளிவாக எழுதினதில்லை. ஒன்று புலி சார்பு அல்லது சோ, இந்து ராம் மாதிரி கண்மூடித்தனமான எதிர்ப்பு என்று இரண்டு கட்சிகள் மட்டுமே இங்கு உண்டு.உண்மையில் இலங்கை நிலவரம் என்ன என்பது பற்றித் தெளிவாக எழுத இங்கே யாருக்கும் துணிச்சல் இல்லை என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.நீங்கள் அதனைச் செய்ய முன்வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி தருகின்றது. ‘நிலமெல்லாம் ரத்தம்’ படித்ததிலிருந்து உங்களுடைய ரசிகனாக இருக்கிறேன்.அதேப்போல இன்னொரு நல்ல வரலாற்று விருந்து அளியுங்கள்.

    அன்புடன்
    வி.ஏ. கண்ணன்

  • எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறேன்(றோம்)… பட்டய கிளப்புங்க பாரா!!!

  • அட்டகாசம் பாரா! அடிச்சி ஆடுங்க. யாருடா இத எழுதுவாங்கன்னு காத்துக்கிட்டிருக்கேன் ரொம்ப காலமா!

    உங்கள் துணிச்சலுக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.

  • கட்டாயம் எழுதவேண்டிய ஒன்று, மாயவலை எழுதும் போதே கடைசியாக விடுதலைப்புலிகள் பற்றி எழுதி தொடரை முடிப்பீர்கள் என எதிர்பார்த்தேன். அப்போது ஏமாற்றிவிட்டீர்கள். விரைவில் ஆரம்பியுங்கள், ஆவலுடன் காத்திருக்கிறேன், படிக்கமட்டுமல்ல, பாதுகாத்து வைக்கவும்
    மணிவண்ணன் – ஒருவாசகன்

  • நீங்கள் செய்வது பெரிய சமூக சேவையாகும்.தமிழில் இதன்முன் இலங்கை யுத்தம் பற்றிய சரியான பகிர்வுகள் கிடையாது. புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ ஒன்றே ஓரளவு யுத்த சரித்திரம் சொல்லக்கூடிய படைப்பு.அதுவும் பெருமளவு ஒற்றைச்சார்பு கொண்ட நூல்.புஸ்பராஜாவின் ஈபிஆரெல்லெப் சார்பும் பத்மநாபாவின்மீது அவ ர்கொண்டிருக்கும் பிரேமையும் வெளிப்படும்.புலிகள் எவ்வாறு ஈழத்தமிழர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியானார்கள் என்பதன் பின்னால் உள்ள அராஜகத்தனமும் ஒரு கட்டத்தின்மேல் அவர்களை அங்கீகரித்தே ஆகவேண்டிய கடப்பாடு அனைத்துத் தமிழர்களின்மீதும் விழுந்த விதமும் சரிவர எழுதப்பட்டதில்லை. ஈழத்தமிழர் பிரச்னையின்பால் தமிழகத்துத் தமிழர்களின் கண்டும் காணாத போக்குக்குப் பெருமளவு ராஜிவ் படுகொலை காரணமாகும்.யார் இதனை மறுத்தாலும் இன்றைய தமிழகத் தலைவர்களின் குதிப்பாட்டமும் மக்களின் அமைதிபாவமும் இதனையே நமக்குச் சொல்லும்.
    ஒரு சரியான காலக்கட்டத்தில் மிகச் சரியான விஷயம் பற்றி எழுதவிருக்கின்றீர்கள் என்கிறபடியால் இத்தொடர் முக்கியத்துவம் பெறுகின்றது.
    உங்களுடைய “டாலர் தேசம்” “நிலமெல்லாம் ரத்தம்” இரண்டினையும் வாசித்துள்ளேன். முன்னது வாசிப்பு சுவாரசியத்துக்கெனவும் பின்னது விஷய கனத்துக்கெனவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
    இந்த “யுத்தம் சரணம்” தமிழகத்துத் தமிழர்களுக்கு இலங்கை நிலவரத்தைத் துல்லியமாக – பாரபட்சமில்லாமல் வெளிப்பட அறியத்தரவேண்டும் என்பதே என் விருப்பம்.
    எதுவித அச்சுறுத்தல்களுக்கும் பணியாமல் இதனை நீங்கள் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள் என்று நம்புகின்றேன். உங்கள் முயற்சிக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • ரட்னகுமார் சொன்னதை நானும் ஆமோதிக்கின்றேன். புஸ்பராஜாவின் “ஈழத்துப் போராட்டத்தில் எனது சாட்சியம்” ஒன்றேதான் இப்போதைக்கு ஈழத்துப் போராட்டத்தை பற்றிய ஒரே நூல், அந்துவும் முழுமையான நூல் அல்ல (650 பக்கங்கள்). எனவே ந்டுநிலையுடன் எழுதப்பட்ட ஒரு நூலை சீக்கரம் எமக்குத் தாருங்கள்.
    எப்போது ஆரம்பம்?
    ஒருவாசகன்

  • வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.
    மணிவண்ணன்: இன்னும் இரண்டு வாரங்களில் அநேகமாகத் தொடங்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். எழுதிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன். திருப்திகரமான மொழி கூடியதும் ஆரம்பித்துவிடவேண்டியதுதான்.

