எப்படி இருக்கலாம், கல்வி? 5

சமச்சீர் கல்வி என்பது என்ன?

மிக எளிமையாக இப்படிப் புரிந்துகொள்கிறேன். தமிழ் நாட்டில் படிக்கிற மாணவர்கள் [சி.பி.எஸ்.சியில் படிப்போர் நீங்கலாக] அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான, ஒரே சீரான தரத்திலான கல்வி.

அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் [சமஸ்கிருதம், உர்தூ இன்னபிற.] என்ற நான்கு விதமான கல்வி நிலையங்கள் இங்கே உள்ளன. இவற்றுள் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டமும் ஓரியண்டல் பாடத்திட்டமும் சிறுபான்மைத் திட்டங்கள். சமச்சீரை ஆதரிப்பதாகவோ எதிர்ப்பதாகவோ அவர்கள் குரல் ஒலிக்கவேயில்லை. அலறியடித்துக்கொண்டு எழுந்தது மெட்ரிக் பள்ளிகள்தாம். சதவீத அடிப்படையில் அவர்கள் அதிகம். அரசுப் பள்ளிகள் அளவுக்கு இல்லை என்றாலும் கணிசம்.

சி.பி.எஸ்.சிக்குப் போகாத பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளைவிட மெட்ரிக் பாடத்திட்டத்தை அதிகம் விரும்புவது இங்கே வழக்கம். காரணம், அங்கே அரசுப் பாடத்திட்டங்களைவிட தரமான கல்வி வழங்கப்படுகிறது என்னும் எண்ணம். இந்த எண்ணத்தை அந்தப் பள்ளிக்கூடங்கள் வசூலிக்கும் கட்டணங்களும் ஓரெல்லைவரை உண்டாக்குகின்றன. முற்றிலும் புறந்தள்ளிவிட இயலாது என்றாலும் மெட்ரிக் பாடத்திட்டம் நிச்சயமாக அரசுத் திட்டத்தைவிடத் தரமானதுதான் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் அரசுப் பள்ளிகள் என்றாலே கீழ்த்தரம் என்னும் எண்ணத்தை நீக்கவும், அனைத்து விதமான பள்ளிகளிலும் ஒரே பாடங்கள்தான் என்பதை நிறுவவும் இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் கல்வி சார்ந்த பேதங்கள், உயர்வு/தாழ்வு மனப்பான்மை நீங்கவும் ஒரு நல்ல அரசு நினைக்குமானால் அது நல்லதுதான். இதற்கு முதற்கண் செய்ய வேண்டியது, மெட்ரிக், சிபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து விதமான பாடத்திட்டங்களையும் ஆராய்ந்து, சற்றும் சமரசமற்ற, தரத்தில் குறைவற்ற, உயர்தரமான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவதும், அந்தப் பாடத்திட்டம் புழக்கத்தில் உள்ள மற்ற அனைத்துத் திட்டங்களைவிடவும் உயர்வானது என்னும் எண்ணத்தை இயல்பாகவே மக்கள் மனத்தில் பதியும்படிச் செய்வதும்தான்.

சிபிஎஸ்சி கஷ்டம், மெட்ரிக் கஷ்டம் என்பதெல்லாம் வெறும் பேச்சு. அந்தக் கல்வித்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களையும் தேர்ச்சி விகிதங்களையும் பார்க்கும்போது, இதுநாள் வரை தமிழக அரசு, தனது பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களை வேண்டுமென்றே மாங்காய்களாக வைத்திருப்பதற்கான ஒரு பாடத்திட்டத்தையே வழங்கிவந்திருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இளம் வயதில் அதிக சுமையைத் திணிக்கிறார்கள் என்று சில சநாதனவாதிகள் இது பற்றிச் சொல்லுவார்கள். இதுவும் புறந்தள்ளவேண்டிய கருத்தே. மாறும் உலகில் எத்தனை படித்தாலும் போதாது, அறிதலுக்கான வாழ்நாள் நேரம் மிகக் குறைவானது என்பதற்கு நேர் நிகராக, மாணவர்களின் கற்றல் திறனும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. நமக்கு முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் நாம் கூடுதலாகவே அறிந்திருக்கிறோம் என்பதை விருப்பு வெறுப்பற்று யோசித்தால் புரிந்துகொள்ள இயலும். நமக்கு அடுத்தத் தலைமுறை நம்மைவிடவும் அதிக அறிதல் திறன் கொண்டிருப்பதும் இங்கு இயல்பானதே.

எளிமையான பாடங்கள் என்பது ஒரு ஏமாற்று வேலை. எளிமையான எழுத்து மொழி, எளிமையான போதனை மொழி என்பதற்கு வேண்டுமானால் மெனக்கெடலாம். பாடங்களில் எளிமை, கடுமை என்று என்ன இருக்கிறது? எது தெரியவேண்டுமோ அது தெரிந்திருக்க வேண்டும். எப்போது தெரியவேண்டுமோ, அப்போது தெரியப்படுத்தியாக வேண்டும்.

இந்த வகையில் தமிழ்நாட்டு மாணவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே சீரான பாடத்திட்டம் – ஆனால் உயர்ந்த தரத்திலான பாடத்திட்டம் என்று சமச்சீர் கல்வி அமையுமானால் அதை முழு மனத்தோடு நான் வரவேற்கவே செய்வேன். நான் என்ன? அத்தனை பெற்றோரும் அவசியம் வரவேற்பார்கள். காசைக் கொட்டிக்கொடுத்து தனியார் பள்ளிகளில் கொண்டு சேர்த்துவிட்டு அவஸ்தைப்பட அவர்களுக்கென்ன தலையெழுத்தா?

புதிதாக ஒன்றும்கூடச் செய்யவேண்டாம். இன்றைய சிபிஎஸ்சி சிலபஸை எடுத்துவைத்துக்கொண்டு அந்தத் தரத்தில் பாடத்திட்டம் உருவாக்கினால் போதும். அதையே வழிமொழிந்தால்கூட எனக்கு ஆட்சேபணை இல்லை.

மெட்ரிக் பள்ளிகள் ஏன் இதற்கு அலறுகின்றன என்றால், அவர்கள் தம் பாடத்திட்டம் உயர்ந்தது, அதனால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டிப் பணம் பிடுங்கிக்கொண்டிருந்தவர்கள். ஐயோ அதற்கு இனி வழியற்றுப் போனதே என்னும் அடி வயிற்று ஓலம்தான் அவர்களுடைய எதிர்ப்பு. புதிய அரசு தானாகவே அரசியல் காரணங்களுக்காக சமச்சீர் கல்வியைத் தூக்கிப் போட்டதா, மெட்ரிக்காரர்கள் சாமதானபேத தண்டங்களைப் பிரயோகித்து இதனைச் செய்யவைத்தார்களா என்றுகூட விவாதங்கள் நடக்கின்றன.

இவை இங்கே முக்கியமில்லை. அதிமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டு ரத்து செய்ததன் அரசியல் காரணங்கள் வேறு. அந்தப் பாடத்திட்டத்தின் அபத்தங்களை, குறைகளை, பிழைகளை, அருவருப்பூட்டக்கூடிய குணாதிசயங்களைக் கண்டே அதை நீக்கியது சரி என்று நான் நினைத்தேன்.

இந்த அரசு திரும்பவும் சமச்சீரைச் சீர் செய்து வேறு வடிவில் அடுத்த ஆண்டு மறு அறிமுகப்படுத்தலாம். வேறு பெயரில் அது வரலாம். திரும்பவும் மெட்ரிக் பள்ளிகள் அலறலாம். அப்போதும் பாடங்கள் இதே வடிகட்டிய மோசமான தரத்தில் இருக்குமானால் எதிர்க்கவே செய்வேன். சமச்சீரே கிடையாது, பழைய பாடங்கள்தான், சிபிஎஸ்சி, மெட்ரிக் கல்வித் திட்டங்களுக்கு அடுத்து மூன்றாம் படியிலேயே அரசுக் கல்வித்திட்டம் இருந்தால் போதும் என்பார்களேயானால் அரசுப் பள்ளிகளுக்கு எக்காலத்திலும் விடிவு என்பதே இருக்காது. சற்றும் செலவு செய்ய வழியற்றவர்களின் இறுதிச் சரணாலயமாக – இவர்களே பெரும்பான்மையினர் – ஒரு மாபெரும் சராசரிகளின் கூட்டத்தை உருவாக்கும் கேந்திரங்களாக அரசுப் பள்ளிகள் தொடர்ந்து விளங்கும். அப்படிப்பட்ட தலைமுறைகள் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருப்பதுதான் தமது எதிர்காலத்துக்கு நல்லது என்று இந்த திராவிடக் கட்சிகள் நினைக்குமானால் தமிழக மாணவர்களுக்குக் கதிமோட்சமே கிடைக்காது.

கல்வித் திட்டத்தின் தரமின்மை குறித்துச் சொன்னேன். அரசுப் பள்ளிகளில் சில நல்ல அம்சங்களும் உள்ளன. அதையும் சொல்லித்தான் தீரவேண்டும். நான் அரசுப் பள்ளிகளில்தான் படித்தேன். ஏராளமான நண்பர்கள் எனக்கு அப்போது இருந்தார்கள். விதவிதமான குணாதிசயங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் பழகவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. பேச்சு, எழுத்து, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள், விளையாட்டு எதிலும் குறைவே இருந்ததில்லை. பதின்ம வயதுகள் எப்படிக் கழியவேண்டுமோ அப்படிக் கழிந்தது. ஒரு ஆளுமை உருவாக்கப் பணியில் கல்வி நீங்கலாக பிற அனைத்து அம்சங்களும் மிகச் சரியாக இருப்பது அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் என்பது என் கருத்து.

ஆனால் இன்றைய மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பிள்ளைகள் வாய் திறந்து பேசுவதுகூடக் கிடையாது. என் மகளிடம் உனது நண்பர்கள் யார் யார் என்று கேட்டால் ஒன்றிரண்டு பெயர்களுக்கு மேல் அவளால் சொல்ல முடிவதில்லை. அதையேகூட யோசித்துத் தான் சொல்கிறாள். ஒருவாரம் விட்டுத் திரும்பக் கேட்டால் பெயரை மாற்றிவிடுகிறாள். ‘ஏன், போனவாரம் சின்ன சாமுவேல் உன் ஃப்ரெண்டுன்னு சொன்ன? இப்ப என்ன ஆச்சு? அவம்பேர சொல்லலியே?’ என்றால், ‘நாங்க ரெண்டு பேரும் க்ளாஸ்ல பேசினோம்னு மிஸ் எங்களை இடம் மாத்திட்டாங்கப்பா. இப்ப சஞ்சனாதான் என் பக்கத்துல இருக்கா. அதனால அவதான் ஃப்ரெண்ட்’

எத்தனை அவலமான சூழல் இது. பிள்ளைகள் பேசக்கூடாது. வகுப்பு நேரத்தில்தான் என்றில்லை. வகுப்புகள் முடிந்து பள்ளி விடும்போதும் ராணுவ அணிவகுப்பு மாதிரி வரிசையில்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதும் பேசக்கூடாது. விளையாட்டு வகுப்புகளில் ஒன்றிரண்டு சொற்கள் பேசிக்கொள்வார்களோ என்னவோ. ஆனால் ஸ்போர்ட்ஸ் மிஸ் மீதான அச்சம், பிற ஆசிரியைகளிடம் இருப்பதைக் காட்டிலும் என் மகளுக்குச் சற்று அதிகமே. ஏழெட்டு வயதுக் குழந்தைகளுக்கே இந்த விதமான அமைப்பு என்றால் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பிள்ளைகளின் கதியை நினைத்துப் பார்க்கிறேன்.

சற்று யோசித்துப் பாருங்கள். வாரம் ஐந்து நாள்கள், தினசரி ஆறு மணிநேரம் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேச வழியில்லாத ஓரிடத்தில், கல்வி நன்றாயிருக்கிறது என்னும் ஒரே காரணத்தால் கொண்டு சேர்க்கிறோம். கல்வியில் பழுதில்லைதான். ஆனால் உறவுகளுக்கு அங்கே இடமில்லை. சொல்லப்போனால் அதை மிதித்துக்கொண்டுதான் மேலே எழுவதற்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

என் மகளிடம் ஒருநாள், ‘க்ளாஸ்ல ஒரு வார்த்த கூட பேசமாட்டிங்களா?’ என்று கேட்டேன். ‘ம்ஹும். மிஸ் திட்டுவா.’ ‘அப்ப எங்கதான் பேசுவிங்க? எப்படி ஃப்ரெண்ட் ஆவிங்க?’ ‘அதுக்கு ஒரு வழி இருக்கு. ஆனா சொல்லமாட்டேன். ரகசியம்.’ ‘எங்கிட்ட மட்டும் சொல்லிடுடா கண்ணு. அப்பா யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.’

என் மகள் சொன்ன பதில்: ‘பாத்ரூம் போறப்ப சீக்கிரம் போயிட்டு அங்கயே நின்னு ஒரு நிமிஷம் பேசிடுவோம். அப்படியே ஃப்ரெண்ட் ஆயிடுவோம்’

இந்த அவலம் சத்தியமாக எந்த அரசுப் பள்ளியிலும் கிடையாது என்று அடித்துச் சொல்வேன். வகுப்பறை வாழ்வின் அனைத்து இன்பங்களையும் திகட்டத் திகட்ட அனுபவித்தவன் நான். என் மகளுக்கு அது அவளது முதல் வகுப்பிலிருந்தே முற்றிலும் மறுக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்சி சிலபஸ் சிறந்த சிலபஸ். அதில் சந்தேகமில்லை. ஆனால் சிபிஎஸ்சி பள்ளிகள் சிறந்த பள்ளிக்கூடங்கள் இல்லை. எட்டாம் வகுப்பு வரை நல்ல கல்வியின் பொருட்டு என் மகளை சிபிஎஸ்சியில் படிக்க விட்டு, ஒன்பது, பத்துக்கு அரசுப் பள்ளியில் மாற்றிவிடலாம் என்றுதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். படிப்பின் ருசி இப்போது சரியாகப் புகட்டப்பட்டுவிட்டால், பின்னர் ஆசிரியர்கள் சரியாக உதவாவிட்டாலும் அவளாகவே படித்துவிட முடியுமல்லவா?

என் கருத்து இதுதான்: உயர்ந்த, சிறந்த கல்வித்திட்டம் ஒன்றை உருவாக்குவது. அதைத் தமிழ்நாட்டு மாணவர்கள் அத்தனை பேருக்கும் பொதுவாக, இலவசமாக வைப்பது, கல்வி வியாபாரிகளுக்கு நிச்சயமாகப் பேரிடியாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் அத்தனை பேரும் கைதட்டி வரவேற்பார்கள். தமது குழந்தைகளை ஆசை ஆசையாக அரசுப் பள்ளிகளில் கொண்டு சேர்ப்பார்கள். மிகத் தரமான பயிற்சியளிக்கப்பட்ட சரியான ஆசிரியர்களும், பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய சரியான பாடத்திட்டமும் எந்த ஆட்சியாளரால் வழங்கப்படுகிறதோ, அவரை நிச்சயம் நாற்காலியை விட்டு நகர்த்தாமல் வைத்திருப்பார்கள். மாறாக, ஒரு மட்டரகமான கல்வித்திட்டத்தை அனைவருக்கும் பொது என்று கட்டாயப்படுத்தினால் அத்தனை பேரும் சிபிஎஸ்சிக்குத்தான் ஓடிப்போவார்கள்.

