கிண்டில் பதிப்புகள் திருட்டுக்கு உட்படாது என்று சொல்லப்பட்டது. அது இல்லை என்று சில தொழில்நுட்பத் திருடர்கள் நிரூபித்ததைச் சமீபத்தில் கண்டறிந்தேன். கணி யுகத்தில் சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை என்பதை அறிவேன். இருப்பினும் உயிரைக் கொடுத்து எழுதிய ஒரு பிரதியை சர்வ சுலபமாகக் கள்வர்கள் கொண்டு செல்ல எடுத்து வெளியே வைக்க விருப்பமில்லை. என்னால் முடிந்த மிக எளிய சில பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் செய்து...
ராயல்டி விவகாரம்
ராயல்டி என்பது என்னவென்றே புரியாமல் இளையராஜா விவகாரத்தில் பலபேர் பொங்குவதைக் காண்கிறேன். பாமர ரசிகனுக்கு இந்த காப்பிரைட், ராயல்டியெல்லாம் சம்பந்தமில்லாதவைதான். ஆனால் கருத்துச் சொல்ல வரும்போது மட்டும் எப்படியோ ஒரு சம்பந்தம் நேர்ந்துவிடுவது கருவின் குற்றமல்ல. காலத்தின் குற்றம்.
சிங்கிள் டீ
ராயப்பேட்டை ஒய்யெம்சியே மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு இரண்டு நாள் சென்றேன். முதல் நாள் சுமார் ஒரு மணிநேரம். இரண்டாம் முறை சென்றபோது சுமார் மூன்று மணி நேரம்.
எழுத்தாளர்களின் ராயல்டி
முன்னர் சாரு. இப்போது ஜெயமோகன். இரண்டு முக்கியமான எழுத்தாளர்கள் தமது புத்தகங்களின் விற்பனை குறித்தும், கிடைக்கும் ராயல்டி பற்றியும் மனம் திறந்து எழுதியிருக்கிறார்கள். [ஆக, இந்தக் கிசுகிசுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை, இந்த இரு எழுத்தாளர்களைப் பொருத்த அளவில் பொய்யானது என்பது உறுதியாகிறது.] ஆண்டிறுதியில் இவர்கள் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு முண்டியடிக்கிற கூட்டம், நிகழ்ச்சிக்குக்...