கிண்டில் மின் நூல்

மொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை

Prodigy என்ற பதின் பருவ வயதினருக்கான நூலாக்க முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது எழுதிய புத்தகம் இது. உலக இசை மேதைகள் ஒவ்வொருவரைக் குறித்தும் தனித்தனியே ஒரு சிறு நூலாவது கொண்டு வரவேண்டும் என்று விரும்பினேன். அளவில் சிறிதாக, அதிகம் குழப்பாத, புரிதல் பிரச்னைகள் எழாத வண்ணம் அந்நூல் அமைய வேண்டும் என்பது எண்ணம். ஒரு புத்தகத்தில் ஒரு மேதையின் இசையை உணரச் செய்வது சிரமம். ஆனால் குறிப்பிட்ட இசை மேதையின் வாழ்வு எவ்விதமான சுருதியில் இயங்கியது என்பதைத் தொட்டுக்காட்டி, அதன் மூலம் அவரது படைப்புகளின் ஆதார தொனியைச் சுட்டுவதே இதன் நோக்கம்.

மொஸார்ட், தனது இளமைப் பருவம் முழுவதும் வருமானமின்றித் தவித்தவர். எட்டயபுர மன்னருக்கு பாரதி சீட்டுக்கவி எழுதியது போல மொஸார்ட் தனது மகாராஜாவுக்கு எழுதிய ராஜினாமா கடிதம் மிகவும் பிரபலம். ஆனால் அவரது ராஜினாமாவை நிராகரித்துவிட்டு, ‘டிஸ்மிஸ்’ நோட்டீஸ் அனுப்பினார் அந்த மன்னர். கலைஞர்கள் வாழும் காலத்தில் அவமதிக்கப்படுவது உலகெங்கும் காலந்தோறும் உள்ள வழக்கமே அல்லவா? அவரது மேதைமை கண்டு மயங்கி நெருங்கிக் காதலிக்கத் தொடங்கியவளே அவரது ஏழைமை கண்டு விட்டு விலகி ஓடியிருக்கிறாள். ஓயாத நோய்த் தொல்லை, தீராத ஏமாற்றங்கள், நிற்காத பெரும் அலைச்சல். வாழ்நாள் முழுதும் இப்படியே இருந்துவிட்டுப் போய்விட்ட கலைஞனின் இசை, இன்று ஓர் அடையாளச் சின்னம். மொஸார்ட்டைத் தொட்டுப் பேசாமல் இசை இல்லை.

காலத்தால் அழியாத உன்னதமான இசைக்கோலங்களை விட்டுச் சென்றவரின் வாழ்வை சுருக்கமாக விவரிக்கிறது இந்நூல்.

கீழ்க்கண்ட நாடுகளில் வசிக்கும் வாசக நண்பர்கள் உரிய சுட்டிகளைப் பின் தொடர்ந்து சென்று வாங்கி வாசிக்கலாம். அன்லிமிடெட் சந்தாதாரர் என்றால் இலவசமாகப் படிக்கலாம்.

அமேசான் இந்தியாவில் வாங்க

அமேசான் அமெரிக்காவில்:

அமேசான் யுகே:

அமேசான் ஆஸ்திரேலியா:

இவை தவிர டென்மார்க், ஃப்ரான்ஸ், ஜப்பான், பிரேசில், கனடா, மெக்சிகோ, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கோபால் பல்பொடி செல்லக்கூடிய அத்தனை தேசங்களின் அமேசான் பதிப்பிலும் அந்தந்த ஊர் நாணயத்தில் கிடைக்கும்.

விலை ரூ. 50.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி