சாகரிகா கோவிந்தசாமியின் மீது அன்பில்லாதவள். உண்மை அன்பை உணரத் தெரியாதவள். கணவன் மீது வெறுப்பை மட்டுமே செலுத்தியவள். முற்போக்குச் சிந்தனையுடையவள் என்று நாம் எண்ணிய வேளையில் இல்லை, அவன் மீது அன்பு செலுத்தினாள் என்பதை இந்த அத்தியாயத்தின் வழி அறிய முடிகிறது.
அவளுக்கு அவனது தெளிவான சிந்தனையற்ற கொள்கையின் மீதும் தன்னை உணரத் தெரியாத உணர்வின் மீதும் வெறுப்புக்கொண்டு, தனக்கு ஏற்ற துணை அவன் அல்லன் என்று அறிந்த பொழுதுதான் அவனை விட்டு அவள் விலகுகிறாள்.
மனித மனம் பல நேரங்களில் விசித்திரமாகவே நடந்து கொள்ளும். அதுபோல்தான் சாகரிகாவும் கோவிந்தசாமியும் இருவரும் மனத்தளவில் வெவ்வேறு மையப்புள்ளிகளுடன் வாழ்ந்தவர்கள் ஆவார்கள்.
ஆகவேதான், அந்த மையப்புள்ளியால் இருவராலும் இணைய இயலவில்லை. அதுமட்டும் இல்லை. அன்பிற்கு தான் என்ன செய்கிறோம். என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியாது.
அதுபோல்தான் இந்தக் கோவிந்தசாமியும் அதாவது அவனது நிழலானது தன் மனத்தில் உள்ள காதலை அம்பில் தோய்த்து அவள் காதிற்குள் கணையாகத் தொடுக்கிறான். அவள் மனிதகுலத்தில் வாழ்ந்திருந்தால், ஒருவேளை மாறியிருக்கக்கூடும். அவள் நீலநகரத்தில் வசிக்கத் தொடங்கிவிட்டதால்தான் அவளின் மனத்தைச் சூனியனாலும் கோவித்தசாமியின் நிழலினாலும் மாற்ற இயலவில்லை.
இந்த அத்தியாயத்திலும் குறிகளைப் பற்றிய சூனியன் இனத்திலும் காணப்படும் நடைமுறைகளையும் அவனது மனஓட்டங்களைக் காணும் பொழுது உணர்ச்சிகளுக்கு அடிமையான மனிதனால் இதிலிருந்து ஏன் தப்ப இயலவில்லை என்பதைக்
“கடவுள் அதைத் தனது படைப்புகளுக்குப் பயிற்றுவிக்கவில்லை”
என்று கூறிப்படுள்ளது. இந்தத் தகவலை ஆணி அடித்ததுபோல் கூறவில்லை; பறவையின் இறகால் வருடியது போல் கூறவில்லை; நிதர்சனமாகவே கூறியுள்ளார் எழுத்தாளர்.
இந்த அத்தியாயத்தைப் பொறுத்தளவில், எனக்கு பா. ராகவனின் அவர்களின் வரிகளை வாசித்து முடித்த வேளையில் அவரைச் சொற்கணை உளவியலாளர் என்று எண்ணத் தோன்றியது. இது உண்மையே! இதைவெறும் புகழ்ச்சிக்காக நான் கூறவில்லை.