Categoryஇணையம்

கிறுக்குத்தனம்: 2004 வர்ஷன்

பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் ஐடிகளைச் சில மாதங்களாக டெலிட் செய்து வருகிறேன். என்ன ஒரு ஐந்து பத்து ஐடி இருக்குமா, இது ஒரு ப்ராஜக்டா என்று உங்களுக்குத் தோன்றலாம். ஜிமெயில் அறிமுகமான காலத்தில் அதன் 15 ஜிபி இடம் என்பது ஒரு பயங்கரமான போதைப் பொருளைப் போல என்னைத் தாக்கியது. எப்படியாவது ஒரு பத்தாயிரம் ஜிபியை வளைத்துப் போட்டுவிட வேண்டும் என்று வெறிகொண்டு என்னென்னவோ பெயர்களில் அக்கவுண்ட்...

நான் தேடி அமர்ந்த ஆப்புகள்

முன்னொரு காலத்தில் நிறைய பேனாக்களைச் சேகரித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் எழுத்தாளன் இல்லை என்பது ஒரு முக்கியக் குறிப்பு. ஆனால் பேனாக்களைப் பிடிக்கும். இங்க் பேனா, பால் பாயிண்ட் பேனா, குண்டு பேனா, ஒல்லிப் பேனா, நீல இங்க் பேனா, சிவப்பு இங்க் பேனா, பட்டையாக எழுதும் பேனா, கூராக எழுதும் பேனா. திடீரென்று ஒரு நாள், அதற்கு முன் நான் கேள்விப்பட்டே இராத எர்னஸ்ட் ஹெமிங்வே என்ற அமெரிக்க எழுத்தாளரின்...

பரம ரகசியங்களைக் குறித்த வெள்ளை அறிக்கை

நவீன வாழ்க்கை விடுக்கும் சவால்களில் மிக மோசமானதென்று நான் கருதுவது பாஸ்வர்டுகளை நினைவில் வைத்துக்கொள்வதுதான். பாஸ்வர்ட் மேனேஜர்கள், அனைத்துக்கும் ஒரே பாஸ்வர்ட், ஒரே பாஸ்வர்டின் பல்வேறு வித வெளிப்பாடுகள், இயந்திர உற்பத்தி பாஸ்வர்டுகள், ஒவ்வொரு முறையும் forgot password போட்டுப் புதிய பாஸ்வர்ட் பெறுதல் உள்ளிட்ட அனைத்து சாத்தியங்களிலும் முயற்சி செய்து சலித்துப் போன அனுபவத்தில் இதனை எழுதுகிறேன்...

யோசித்து நேசிப்போம்

இங்கே கொரோனாவைவிட வேகமாக இன்னொரு அபாயம் பரவிக்கொண்டிருக்கிறது. அது வாசிப்பு குரூப்புகள். எனக்கு இந்தக் குழு வாசிப்பாளர்களைப் பார்த்தாலே திரைப்படங்களில் கண்ட கேங் ரேப் காட்சிகள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. அபூர்வமாக ஒன்றிரண்டு நல்ல மதிப்புரைகள் வந்தாலும் பெரும்பாலும் இக்குழுக்களில் எழுதப்படும் உரைகள் குறிப்பிட்ட புத்தகத்துக்கோ, எழுத்தாளருக்கோ தர்ம சங்கடம் தரக்கூடியவையாகவே இருக்கின்றன. எழுத்தாளர்...

வெட்டி முறித்த காதை

பொதுவாக வெயிற்காலங்களில் என்னால் சரியாக எழுத முடியாமல் போகும். நான் ஒன்றும் நாளெல்லாம் வீதியில் திரிகிற உத்தியோகஸ்தன் இல்லைதான். ஆனாலும் வெக்கை நினைவில் நிறைந்துவிடுகிறபோது வெளியைக் காட்டிலும் இம்சிக்கும். இம்முறை வழக்கத்தைவிடக் கோடைக்காலம் கொடூரமாக இருக்கும் என்று இன்று மனத்தில் பட்டது. சகிக்க முடியாத சூடு. பத்து நிமிடம் வெளியே போய் வந்ததற்கே காது எரிந்தது. பாதங்கள் எரிந்தன. உச்சந்தலையில்...

அஞ்சலி: தகடூர் கோபி

கோபியுடன் எனக்கு நேர்ப்பழக்கம் கிடையாது. ஏதோ ஒரு தமிழ் இணைய மாநாட்டில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான். ஆனால் யுனிகோட் புழக்கத்துக்கு வருவதற்கு முந்தைய திஸ்கி காலத்தில் [கிபி 2000] இரா. முருகன் நடத்தி வந்த ராயர் காப்பி க்ளப் மூலம் அவரை எனக்குத் தெரியும். கணினியில் தமிழில் எழுதுவது – வாசிப்பது சார்ந்த சிக்கல்கள் அதிகம் இருந்த அக்காலத்தில் கோபி சலிக்காமல் மின்னஞ்சல்கள் மூலம்...

154 கிலோபைட்

154 கிலோ பைட் – என்னுடைய முதல் கட்டுரைத் தொகுப்பு. 2002ல் வெளி வந்தது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறு பதிப்பாக மின் நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் பார்த்தவர்கள் / வாசித்தவர்கள் குறைவாகவே இருப்பார்கள். ஒரே ஒரு பதிப்பு மட்டும் வெளிவந்தது. அதிலும் பெரும்பாலான பிரதிகளைப் பதிப்பாளர் எடைக்குப் போட்டுவிட்டு கடையைக்...

சம்சாரம் போல் என்னைத் தாக்குகிறாய்!

நேற்று முன் தினம் முதல் பேட்டையில் திடீர் திடீரென்று மின்சாரம் போய்விடுகிறது. எப்போது போகும், எப்போது திரும்பி வரும் என்றே தெரிவதில்லை. ஒரு மின்மிகை மாநிலத்தில் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லையே; சென்னையை குஜராத்தோடு இணைத்துவிட்டார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. அங்கேதான் காந்தி நகரை மட்டும் ஜொலிக்கச் செய்துவிட்டு எஞ்சிய பகுதிகளைப் பாகிஸ்தானோடு இணைத்துவிட்டார்கள் என்று கேள்வி. அது எக்கேடோ...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!