
கிண்டில் பதிப்புகள் திருட்டுக்கு உட்படாது என்று சொல்லப்பட்டது. அது இல்லை என்று சில தொழில்நுட்பத் திருடர்கள் நிரூபித்ததைச் சமீபத்தில் கண்டறிந்தேன். கணி யுகத்தில் சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை என்பதை அறிவேன். இருப்பினும் உயிரைக் கொடுத்து எழுதிய ஒரு பிரதியை சர்வ சுலபமாகக் கள்வர்கள் கொண்டு செல்ல எடுத்து வெளியே வைக்க விருப்பமில்லை. என்னால் முடிந்த மிக எளிய சில பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் செய்து முடித்துவிட்டு யதியை வெளியிடலாம் என்று நினைத்தேன். அதனால்தான் இத்தாமதம்.
இதையும் மீறி யதியின் கிண்டில் பதிப்பு திருடப்படலாம், திருடு போகவே செய்யும். வழக்கத்தைக் காட்டிலும் சிறிது தாமதமாகலாம்; அவ்வளவுதான்.
திருடி அல்ல; வாங்கிப் படிக்க விரும்பும் வாசகர்களை நோக்கியே ஒவ்வோர் எழுத்தாளனும் பேசுகிறான். அவன் வாங்குவதில் சிரமம் இருக்கக்கூடாது அல்லது குறைந்த பட்ச சிரமம் மட்டுமே இருக்கலாம் என்றே எண்ணுகிறான். அறிமுக விலையாக ரூ. 250ஐ வைப்பதற்காக நான் 35 சதவீத ராயல்டியை இழக்கிறேன். பிறகு இதன் விலை 299 ஆகும்போதும் அதே இழப்பு எனக்குத் தொடரும். கிண்டில் வழங்கும் அதிகபட்ச ராயல்டியான 70 சதவீதத்தை நான் முழுவதுமாகப் பெற வேண்டுமானால் இப்பதிப்பின் விலையை இன்னும் கணிசமாக ஏற்றவேண்டியிருக்கும். அன்லிமிடெடில் கொண்டு போகவேண்டி வரும். அப்படிச் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன். யதியின் கிண்டில் பதிப்பு எப்போதும் ரூ. 299 ஆகவே இருக்கும். [முதல் சில தினங்களுக்கு மட்டும் ரூ. 250] இப்போதைக்கு அன்லிமிடெடில் இது கிடைக்காது.
அமேசான் இந்தியாவில் யதி மின்நூலை வாங்க இங்கே செல்லவும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.