Categoryசமூகம்

ராயல்டி விவகாரம்

ராயல்டி என்பது என்னவென்றே புரியாமல் இளையராஜா விவகாரத்தில் பலபேர் பொங்குவதைக் காண்கிறேன். பாமர ரசிகனுக்கு இந்த காப்பிரைட், ராயல்டியெல்லாம் சம்பந்தமில்லாதவைதான். ஆனால் கருத்துச் சொல்ல வரும்போது மட்டும் எப்படியோ ஒரு சம்பந்தம் நேர்ந்துவிடுவது கருவின் குற்றமல்ல. காலத்தின் குற்றம்.

ஒரு பிரார்த்தனை

நண்பர்களுக்குக் குடியரசு தின வாழ்த்துகள். பிரிவினை சக்திகளின் பிடியில் விழுந்துகொண்டிருக்கும் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர்மீது பரிவும் பரிதாபமும் எழுகிறது. அவர்களைச் சிந்திக்கவிடாமல் போலி அறச்சீற்ற உணர்வால் தாக்கிக்கொண்டிருக்கும் வெற்றுக் கும்பலைக் காலம் களையெடுக்கும். இந்த தேசம் எனக்கு என்ன செய்தது என்று கேட்கிற சுதந்தரத்தைக்கூட இந்த தேசத்தின் ஜனநாயகம்தான் வழங்கியிருக்கிறது என்பதை...

கார் விலங்கு

நண்பர் ஒருவர் என்னை அலுவலகத்தில் சந்திக்க இன்று வந்திருந்தார். பல வருட நண்பர். பல காலம் கழித்து சந்திக்கிறோம். எனவே நேரம் போனது தெரியாமல் பேசிக்கொண்டிருந்துவிட்டோம். என்னென்னவோ விஷயங்கள். இலக்கியம். சினிமா. அக்கப்போர். மென்பொருள். என் வீடு. அவர் வீடு. என் மாவா. அவரது வெற்றிலை சீவல். எழுத்து. பத்திரிகை. தொடர்கள் இத்தியாதி. விடைபெற்றுப் புறப்பட்டவருடன் வாசல்வரை போனபோது ஒரு கணம் இரண்டு பேருமே...

ஒருவர் பலி

என் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் வருகிற ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குள், நடுச்சாலையில் நான்கு இடங்களில் ‘ஒருவர் பலி’ என்று மஞ்சள் பெயிண்டில் எழுதியிருக்கிறார்கள். வெறுமனே எழுதியிருந்தாலும் சரி. மேலே கீழே எலும்புக்கூடு பொம்மையெல்லாம் போட்டு சுற்றிலும் ஓர் அபாய வட்டம் வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் விபத்து நடந்தது, நீ வண்டி ஓட்டும்போது கவனம் என்று எச்சரிக்கும் நோக்கம்தான். ஆனால்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி