கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 8)

உணர்ச்சிவசப்படுபவர்கள் உணரவும் மாட்டார்கள். உணர்த்தவும் மாட்டார்கள். இந்தக் கோவிந்தசாமியும் இவ்வாறுதான். குரங்கு கிளைகளை இறுகப் பற்றி விளையாடியும் தாவியும் கொண்டிருப்பதுபோல, அவளை மனத்தளவிலும் புத்தியிலும் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறான் கோவிந்தசாமி.
ஒருவரைப் பிறர் எளிதாக மாற்ற இயலாது. ‘தான் மாற வேண்டும்’ என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே மாறுவர். கோவிந்தசாமி அவளைத் தான் விரும்பம் அரசியல் இயக்கத்தின் மீது பற்றுக்கொள்ள வேண்டம் என்பதற்காகப் பலவகையில் முயற்சி செய்கிறான். அவள் அவளாகவே இருந்தாள் என்பதை அவன் புத்தி உணராமலே போனது. அதை,
“லூசு. எனக்குச் கடற்கரைக்குச் செல்வது பிடிக்கும். நீ காபரே டான்ஸ் நடப்பதாகச் சொன்னாலும் வருவேன்”
என்று எழுத்தாளர் போகிற போக்கில் அருமையாகக் கூறியுள்ளார். இந்த வரியே போதுமே அவனுக்கும் அவளுக்குமான இடைவெளிக்கான தூரம் எவ்வளவு என்று அறிய இயலும்.
சரயு நதியில் குளித்த பொழுது கோவிந்தசாமி குளித்த நிகழ்வை வாசிக்கையில் எனக்குச் சிரிப்பை அடக்க இயல்வில்லை. வாய்விட்டுச் சிரித்தே விட்டேன். மனிதர்கள் நதியை அசுத்தமாக்கி, தன்னைப் புனிதப்படுத்தப் கொள்கிறார்கள்.
நீலநகரத்தின் மக்கள் நம்மைப் போன்றுதான் போல. ஏனெனில், அவர்களுக்கும் பிறரைப் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். அதற்கு அவர்களின் நகரம் பொது அறிவிப்புப் பலகை அமைத்து பேருதவிபுரிந்துள்ளது.
‘உண்மை’ என்பது மறைக்கப்பட்ட வரலாறுபோல் இருட்பகுதிகளையும் கொண்டதுதன். அதைத்தான் எழுத்தாளர் இந்த அத்தியாயத்தின் வழியாக வாசகர்களுக்குக் கூறியுள்ளார்.
Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!