[முற்றும்]

Share

48 comments

  • \\அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் [சமஸ்கிருதம், உர்தூ இன்னபிற.] என்ற நான்கு விதமான கல்வி நிலையங்கள் இங்கே உள்ளன.\\

    பல தனியார் பள்ளிகளில் மெட்ரிக் முறையில்லாமல் தமிழக அரசின் பாடத்திட்டம் (அரசு பள்ளிகளில் உள்ளதுபோல்) கடைப்பிடிக்கப் படுகிறதே? அவை எந்த வகையில் வரும்?

    • முரளி கண்ணன்: நீங்கள் எய்டட் பள்ளிகளைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அரசு உதவியுடன், அரசு பாடத் திட்டங்களைக் கொண்டு தனியாரால் நடத்தப்படும் பள்ளிகள்.

  • இப்போது இருக்கும் மெட்ரிகுலேஷன போர்டையே ஏன் ஸ்டேட் போர்டாக மாற்றகூடாது? தேவையானது ஒரு அரசாணை மட்டுமே. புதிதாக ஒரு பாடதிட்டதை உருவாக்கி அதை எல்லோரையும் ஏற்க செய்வதைவிட இது சுலபம் இல்லையா? அரசு பள்ளிகளும் ஆசிரியர்களும் பாடுபட்டு தங்கள் தரத்தைஉயர்த்திகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும். இருக்கும் பிரிவுகளை ஒழித்து இருப்பதை சீர் செய்தாலே சமசீராகிவிடும்.
    ரமணன்

  • அரசு உதவி பெரும் பள்ளிகள் தவிர, நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் தமிழக அரசு பாடத்திட்டத்தை 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்க்கு மட்டும் உபயாகப்படுத்தும் பள்ளிகள் மற்றும் அரசு உதவி இல்லாமலேயே நடக்கும் தனியார் பள்ளிகளும் உள்ளன. (தென் மாவட்டங்களில்) அவற்றிலும் தமிழக அரசின் பாடத்திட்டம்தான் கடைப்பிடிக்கப் படுகிறது.

    பெரும்பாலான முதல் தர பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் அந்த மாணவர்களே இடம் பிடிக்கிறார்கள்.

    அதைக் களைவதாகவும் இருக்க வேண்டும் சமச்சீர் கொள்கை

  • மிகச் சரி பாரா.
    கல்கி தலையங்கம் போல ஆணி அடித்து சட்டம் கட்டி வலை உலகத்திலே, எப்படி இருக்கவேண்டும் நம் கல்வி, என்று சொல்லி இருக்கிறீர்கள்.
    காதுல்லோர் கேட்பார்கள்.
    ஒரு முழு ஆளுமையை உருவாக்கும் அம்சங்கள் என்பதை நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் நன்று.
    முழு ஆளுமையாக மிகச்சிலரே உருவாகும் ஆசீர்வாதம் அமைகிறது.
    நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  • மிகச்சரியான கருத்துக்கள் சார், சமச்சீர் கல்வியை சீராய்வு செய்யும் போது கூடவே அரசுபள்ளிகளின் தரம், கழிவறை பிரச்ச்னைகள், குடிநீர் போன்றவற்றையும் ஆராந்தால் நன்றாக இருக்கும், இது முழுக்க முழுக்க வரவேற்ககூடிய கட்டுரை, நன்றி சார்

  • Kerala with 35,000 students had the maximum number of students who took the exams this year, and was second in the region with a pass per centage of 99.22. Kerala also has the most number of CBSE schools in the region with 737 schools, a staggering 516 schools more than Andhra Pradesh.

  • Kerala Govt to give NOC to new CBSE schools

    From Mathrubhumi Education Online

    Kochi, June 8, 2011: In a landmark decision the Kerala Government today decided to give No-Objection Certificate (NOC) to more CBSE schools for functioning in the state. Chief Minister Oommen Chandy said in Thiruvananthapuram after a Cabinet meeting that the NOC would be issued only to those schools that meet the basic requirements including infrastructure.

    The previous LDF Government and its Education Minister M A Baby were dead against giving sanction to more CBSE schools in the state as they felt that the growth of CBSE schools would stifle the progress of the State Government and aided schools in the state that follow the state syllabus. The Kerala CBSE Schools Management Association and the applicant CBSE schools had been unsuccessfully pressurising the LDF Government for the past five years to get the NOC. Now their long-felt demand has been met.

    According to a conservative estimate, around 500 CBSE schools, which are yet to get the State NOC, would benefit from the decision of the Oommen Chandy Government. “Around 70 schools have already completed the mandatory CBSE inspection and are waiting for the NOC, they will immediately benefit. Around 250 schools have excellent facilities but are yet to get NOC and are waiting also for CBSE inspection. More than 500 schools in the state meet the minimum required infrastructure and other facilities. The decision of the UDF Government will be beneficial to all of them,” said T P M Ibrahim Khan, president of the Kerala CBSE Schools Management Association, to Mathrubhumi Education on Wednesday. He said that the case filed by the last government in the Supreme Court in this regard will not come in the way of this new decision as the new government only need to withdraw the petition in the Supreme Court.

    He said that the new Government should frame fresh rules regarding the CBSE schools in the state or return to the rules framed in 1988 as the last LDF Government, in the cover of RTE Act, had framed certain rules to stifle CBSE schools to death. He hoped that the new government would initiate the steps immediately for that.

  • சார்!

    ஆரம்பப்பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் செயல்வழிக் கற்றல் மாதிரியான விஷயங்களை இத்தொடருக்கு கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லையே? 🙁

    ஒட்டுமொத்தமாக வாசித்துப் பார்த்ததில் எனக்கு லேசான அல்ல, கொஞ்சம் பலமாகவே ஏமாற்றம்தான்!

    திரும்ப திரும்ப மெட்ரிகுலேஷன் பாடங்கள், அரசுப் பாடத்திட்டத்தை விட சிறந்தவை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வகையில் என்று நிரூபிக்கவே முயற்சிக்கவில்லை. மாறாக அரசுப் பாடத்திட்டத்தில் இருந்த சில அபத்தங்களை மட்டும் பட்டியலிட்டு, அரசுப் பாடத்திட்டம் என்பதே அம்போக்கான பாடத்திட்டம் என்பதாக நிறுவ முயன்றிருக்கிறீர்கள்!

    ‘பாரா’ என்கிற புத்திசாலி எங்களுக்கு அரசுப்பாடத்திட்ட முறையில்தான் கிடைத்திருக்கிறார். எனவே அரசுப் பாடத்திட்டமே சிறந்தது என்று தீர்ப்பளிக்கிறேன் 🙂

