நீலவனத்தில் சாகரிகா, கோவிந்தசாமியின் நிழல், ஷில்பாவை சூனியன் எதேச்சையாக காண்பதில் களம் சூடு பிடிக்கிறது. அப்பொழுதும் கூட அவர்களின் வருகை பா.ரா.வின் திட்டம் என சூனியன் ஐயுறுகிறான். தனக்கு எதிராக அந்த திட்டம் – ஆயுதம் நிற்காது என கூறிக் கொள்ளும் சூனியன் சாகரிகாவின் திட்டத்தையும் சரியாக கணிக்கிறான்.
நரகேசரிக்கு போதை தர நிலவுத் தாவரம் தேடிச் சென்ற சூனியன் ஒரு தங்கத்தவளையை பிடித்து வருகிறான். அதன் விசம், தங்கத்தவளை குறித்த விவரணை சுவராசியம். தவளையின் விசத்தை அம்பில் தோய்த்து கோவிந்தசாமியின் நிழல் மீது எய்ய நரகேசரியிடம் சூனியன் கூறுகிறான். கோவிந்தசாமியின் நிழலை தடுத்து நிறுத்துவதன் மூலம் பா.ரா.வின் நோக்கத்தை உடைப்பது சூனியனின் நோக்கம். எய்த அம்பு குறி தப்பாமல் தாக்கியதா? சூனியனின் நோக்கம் ஜெயித்ததா? வரும் அத்தியாயத்தில் விடை கிடைக்கலாம்.