முதலில் செம்மொழிப்பிரியா, பிறகு நரகேசரி, அதன்பிறகு அதுல்யா, இப்போது கோப்பெருஞ்சோழன் மற்றும் தமிழழகி. இப்படி வரிசையாக ஃபேக் ஐடிகளை உருவாக்கி சாகரிகாவுக்கும் கோவிந்தசாமிக்கும் எதிராக சதி செய்து கொண்டு இருக்கும் சூனியன், அவர்கள் தனக்கு ஒரு பொருட்டல்ல என்று சொல்கிறான்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் செம்மொழிப்பிரியாவும் நரகேசரியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
சாகரிகா ஒரு போலி திராவிடத்தாரகை என்பதும், அவளுக்கு அண்ணாவைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் எதுவும் தெரியாது என்பதும், அவள் ஏற்கனவே புரட்சித்தலைவி ஜெயலலிதாவை தனிப்பட்ட விதத்தில் சந்தித்து இருக்கிறாள் என்பதும் இந்த அத்தியாயத்தில் அவர்களால் பேசப்படுகிறது.
முதல் இருவருக்கு உருவாக்கத் தவறிய வரலாறுகளை அடுத்த மூன்று பேருக்கு உருவாக்கி வைத்து அந்த குறையைத் தீர்த்துக் கொள்கிறான் குனியன்.
திராவிட ஆரிய போரில் இப்போது நக்சல்களும் தமிழ் தேசியவாதிகளும் சேர்ந்து விடுகிறார்கள்.
இவ்வளவு ஃபேக் ஐடிக்களுக்கு எதிராக தனி ஒருத்தியாக பா ரா அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிடத்தாரகை சாகரிகா என்ன செய்யப் போகிறார் என்பதை அடுத்து வரும் அத்தியாயங்களில் அறிந்துகொள்ளலாம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.