  • “இளம் வயதில் அதிக சுமையைத் திணிக்கிறார்கள்” என்ற கருத்து புறந்தள்ள வேண்டியதாகத் தோன்றவில்லை. சற்று ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.
    சுமை என்று இங்கு சொல்ல வருவது என்ன? அதிகமான பாடங்கள், சிந்தனைக்கு வேலை கொடுக்காத கையை ஒடிக்கும் வீட்டுப் பாடங்கள், தினமும் மாலை நேர சிறப்பு வகுப்புகள், விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்துவது, சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்துவது போன்றவைகளெல்லாம் சுமைகள் என்று நான் நினைக்கிறேன்.
    1) அதிக சுமையால் இளம் வயதிலேயே படிப்பதில் சலிப்பு வந்துவிடும். இல்லை என்றெல்லாம் மறுக்க முடியாது. நேரிலேயே நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன்.
    2) படிப்படியாக மாணவர்களின் திறமைக்கேற்றவாறே சுமையை அதிகரிக்க வேண்டும். அதுதான் சரியான முறையாக இருக்க முடியும். ஆனால் இது எப்படி சாத்தியம் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
    3) நீங்கள் சொல்வதுபோல அதிக பாடங்களை வைக்கும்போது நல்ல உறவுமுறைகளை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. தனியார் பள்ளிக்கூடங்கள் அப்பொழுது படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாது. என்னைப் பொருத்தவரை மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிப்பதைவிட மிக மிக முக்கியம் சக மனிதர்களை நேசிக்க வைத்தல்.
    4) நல்ல திறமையான ஆசிரியர்கள் இருக்கும்போது கடினமான விஷயத்தைக்கூடத் தெளிவாக விளக்கி விடுவார்கள். ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நல்ல தரமான ஆசிரியர்கள் இல்லை. இதனால் மாணவர்கள் பாடங்களை மனனம் செய்துவிடுகிறார்கள். என்னைப் பொருத்தவரை புரியாமல் படிப்பதைவிட படிக்காமல் இருப்பதே மேல். அது ஒரு விதமான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.
    பெரும்பாலான பெற்றோர்களின் நோக்கம் ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம்…. சரி எத்தனை பேர் ஐ.ஐ.டி.யிலும் ஐ.ஐ.எம். மிலும் படித்துவிட்டு இந்தியாவில் பணிபுரிகிறார்கள்? ஆக பெற்றோர்கள் விரும்புவது தங்களுடைய பிள்ளைகள் வெளிநாடு செல்ல வேண்டும். கண்டிப்பாக யாரும் திரும்பப் போவதில்லை.
    என்னதான் போட்டிகள் அதிகரித்தாலும் அடிப்படைகள்தான் முக்கியம். போட்டித் தேர்வுகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஆங்கில அறிவுக்குத்தான். பிறகு கணிதம். கேட்கப்படும் கேள்விகள் மிக எளிமையான அடிப்படைக் கேள்விகள்தான். கண்டிப்பாக இவைகளை வளர்ப்பதற்கு அதிக சுமைகள் தேவையில்லை. விளையாட்டுத்தனமாக எளிதாக கற்பிக்க முடியும்.
    இங்கு பிரச்சனை என்னவென்றால் நிறைய பாடங்களை வைத்துவிடுகிறார்கள். இதனால் அடிப்படைகளைச் சரியாகக் கற்பிப்பதில்லை. நிறைய கணக்குப் பாடங்கள். ஆனால் எதற்கென்று யாருக்கும் தெரியாது. என்னைப் பொருத்தவரை அடிப்படைகள் நன்றாக ஆணித்தரமாக கற்பிக்கப்பட வேண்டும். அவசரமே தேவையில்லை.
    நான் இங்கு விரும்புவது. அளவான பாடங்கள! நிறைவன கற்பித்தல்!
    மற்றபடி நீங்கள் விரும்புவதுதான் என்னுடைய விருப்பமும் கூட. கட்டுரைக்கு நன்றி. வாழ்த்துகள்.

  • சபாஷ் பாரா, சரியான பதிவு

    நீர் எழுத்தாளர். பரந்து பட்ட கண்ணோட்டம், ஒரு உண்மையான தீர்வை விரும்பும் எண்ணங்கள்.

    பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் என்று இல்லாமல், ஆறாம் வகுப்பில் இருந்தோ அல்லது எட்டாம் வகுப்பு முதலோ தொடர்ந்த முன்னேற்றம் ( continuous assessment ) மூலமாக மாணவர்கள் தரம் காணப்பட வேண்டும்.

    கற்பித்தல் என்பது ஒரு வேலை இல்லை அது ஒரு சேவை என்பதை ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு கொடுக்கப்படுவது சம்பளம் இல்லை, அது ஆசிரியர்கள் செய்யும் சேவைக்கு ஒரு மரியாதையை என்பதை மக்களுக்கும் புரிய வைக்கப்பட வேண்டும்

  • So, No.5 draws to a close your thoughts on recent educational reforms of the State. It encapsulates the long-awaited part: ur views on the samacheer kalvi proper (uniform pattern of education). I can’t quote ur words and reply para for para, Mr Paara. So, my general opinion is that u have made some sweeping statements.

    Society can never be equal. We can level an unequal society formed by the machinations of some groups, for e.g. using imaginary religious concepts. But we can’t level an unequal society formed by other factors such as economic gradations. People earn their money, and their prosperity. They want to give the best to their children for which they cause or create institutions on their own, w/o state support. State can’t interfere with that.

    Uniform pattern of education challenges their democratic right to exercise legally valid choices they can afford. Matriculation schools r private institutions; and they r formed only to cater to those who can afford and who want their children an ideal education. They don’t seek the help or support of the state: then, why the State bothers? If matriculation schools charge more, it s not ur problem; but that of the parents who want such schools and who can afford to send their wards there. They will resolve their quarrels. Neither u nor the State has any business to intervene.

    Government schools r for all others who can’t afford such expensive education; but the State is duty bound to help such poor. Hence, need for govt schools. U can bring, borrow or steal a better educational system for them; but the more u do for them, the better the other schools will fine tune their progress. I mean, if the State helps the Government schools by every mean, and indeed, if such schools progress thereby, it will only egg the private schools on to perform good, better and the best. In this race, always Govt schools r the runners-up only.

    If you break the private players’ neck or threaten them to fall in line with the inferior govt schools in quality, that is plain autocratic conduct in a democracy. Allow freedom to all. Help Govt schools by all means but don’t emasculate private schools in the name of uniformity.
    No one can level the society: a bitter or better fact, u may take it either way.

    Another assumption in your post is that by bringing about uniform pattern of education across all schools, students will improve and your ideal will b realized. All that u harp on is better quality text books and better syllabi.

    It is not correct. An ideal student and the school syllabus don’t always go together. A better syllabus, but alas! with a hostile milieu at home and at school (bad faculty, bad infra, bad location etc.), can’t create achievers.

    An ideal student is a product of co-operative causes of which only one is the syllabus with better text books.

  • அடுத்தது நம்ம நீலக்காகம் post தானே !!!???

  • ஜோ அமலன்: உங்களுக்குத் தமிழ்மீது என்ன விரோதம்? நீளநீளமான உங்களுடைய ஆங்கில கமெண்டுகளைப் படிப்பது எனக்கு ஆர்.எச். குருமியைப் படிப்பதுபோல் உள்ளது. மன்னியுங்கள். உங்களுடைய அனைத்து கமெண்ட்களையும் சேர்த்துவைத்து ஒரு பதில் சொல்லப் பார்க்கிறேன். ஆனால் அவகாசம் எடுக்கும்.

  • லக்கி: நான் புத்திசாலி அல்ல. சராசரிதான். எனக்கு இதைச் சொல்லுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருவேளை எங்காவது புத்திசாலித்தனம் தென்படுமானால் அது என் பள்ளி நாள்களுக்குப் பிறகு உற்பத்தியானதாகவே இருக்கும். ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். எனக்கு முதல் ஆசிரியர் கி. ராஜேந்திரன் தான். நான் உண்மையாகப் படித்தது அவரிடம்தான். அவருக்குப் பிறகு எனது கல்வியை இளங்கோவனிடம் தொடர்ந்தேன். இன்றும் இளங்கோவனிடம்தான் பயின்றுகொண்டிருக்கிறேன். இந்த இருவரையும்தான் என்னுடைய ஆசிரியர்கள் என்று என்னால் சொல்லமுடியும். என் வார்ப்பில் ஏதேனும் நல்ல அம்சம் இருக்குமானால் அதற்கு இவர்களே காரணம். என் பள்ளி ஆசிரியர்கள் அல்லர்.

  • சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைப் பற்றிய எனது கருத்துகள்:

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கடினம் என்று நான் நினைக்கவில்லை.

    ஒரு வருடத்திற்கு முன்பு இணையத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. கணிதப் புத்தகங்களைப் பதிவிறக்கம்
    செய்து ஒன்பதாவது வகுப்பு முதல் உள்ள நிகழ்தகவு பாடங்களைப் படித்துப் பார்த்தேன். என்ன
    ஆச்சார்யம் என்றால் நான் படித்த மாநிலப் பாடத்திட்டப் புத்தகங்கள் வழியாக என்னால் நிகழ்தகவு
    பாடங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்கள்
    கிளிப்பிள்ளைக்குக் கற்றுத்தருவதைப் போலத் தெளிவாக தகுந்த எடுத்துக்காட்டுக்களுடன்
    அடிப்படைகளைப் புரியவைக்கிறது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அடிப்படைகளை நன்றாக கற்பிக்கிறது. இதுதான் மற்றப்
    பாடத்திட்டத்திற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்று நான் நினைக்கிறேன்.

    தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் சிந்தனையைத் தூண்டுகிறது.
    இதுவும் முக்கியமான வித்தியாசமாக நான் நினைக்கிறேன். மற்றப் பாடத்திட்டத்தில் சிந்தனைக்கு
    வேலை இல்லை. நேரடியான கேள்விகள். மனனம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவே!

    ஆக இந்த வகையில் தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.ஆக மாறுவது நல்லதுதான். ஆனால் தனியார்
    பள்ளிகளுக்கு நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. காரணம். இப்பொழுதுள்ள
    மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் திறமையுள்ளதா என்ற
    சந்தேகந்தான். ஏனென்றால் ஆசிரியர்களுக்குச் சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும். அடிப்படைகள்
    நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டத் தெரிந்திருக்க வேண்டும்.
    ஆனால் இவர்களுக்கு மனனம் செய்விக்கத்தான் தெரியும்! நேரடியான கேள்விகளுக்குப் பதிலளிக்க
    மட்டுந்தான் கற்றுக் கொடுக்கத் தெரியும்.

    தனியார் பள்ளிகளுக்கு நல்ல தேர்வு முடிவுகளைக் காட்டியாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
    அப்பொழுது தகுதியான ஆசிரியர்களை நிர்ணயிக்க வேண்டும். இருப்பவர்களைத் துரத்தியாக வேண்டும்.
    பாவம் புண்ணியம் பார்த்தெல்லாம் யாருக்கும் ஆசிரியர் வேலையைத் தரமுடியாது. ஒருவகையில் இது
    நல்லதென்றே தோன்றுகிறது. கண்டிப்பாகத் திறமையுள்ள ஆசிரியர்களுக்கு அதிகச் சம்பளம் தர வேண்டும்.
    கண்டிப்பாகக் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும்.

    எல்லா வகுப்புகளையும் உடனடியாக சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு மாற்ற முடியாது.
    படிப்படியாக ஒன்றாம் வகுப்பிலிருந்து மாற்றியாக வேண்டும். ஏனென்றால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில்
    சிந்திக்கும் முறையே வேறு!

  • Dear Para Sir,
    Sorry for writing in English.
    I did my half schooling from (Till 6th Std) from Metric and then from state board.

    I would really say I got better education in state board than the Metric one. But the difference was made by the teachers and not by the Syllabus.

    Mine is a government aided school and luckily so we got best teachers in the town who made the difference in the education.

    So I would say its the teachers who are setting the standards and not the syllabus.

    But at the same time I know few proper government schools in my town where the teachers was concentrating money lending than teaching. These viruses has to be removed from the system for the betterment of the students.

    Thanks,
    Arun

  • பாரா,
    உண்மையில் இந்தத் தொடரின் கடைசிப் பகுதி மட்டுமே போதும்..முதல் நான்கு பாகங்களில் ஐடியல் பள்ளிகளைப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள்..அவற்றில் இருக்கும் விதயங்களை எல்லாம் தமிழகப் பள்ளிகளில் எதிர்பார்ப்பது குதிரைக் கொம்புதான்..

    அவற்றில் இருக்கும் சிற்சில நல்ல அம்சங்கள் சிற்சில நல்ல ஆசிரியர்களின் மூலம் சிற்சில பள்ளிகளில் நிலவும் சூழல்தான் தமிழகச் சூழல்.

    அரசுப் பள்ளிகளோ,அல்லது எய்டட் எனப்படும் அரசுப் பாடத்திட்டத்தை ஏற்று நடத்தும் கிராமப் புறத் தனியார் பள்ளிகளோதான் அதிகம்..

    அவற்றில் இருந்து வரும் மாணவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள்.கடின உழைப்பையும்,எனக்குக் கிடைத்தது போன்ற அருமையான ஆசிரியர்களும் அமைந்தால் வாழ்வில் எளிதாக உயர்பவர்கள் இம்மாதிரிக் கிராமப் புற மாணவர்களே என்பது எனது பார்வை..

    கல்வி மட்டுமின்றி வாழ்வையும் படித்துக் கொண்டு வரும் வாய்ப்பு இம்மாதிரிப் பள்ளிகளில்தான் இருக்கிறது;சீர் செய்ய வேண்டிய ஒரே விதயம் ஆசிரியர்களின் தரமும் பாடத்திட்டத்தின் தரமும்.

    ஆசிரியர்களின் தரத்திற்கான தீர்வு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் பற்றிய மறு பார்வை மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டம் பற்றிய சீரமைப்பும் தேவை என்ற பார்வை எழுந்திருப்பதன் மூலம் சரி செய்யப் படலாம்;தினமணியில் இது தொடர்பாக ஒரு தலையங்கள் ஒரு மாதத்திற்கு முன்பாக வந்தது..

    பள்ளிகளின் பாடத்திட்டத்தின் குறைபாடு சமச்சீர்ப் பாடத்திட்டத்தின் மூலம் தீரும்.

    இன்றைய செய்தியில் சண்முகம் சமச்சீர்க் கல்வித் திட்டம் சீர் செய்யப்பட்டு கொண்டு வரப்படும் என்று தெளிவு படுத்தியிருக்கிறார்..நல்லது நடக்கும் என்று நம்புவோம்..

    இன்னொன்று-ஒன்பதாம் வகுப்பு வரை மெட்ரிக் அல்லது சிபிஎஸ்சியில் படிக்க வைத்து விட்டு 9ம் வகுப்பு முதல் அரசுப் பள்ளிக்கு மாற்றப் போகிறேன் என்ற உங்கள் யோசனை சரியானதா என்று தெரியவில்லை…

    மாணவர்களுக்கான சிறுவயதில் அடிப்படைக் கல்வி தாய் மொழியிலும் அமைவதும்,சிறு வயதில் கற்றுக் கொள்ளப்படும் வாழ்க்கைக்கான பாடங்களும் மிக நீண்ட காலத்திற்கு வாழ்வில் வழி காட்டும் என்பது எனது புரிதல்..

    மற்றபடி சிரமம் எடுத்துக் கொண்டு 5 பத்திகள் எழுதியதற்கு நன்றி.

  • ஐயா உங்கள் தலைப்பிலேயே பொருள் பிழை உள்ளதே !

    எப்படி இருக்கலாம் கல்வி?
    எப்படி இருக்க வேண்டும் கல்வி?

    இரண்டில் எது சரி? 🙁

    எப்படி இருக்கலாம் கல்வி? இந்த தலைப்பே, கல்வியை சட்டையை பிடித்து நீ எப்படி தமிழ்நாட்டில் இருக்கலாம் எங்கேயாவது ஓடிவிடு என்று கேட்பது போல அல்லவா உள்ளது.

    :):):):):)

  • // நான் புத்திசாலி அல்ல. சராசரிதான். எனக்கு இதைச் சொல்லுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.//

    வாத்தியாரு புள்ளை மக்குன்னு சொல்லுறீங்களா சார்?

    //என் வார்ப்பில் ஏதேனும் நல்ல அம்சம் இருக்குமானால் அதற்கு இவர்களே காரணம். என் பள்ளி ஆசிரியர்கள் அல்லர்.//

    உங்க நைனா கிட்டே இதே கருத்தை சொல்லியிருக்கீங்களா? 🙂

  • // // நான் அரசுப் பள்ளிகளில்தான் படித்தேன். ஏராளமான நண்பர்கள் எனக்கு அப்போது இருந்தார்கள். விதவிதமான குணாதிசயங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் பழகவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. பேச்சு, எழுத்து, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள், விளையாட்டு எதிலும் குறைவே இருந்ததில்லை. பதின்ம வயதுகள் எப்படிக் கழியவேண்டுமோ அப்படிக் கழிந்தது. ஒரு ஆளுமை உருவாக்கப் பணியில் கல்வி நீங்கலாக பிற அனைத்து அம்சங்களும் மிகச் சரியாக இருப்பது அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் என்பது என் கருத்து

    //

    இந்த ஒரே காரணத்துக்காகத்தான் எம் பொண்ணை புதுக்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்த்தேன். இந்த ஆண்டு சென்னையில் அதை என்னால் தொடர முடியாமல் போவதில் வருத்தமே 🙁

  • தங்களு​டைய கல்வி குறித்த அனுபவப் பகிர்வுகளும் எதிர்பார்ப்புகளும் இ​ணைந்த கட்டு​ரைத் ​தொடர் முழுவ​தையும் படித்​தேன். நல்ல முயற்சி. தமிழில் கல்வி குறித்த ப​டைப்பாற்றலுடன் சிந்திக்க ​வேண்டிய நல்ல தருணம். இ​தைப் படித்த ​பொழுது
    என் வ​லைப்பூவில் நான் என் கல்வி அனுபவம் குறித்து எழுதிய “​தெனாலிராமன் வளர்க்கும் பூ​னைகள்” கட்டு​ரையின் இந்த க​டைசி பாரா​வை குறிப்பிடுவது ​பொருத்தமாக இருக்கும் என நி​னைக்கி​றேன்:

    “நமது ​கல்வி மு​றை, மாணவர்க​ளை ஒரு பக்க ப​டை அணியாகவும் கல்வி​யை இன்​னொரு பக்க ப​டை அணியாகவும் ​நே​ரெதி​ரே நிறுத்தி, மாணவர் ப​டை​யை கல்விக் ​கெதிராய் யுத்தம் ​செய்யத் தூண்டுகிறது, பாரத யுத்தத்தில் கிருஷ்ண பரமாத்மா​வைப் ​போல. ​தேர்வு முடிவுகள் யுத்தத்தில் கல்வி​யை ​தோற்கடித்த மிகச்சிறந்த ப​டை அணிகள், வீரர்களின் பட்டிய​லை ​வெளியிட்டு பரிசுக​ளையும் விருதுக​ளையும் வழங்குகிறது. கல்வியின் சமாதி மீதுதான் ஒவ்​வொராண்டும் படிப்​பை முடித்து வாழ்க்​கை​யை துவங்க வரும் இளம் சந்ததியினருக்கான காலனிகள் கட்டப்படுகின்றன.”

  • in d green color icon for email subscription u pasted a wrong link.

    go to feedburner dot com.
    got to email subscriptions. there r 2 choices. first one is box format. u used it in ur blog already. see 2nd choice.

    it seems like this

    subscribe to paraghavan or something here

    u just use a url only in the green color email icon…

    cut that url only from that whole code…use the url only in green color icon…

  • in d green color icon for email subscription u pasted a wrong link.

    go to feedburner dot com.
    got to email subscriptions. there r 2 choices. first one is box format. u used it in ur blog already. see 2nd choice.

    it seems like this

    (a href=”url”)subscribe to paraghavan or something here(/a)

    u just use a url only in the green color email icon…

    cut that url only from that whole code…use the url only in green color icon…

    Your comment is awaiting moderation.

  • ஆர்.எச். குருமியைப் படிப்பதுபோல் உள்ளது

    appadinnaa enna ?

    • ஜோ அமலன்: குருமி பற்றி அவ்வப்போது இங்கே சில சமயம் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தத் தொடரிலேயேகூட ஓரிடத்தில் அவர் வருகிறார். என்னை மிகவும் பாதித்த ஒரு ‘ஆளுமை’ அவர். பெரிய எழுத்தாளர். ஜெயமோகனைவிட அதிக பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் எழுதியவர். அவருக்குப் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் உண்டு. கல்கி வாசகர்கள் மாதிரி தலைமுறை தலைமுறையாக அவரைப் படித்துத் தீர்த்துக்கொண்டிருப்பவர்கள். அவரது புகழ்பெற்ற இரண்டு பேரிலக்கியங்கள் [ சுமார் 1000 பக்கங்கள் என்னும் அர்த்தத்தில்] இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ் மற்றும் ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ். விமரிசகர்களின் ஏகமனதான அங்கீகாரத்தைப் பெற்றவர். துரதிருஷ்டவசமாக அவரது வாசகர்களுக்குத்தான் அவரைக் கண்டால் ஆகாது 😉

  • Para,
    One step in the right path. High court has just ordered to continue the Samechher Syllabus this year also. This is the first nail in the coffin of the govt trying the to take Tamilnadu “20” years backward. Lets see hope for the best.

  • //வகுப்பறை வாழ்வின் அனைத்து இன்பங்களையும் திகட்டத் திகட்ட அனுபவித்தவன் நான். என் மகளுக்கு அது அவளது முதல் வகுப்பிலிருந்தே முற்றிலும் மறுக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்சி சிலபஸ் சிறந்த சிலபஸ்//

    மெட்ரிக் பள்ளிகளிலும் இதே நிலை தான். ஒன்றாம் வகுப்பில் இருந்து என்பது தவறு. LKG யில் இருந்தே சுதந்திரம் நட்பு, விளையாட்டு எல்லாம் மறுக்கப்படுகிறது.
    இப்போது இந்த வியாதி பெற்றோர்களிடமும் நன்றாகவே தொற்றிக் கொண்டு இருக்கிறது. வீடுகளிலும் பிள்ளைகளுக்கு இதே நிலை தான். வாசலுக்குப் போகாதே. அவனோடு சேராதே. இவன் கிட்டே பேசாதே. அது தான் அடிப்படை நல்லொழுக்கமாக போதிக்கப்படுகிறது.

  • the search for utopia continues.schools are not the place to create einsteens or ramanujams.they have to rebel out to become one.schools are places meant to teach you from 1+1=2 to 2011×2011 and the basics of language,history,geography and science.
    even in higher studies like engg,medicine,law the education is to teach the basics and what not to do which may cause more harm than benefits.the indls have to fight the system to prove the efficacy of newer advancements and discoveries.all doctors should know about pulse polio and absence of knowledge of yellow fever or influenza vaccine is not a sin.
    polio drops are not given in developed countries but injection discovered by salk.oral polio was discovered by sabin.CBSE/matric can be compared with injection for polio while stateboard can be polio drops.the role of the govt is to make all people get immunised to polio at a reasonable cost.the threat/religious view against injections may make some run away from getting immunised.the selection of tougher books may increase the drop out rates which is far worser than people passing 10th standard studying an easier syllabus.CMC VELLORE gives injections against polio in addition to the pulse polio by the govt.
    parents and matric schools are not prevented from using addtl books to educate their children like rich people vaccinating their children against hepatitis A,chicken pox vaccine etc in addition to the DPT/oral polio,measles made mandatory by the WHO n govt.
    there are a lot of funny arguments from thuglaq to blogs asking for samacheer medicine.its already samacheer only.poor people having cancer are not getting paracetamol while rich get vincristine.treatment is the same for both and howevr rich one may be no doctor can prescribe a drug not approoved by the govt/FDA.
    medical/engg education across govt and pvt colleges are the same.

  • சமசீர் கல்வி என்றால் என்ன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அரசாங்கம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நான்கு மணி நேரம் தான் ஆசிரியர்கள் பாடம் எடுக்க வேண்டும் .மீதி நேரம் விளையாட வேண்டும் என்று சொல்வதற்கோ நடைமுறைபடுத்துவதற்க்கோ உரிமை இல்லையா
    ஆசிரியர்கள் அடிக்க கூடாது.கடுமையான தண்டனைகள் தர கூடாது.குழந்தைகளை தேர்வில் fail ஆக்க கூடாது/மதிப்பெண் போடாமல் .a b c என்று தகுதி வரைபாடு தான் தர வேண்டும் என்று கூறுவது தவறா
    அனைவரும் சாலை விதிகளை ஒன்றாம் வகுப்பில் இருந்து படிக்க வேண்டும் என்று பாட புததகத்தில் அவற்றை புகுத்துவது சரியா தவறா
    பெப்சி,சிப்ஸ் போன்றவை உடல் பருமன்,இளவயது நீரிழிவு நோய் போன்றவற்றை உருவாக்கும்,தினமும் விளையாட்டு,உடற்பயிற்சி முக்கியம் என்று பாடம் எடுக்க கட்டாய படுத்துவது தவறா
    இது ஆரம்பம் தான்.அரசாங்கம் அமைக்கின்ற குழு தான் அடிப்படை பாட புத்தகங்களை தீர்மானிக்க முடியும்.அதில் மாற்றங்கள் வந்து கொண்டிருக்குமே தவிர அதில் தலையிட யாருக்குமே உரிமை இல்லை அவரவர் இஷ்டம் போல பாடபுத்தகங்களை வைத்து கொள்ளலாம் எனபது சரியா
    இந்த திடீர் எதிர்ப்பு,கல்வியின் மேல் கரிசனம் எதனால் இதை எதிர்க்கின்றவர்களுக்கு வந்தது
    கருணாநிதியின் மேல் உள்ள எதிர்ப்பு சம சீர் கல்வியின் மீதும் படிகின்றதாலா .தமிழ் சீர்திருத்தம் எப்படி பெரியார் சீர்திருத்தம் என்று (சோ சில ஆண்டு முன் வரை அவர் புத்தகத்தில் பழைய லை தான் போட்டு கொண்டிருந்தார்)வெறுக்கபட்டதோ அது போல
    வட கிழக்கு மாநிலங்களில் CBSE பாட திட்டத்தை நவோதய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் படும் கஷ்டத்தை நான் பார்த்திருக்கிறேன்.படிப்பை இடையில் கை விடும்,வகுப்புகளில் தவறி 20 ,22 , வயது ஆண் பெண் பத்தாவது படிப்பதை பார்த்திருக்கிறேன்.அனைவரையும் பள்ளிக்கு இழுத்து சில ஆண்டுகளாவது படிக்க வைக்க வேண்டுமானால் அதன் தரம் அதிகமாக இருக்க கூடாது.

    அடிப்படை கல்வி வாழ்க்கைக்கு முக்கியமான விஷயங்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதே தவிர அவர்களை plane கண்டுபிடிக்கவோ ஓட்டவோ எடுத்து செல்ல முடியாது.விமானம் என்றால் என்ன அதை ஓட்டுபவர் விமானி என்று அழைக்கபடுவார்.விமானியாக வேண்டுமானால் அறிவியல் பாடமாக வைத்து +2 வரை படித்திருக்க வேண்டும் எனபது போன்றவற்றை தெரியபடுத்துவது.விமான படையில் சேர்ந்தால் பணம் செலவில்லாமல் விமானம் ஓட்ட கற்று கொள்ளலாம்.

    விமானத்தை எப்படி செய்வது,அதை எப்படி மேம்படுத்துவது,சூரிய சக்தியில் ஓட்ட வைக்க முடியுமா போன்றவை அடிப்படை கல்வியில் வராது.விமான வியல் படிக்கின்றவர்களுக்கு தான் அது தேவை.

    • திரு பூவண்ணன்: உங்கள் வாதங்கள் தொடக்கம் முதலே ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் வாதங்களாகவே உள்ளன. நீங்கள் ஒருவேளை ஆசிரியர்தானோ என்னவோ. உங்கள் அபிப்பிராயத்தை மதிக்கிறேன். ஆனால் நீங்கள் இதுவரை இங்கு எழுதியவற்றுள் ஒரு வரியைக் கூட என்னால் ஏற்க இயலாது. என் பார்வையில் அவை மிகவும் பிற்போக்குத்தனமான வாதங்கள். விவாதிக்க இடமிருப்பதாகத் தெரியவில்லை. மன்னிக்கவும்.

  • மொத்தம் 5 பகுதிகளில் இந்த பகுதி தான் தெளிவாக இருக்கு என்று நான் நினைத்துக் கொண்டே வீட்டுக்காரம்மாவிடம் கொடுத்து மொத்தமாக படித்து கருத்து கேட்டேன்.

    ஆச்சரியம். இருவரின் கருத்தும் இதில் ஒத்துப் போய்விட்டது.(!)

    குழந்தைகள் மெட்ரிக் ல் படிக்கிறார்கள். ஓரளவுக்கு நியாயமான பணவெறி இல்லாத பள்ளியும் கூட.

    நீங்கள் நினைப்பது போல இவர்கள் படிக்கும் பள்ளி இல்லை. அரட்டை, கோஷ்டி, குழு என்று சக்கைப் போடு போடுகிறார்கள். மூன்றாம் வகுப்பு. பலமுறை வீட்டில் கேட்டுள்ளேன். இவர்களை வெளியே பழகவிடு. பேசவே தெரியாது போல இருந்து விடப் போகிறார்கள் என்று. வீட்டில் சிரித்துக் கொண்டு மறுப்பார்.

    ஆனால் பள்ளி நாட்களில் தினந்தோறும் நடக்கும், நடந்த, ஈடுபட்ட அத்தனை விசயங்களையும் நான் இல்லாத சமயத்தில் வீட்டுக்காரம்மாவிடம் ஒப்படைக்கும் தன்மைகளைப் பார்க்கும் போது சரி இவர்கள் பிழைத்துக் கொண்டு விடுவார்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வதுண்டு.

    இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட நடந்து கொண்டிருக்கும் ரௌடித்தனத்தை ஒன்றும் சொல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

    ஒரே ஒரு பிரச்சனை நான் பார்த்தவரைக்கும்.

    முழுமையான அர்த்தம் தெரியாமல் ஒரு விசயத்தின் ஆழம் அகலம் தெரியாமல் மனப்பாடம் என்கிற ரீதியில் தான் மாணவர்களை ஆசிரியர்கள் கொண்டு செலுத்துகிறார்கள்.

    ஒரு பதிவில் ஆசிரியர் பயத்தைப்பற்றி எழுதியிருந்தீங்க.

    ஆனால் அந்த பயம் தேவைதான்போலிருக்கு. இங்கே நடக்கும் சண்டைகளை (உங்களைப் போலவே நாங்களும் அடித்ததே இல்லை) அடக்க வேறு வழியில்லாமல் உங்க மிஸ்க்கு இப்போ கைபேசியில் அழைக்கின்றேன் என்றால் பஞ்சாயத்து முடிவுக்கு வந்து விடும்.

    மறுநாள் சொல்லிவிடாதீங்க என்று காலை முதல் கெஞ்சல் மற்றும் கொஞ்சலில் நாங்களும் மறந்து போய்க் கொண்டேயிருக்கிறோம்!!!!!!!

  • ஐயா ஆய் கழுவ காகிதம் உபயோகிக்கும் என்னை போய் பிற்போக்குவாதி என்று கூறி விட்டீர்களே .ஆசிரியர் ஆக வேண்டும் எனபது என் ஆசைகளில் ஒன்று.மருத்துவராக ஆகாமல் இருந்திருந்தால் அரசு ஆசிரியர் ஆகியிருக்க கூடும்.இப்போதும் சம சீர் கல்வியில் பள்ளிகளில் மருத்துவர் பாடம் எடுக்க வேண்டும் (அப்படி வரும் வர வேண்டும் என்று விரும்புகிறேன்)என்று வந்தால் பள்ளி ஆசிரியனாக மாற வாய்ப்பு உள்ளது.
    ராணுவ வீரர்களுக்கு ஆசிரியனாக இருந்திருக்கிறேன்.அனைவரும் முற்போக்காக காகிதம் உபயோகிக்க வேண்டும் என்று போதித்த என்னை போய் பிற்போக்கு கருத்துக்கள் கொண்டவன் என்று திட்டி விட்டீரே .எது பிற்போக்கு/எதனால் பிற்போக்கு என்று கூற முடியுமா
    அதிக தரம் வேண்டும் என்று மருத்துவ பாடங்களை,சட்ட புத்தங்களை எட்டாம் வகுப்பிற்கு வைக்கலாமா.என் நல்ல நேரம் எனக்கு உங்கள் தந்தை போல பல ஆசிரியர்கள் பள்ளியில் கிடைத்தார்கள்.ஆனால் கல்லூரியில் பலர் கி ராஜேந்திரன் போல கிடைத்தார்கள்.பள்ளியிலும் அவர் போல் சிலர் கிடைத்தார்கள்.இப்போது மண்டையில் இருப்பதெல்லாம் திட்டி,உதைத்த,பரிட்சையில் fail ஆக்கி விடுவேன் என்று மிரட்டியவர்கள் கற்று கொடுத்தது தான். ஏனென்றால் மாணவர்களை நண்பர்களாக பார்க்கும் நல்ல ஆசிரியர்கள் எடுக்கும் வகுப்புகளுக்கு நான் போனதே இல்லையே (பள்ளியில் கைபந்து பயிற்சி மற்றும் கல்லூரியில் ஜாலி,மாணவர் union ).

  • dear pa ra,
    what is important is basics.not an elaborate syllabus.if a student is good in basics,he can tackle anything in higher classes.further academics alone is not sufficient,what is important is overall development.that is why iit students commit suicide when they fail academically.please read j.krishnamurthy and his views on education.please visit his schools.the school-kfi in adayar.therefore it is not syllabus,the quality and infrastructure,that makes the difference.when all colleges follow the same syllabus of the same university,why some particular colleges are the most sought after colleges?samacheer kalvi is not having a tough syllabus,but maintaining the same standard in all the educational institutions so that there is not much difference.this should be the guiding factor of the government.

  • நல்ல விவாதம்
    தங்களுடைய கருத்து க்களைக் காட்டிலும்
    எதிர்க் கருத்துடையவர்களின் வாதத்தில் சத்து சற்றுக் கூடுதல்
    என் பார்வையில் பாடத்திட்டங்களிலும் உங்கள் அணுகுமுறை
    நல்ல பலனைக் கொடுக்கும் ;சரித்திரங்களை வெறுத்தவர்கள் கூட
    அவைகளை புரிந்து ஈடுபாட்டுடன் படிக்க செயத்ததைப் போன்று .

  • No one can level the society: a bitter or better fact, u may take it either way.//Jo.Amalan இவரின் கருத்துக்கள் காலத்தை பின்னோக்கி இழுக்கும் ஒரு வர்க்கத்தின் இதயபூர்வ பிரகடனம் .
    இவர்கள் வாழ்வதற்கு மட்டும் நாடும் உலகமும் ;

  • அவருக்குப் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் உண்டு. கல்கி வாசகர்கள் மாதிரி தலைமுறை தலைமுறையாக அவரைப் படித்துத் தீர்த்துக்கொண்டிருப்பவர்கள். அவரது புகழ்பெற்ற இரண்டு பேரிலக்கியங்கள் [ சுமார் 1000 பக்கங்கள் என்னும் அர்த்தத்தில்] இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ் மற்றும் ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ். விமரிசகர்களின் ஏகமனதான அங்கீகாரத்தைப் பெற்றவர். துரதிருஷ்டவசமாக அவரது வாசகர்களுக்குத்தான் அவரைக் கண்டால் ஆகாது

    I think u r referring to Badri Seshadri. Correct ?

  • பாரா, இங்கிலாந்தில் பல வருடங்கள் வசித்து பின் இந்தியா திரும்பி மூன்று வருடங்கள் வசித்து, பள்ளிகளில் என் மகள் படும் பாடு தாங்க முடியாததால் மறுபடியும் இங்கிலாந்திற்கே திரும்பி, இப்போது பல வித்தியாசங்கள் என் மகள் வாயால் சொல்ல கேட்டு கொண்டு இருக்கிறேன். இங்கே முதல் ரேங்க் இரண்டாவது என்ற பிரிவினை இல்லை. காரணம் கேட்ட போது, முயற்சி செய்வதே மிக பெரிய விஷயம் அதை வரவேற்க வேண்டும் என்றாள் பெரிய மனுஷி. இரண்டாவது ranking என்பது மாணவர்களுக்கு இடையே ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்குகிறது. ஆகையால் அது இங்கே கிடையாது. வீட்டு பாடம் என்பது மிக மிக அரிதான விஷயம். சோசியல் skills ஒரு பாடம். சமுதாயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது. நடை முறை பயிற்சி. கிபி.கிமு. நபர்கள் கிடையாது. கணித கிளப், literacy கிளப் இன்ன பிற கிளப்கள் உண்டு. ஆர்வம் உள்ளவர்கள், வகுப்பு நேரத்தில் செல்ல அனுமதி உண்டு. இப்போதெல்லாம் என் மனைவி உபயோகிக்கும் மந்திரம் “சொன்ன பேச்சு கேக்கலேன்னா, இந்தியாவுக்கு திரும்பி போய்டுவோம்”. நன்றாக வேலை செய்கிறது. அது சரி பாரா, இந்தியர்கள் எதற்காக போட்டு இட்டு கொள்கிறார்கள்?. விளக்கம் அளித்தால், நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு.

  • கடந்த நூறு ஆண்டு காலமாக நாம் பார்பனர்களை குறை கூறிக்கொண்டு இருக்கிறோம். (தென் இந்திய நல உரிமை சங்கம், சுயமரியாதை இயக்கம், நீதி கட்சி, திராவிட கழகம், பின்னர் எண்ணற்ற திராவிட அரசியல் கட்சிகள் எல்லாம் திட்டி ஆயிற்று)

    என்னை பொறுத்தவரை சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் மண்டல் கமிஷன் அமல்படுத்திய பிறகு நாம் அவர்களைப்பற்றி பேசுவது தேவை இல்லை என்றே தோன்றுகிறது. அல்லது நாம் இன்னும் பேசிக்கொண்டு இருந்தால் நமக்கு அறிவு, அரசியல், ஆட்சி அதிகார பலம் இருந்தும் நாம் இன்னமும் வளரவில்லை என்றே தெரிகிறது. அல்லது சரியான அறிவு கிட்டவில்லை என்றே தோன்றுகிறது.

    தமிழகத்தில் 5 முறை, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக யார் ஆண்டார்கள் என்பது நமக்கு தெரியும்.

    கிராமப்புற அரசு பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் ஒழுங்காக வருவதில்லை என்று நாம் கேட்க முடியவில்லை. பள்ளிகளுக்கு கட்டடம், நாற்காலி, கரும்பலகை சரியாக இல்லை என்று நாம் போராட முடியவில்லை.

    மாணவர்களுக்கு லேப்டாப் தேவை இல்லை, முதலில் அடிப்படை வசதியும், கழிப்பறை வசதியும் தான் தேவை என்று அதிகாரவர்க்கத்தை கேட்டு நம்மால் போராட முடியவில்லை.
    நகர் புறங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான அளவு அரசு பள்ளிகள் வேண்டும் என்று நம்மால் அதிகாரவர்க்கத்தை கேட்டு போராட முடியவில்லை. வீரம் விளைந்த சேர, சோழ, பாண்டிய, நாயக்க, பல்லவர்கள் என்று பறை சாற்றி கொள்பவர்கள் இதை பற்றி எல்லாம் பேசுவது இல்லை. ஆனால் பார்பனர்களை மட்டும் குட்ட்றஞ்சாட்டி பேசுகிறோம்.

    ஆனால் பார்பனர்களே, இரண்டு கேள்விகள் ஒன்று : தமிழில் “பிராமண பாஷை” எங்கு இருந்து வந்தது ?
    இரண்டு: ஆலயத்திற்கு உள்ளே மக்கள் செல்லும் பொழுது, பொது மக்கள் நிற்கும் இடம் தாண்டி கருவரைக்கு பக்கத்துக்கு அறை வரை சென்று கடவுள் தரிசனம் செய்கிறீர்களே ? உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?

  • என் மகள் u.kgபடிக்கிறாள்.மெட்ரிக் ஸ்டேட் போர்டு.எல்லாரும் சிபிஎஸ்யி ஸ்கூல்ல சேர்க்க சொல்றாங்க எது பெஸ்ட்.வித்தியாசம் என்ன

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி