ஒருவன் தான் சைக்கோ என்று கூறப்படுவதைக் கூட ஏற்றுக் கொள்கிறான். ஆனால், சங்கி என்று அழைக்கப்படுவதை அவ்வளவு வேகமாய் மறுக்கிறான். சங்கி என்பதை வசைச்சொல்லாக பயன்படுத்தாதே என்று கூறியவனே தன்னை இப்போது சங்கி என்றவுடன் மறுக்கிறான் என்றால் அறிவுத் தெளிவு பெற்று விட்டானோ?
ஆனாலும் செம தில்லான ஆளுயா நீரு. நான் முதல்ல பிரம்மன், சிவன், விந்து அது இதுனு புராண ஆபாசத்தையெல்லாம் தொடர்புபடுத்தி சொல்ற அந்த ஊர் எதுவா இருக்கும், இணையத்துல தேடி பார்க்கணும்னு இருந்தேன். ஆனா, அடுத்து போட்டீரே ஒரு போடு.! அரசி அந்த பெருந் திருவிழாவுல கலந்துக்க வராங்க. ஒரே முடிவு. யாரும் மறுத்து சொல்ல முடியாது. சொன்னாலும் கேக்க மாட்டாங்கனு. புரிஞ்சிடுச்சு யா. ஆனா, செம்ம்ம அரசியல் நையாண்டி.
அந்த சோதிடன் பாத்திரம் தான் எனக்கு யாரென்று தெரியவில்லை. சிந்திப்போம். “விதி எழுதும் கூட்டம் ஒன்று இருக்கிறது” எத்தனை எத்தனை அர்த்தங்கள் பொதிந்த வார்த்தைகள் இவை..!! மன்னர்கள் காலத்திலிருந்தே தமக்கு எது நன்மையோ அதையே மக்களின் நன்மையென பேசி பேசி அவர்களின் மூளையில் ஏற்றும் அந்த கூட்டத்தின் ஆர்ப்பரிப்பை இன்றைக்கு வரையிலும் கூட தொலைக்காட்சி விவாதங்களிலும், நேரடியாகவும் கண்டு கொண்டு தானே இருக்கிறோம்..
20 இலட்சம் மக்களைக் கொல்ல வேண்டுமென்ற தனது லட்சியத்தில் சூனியன் வென்றானா? அடுத்த அத்தியாயத்தில் தான் பார்க்க வேண்டும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.