  • வாவ்.. இப்போதான் பாக்கறேன்.. வாழ்த்துகள் சார்.. 🙂 இப்போது நிலவும் சூழ்நிலையில் உங்களின் இந்த முயற்சி நிச்சயம் தேவை..

    உண்மையில் எனக்கு ரிப்போர்ட்டர் படிக்கும் பழக்கம் இல்லை.. அதனால் புத்தக வரவை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்..

  • எங்கிருந்து சார் இப்படித் தலைப்புப் பிடிக்கிறீர்கள் ?
    ஒட்டுமொத்தக் கட்டுரையின் சாரத்தையும் பிழிந்து கொடுப்பது மாதிரி?
    டாலர் தேசம், நிலமெலாம் இரத்தம்,ஆயில் ரேகை-என்று எதைச் சொல்ல ? அந்த வரிசையில் இப்போது யுத்தம் சரணம் !
    இதை விடப் பொருத்தமான பெயர் இந்தத் தொடருக்கு
    வைக்க முடியுமா என்பது சந்தேகமே.
    உணர்ச்சியமயமாக மட்டுமே பெரும்பாலும் அணுகப்பட்டு வந்துள்ள இலங்கைப் பிரச்னையை, உங்கள் கட்டுரை
    அறிவுபூர்வமாக அணுகும் என்பதில் சந்தேகமில்லை.
    நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

  • உங்களிடம் பிடித்ததே ஒடுக்கப்படும் தேசியத்திற்கு நீங்கள் அதிக அளவு ஆதரித்து எழுவது தான் . நானெல்லாம் நீங்கள் ஹிஸ்பொலாவை பற்றி எழுதியதை மனப்பாடம் செய்து வைத்திருக்கும் ஆசாமியாக்கும் . ஆனால் ஒன்று என்னதான் இருந்தாலும் நீங்கள் இஸ்ரேலை கண்டிக்கும் அளவு ஹமாசயோ மற்ற இயக்கத்தையோ சாடி எழுத மாட்டீர்கள் . அது உள்ளார்ந்து படிப்பவருக்கு தெரியும்

  • நான் விவரமாய் படிக்கக் காத்திருந்த topic. வரவேற்கிறேன்.

    ”ஆச்சா?”, ”போதாது?” பதங்கள் தவிர்த்தோ, பகரமாய் வேறு வார்த்தைகளோ எழுத முயலுங்களேன்.

  • சார் உங்களின் இந்த முயற்சி நிறைய தமிழர்களுக்கு, அந்த பிரச்சினையை புரிந்து கொள்ளவும்,சரியான முடிவை எடுக்கவும் உதவும், ராஜிவ் மரணத்திற்கு பிறகு சரியான முடிவை எடுக்கமுடியாமல் என்னைப்போல் நிறைய தமிழர்கள் தடுமாறுவதை உணர்ந்திருக்கிறேன்,அதையெல்லாம் உங்கள் தொடர் தீர்த்திடும் என்று நம்புகிறேன், மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்

  • திரு. பிரகாஷ் ஹிஸ்புல்லாவை மனப்பாடம் செய்தவர், நிலமெல்லாம் இரத்தம் வாசிததால் ஏன் ஹமாஸையோ மற்ற இயக்கத்தையோ சாடக்கூடாது என அறிய முடியும்.

    ஆக்கிரமிக்கப்பட்டவர்கள், சொத்து, சுகம், மனைவி. மக்கள், என அனைத்தும் இழந்தவர்கள் விடுதலைக்காக ஆயுதமேந்துவதின் நியாயம் பகத்சிங் போன்றோர் பிறந்த நமது நாட்டினரால் புரிந்து கொள்வதில் என்ன குழப்பம்?

  • ஈழத்துப் போராட்டத்தில் எனது சாட்சியம்” ஒன்றேதான் இப்போதைக்கு ஈழத்துப் போராட்டத்தை பற்றிய ஒரே நூல்//

    அப்படி சொல்ல முடியாது. போரும் சமாதானமும் எனும் 800 பக்க நூல் ஆன்டன் பாலசிங்கம் அவர்களால் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப் பட்டுள்ளது. புலிகளின் வரலாறேயானாலும் ஈழப் போராட்டத்தில் அவர்களின் பங்கு தவிர்க்க முடியாததல்லவா? அந்த நூலில் புலிகளினதும் மற்றய இயக்கங்களினதும் ஆரம்பம் தமிழகத் தொடர்பு இந்திய உதவி எம் ஜி ஆர் இன் பங்களிப்பு இந்தியாவில் பயிற்சி இந்திய இலங்கை ஒப்பந்தம் அதில் புலிகளின் நிலைபாடு நிகழ்ந்த சம்பவங்கள் என ஆரம்பித்து பிரேமதாசா பேச்சு – பிரேமதாசா அரசிடம் இந்தியாவை எதிர்க்க ஆயுதம் வாங்கியது என அனைத்தையும் புலிகளின் இராணுவ போராட்ட மற்றும் அரசியல் நிகழ்வுகளோடு பயணித்து நோர்வேயின் சமாதான பேச்சு பேச்சுகளில் நிகழ்ந்த முறுகல்கள் என பயணித்து முடிகிறது அந்தப் புத்தகம்.

    ஆன்டனின் மனைவியும் சுதந்திர வேட்கையென்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். ஒரு ஆங்கிலேயப் பெண்மணியாக வெளிநின்ற பார்வையில் தாம் எவ்வாறு புலிகளோடு தொடர்புற்றோம் என்பதிலிருந்து தமிழக காலங்கள் பிரபாகரனின் காதல் உமா மகேஸ்வரன் பிரபாகரன் மோதல் என ஆரம்பித்து மாத்தையாவின் மரணம் குறித்த செய்திகளையும் எழுதி கணவர் 98 இல் முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலமாக தாய்லாந்து சென்று பிறகு லண்டன் சென்றது வரை ஒரு தொகுப்பாக எழுதியிருக்கிறார். இதனை போராட்ட வரலாற்று நூலாக கொள்ள முடியாவிட்டாலும் பல தகவல்களை பெற முடிகிறது.

    ஆன்டன் பாலசிங்கத்தின் போரும் சமாதானமும் நூலில் இருந்து சில பதிவுகளை நான் பதிவிட்டுள்ளேன்.

    இந்திய ஈழபோரின் முதற் புள்ளி என்ன?
    http://blog.sajeek.com/?p=444

    ராஜீவ் பிரபா – ஜென்டில்மென் ஒப்பந்தம்
    http://blog.sajeek.com/?p=378

    பின் “விளைவுகளுக்கு´´ நீங்களே பொறுப்பு
    http://blog.sajeek.com/?p=351

  • ரிப்போட்டரில் படிக்க ஆரம்பித்து விட்டேன்.
    அட்டகாசமான ஆரம்பம், அதிரடியான நடை, அமர்களமாக கொண்டு செல்லுங்கள்.
    ஓரு வேண்டுகோள்:
    ஆயில் ரேகை மாதிரி உடனடியாக முடித்து விடாது உங்களது மற்றைய வரலாற்று நூல்கள் மாதிரி (டாலர் தேசம், நிலமெல்லாம் இரத்தம் …..) மாதிரி நீண்டதாக (100 வாரமாவது) அலசி ஆராந்து எழுதுங்கள்
    -ஒருவாசகன்

  • i have read dollar desam,nilmellam ratham,ISI or arimugam and other books of you which were about extremist groups.

    your writing style made me searching for your books & i felt like i got very good knowledge after reading those books.

    now i delighted to see that you have started writing about Srilnakan crisis in kumudam reporter.i hope that it will be released as a book like the other series & am really waiting for it.

    i hope that you will be unbiased when writing this series as you were in your earlier ones.

    i feel that all the media in Tamilnadu are over exaggerating the situation in Srilanka & biased to one side. other then the tamils & sinhalese there are other communities which were heavily affected by this war & LTTE.
    but very few tamilnadu people know this fact.

    so i think this series is a timely one & i hope that you will cover all the dimension of this problem.

    Good luck.

  • ஈழம் பற்றிய யுத்தம் சரணம் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தீர்கள், அதைப் பற்றி இணைய உலகில் விரிவான விவாதமே ஆரம்பித்து விட்டது. நீங்கள் ஈழத்தகவல்களைப் பிழையுடன் கூறுவதாயும், பொன்சகா கொலைமுயற்சியிலிருந்து இதைத் தொடங்கியது, ஈழம்பற்றி அறியாத வாசகனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்றும் தமிழ் சசி தனது வலைப் பதிவில் கூறியிருக்கிறார்.

    http://blog.tamilsasi.com/2008/11/kumudam-reporter-eelam-history.html

    உங்களது பெயரில் ஆரம்பித்திருக்கும் ஆர்குட் குழுமத்திலும் இது பற்றிய ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=46823944&tid=5267666591317036484

    தாங்கள் விளக்கம் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கும் ஒரு வாசகன்

  • அன்புள்ள சுரேஷ்

    உங்கள் கருத்துக்கான என்னுடைய பதிலைத் தனிப்பதிவாக வெளியிடுகிறேன். இதன் அவசியம் குறித்து உங்களுக்கே தெரியும்!

  • பாரா,

    குமுதம் இணைய இதழ் இனிமே Pay Site-ஆம். ‘யுத்தம் சரணம்’-ஐ இனி.. உங்க இணையத்திலும் வெளியிட முடியுமா?

    தனித்தனி இதழ்களாக விற்காமல், ஒட்டுமொத்தமாக எல்லா இதழ்களையும் அவர்கள் விற்பதால் எனக்கு வாங்க விருப்பமில்லை.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி