சூனியன், நீல நகரத்தை முழுவதுமாய் தன் கட்டுக்குள் கொண்டு வர திட்டமிடுவதாக தெரிகிறது. சூனியனின் திட்டம் கொஞ்சம் அச்சமூட்டுவதாகத்தான் இருக்கிறது.
இதற்கிடையில் கோவிந்தசாமிக்கும், அவனுடைய மனைவிக்குமான கருத்து வேறுபாடுகளை சரி செய்ய முயல்கிறான்.கூடவே மனிதர்களுக்கும் சூனியர்களுக்குமான வித்தியாசங்களை முன் வைத்து,மனிதனின் பலவீனங்களாக சூனியன் நினைப்பவற்றை நம்மை உணர செய்கிறான் சூனியன்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக சாகரிகாவின் மூளைக்குள் இறங்கி அவளின் உள்ளுணர்வுகளை ஆராய முனைகிறான்.
சாரிகாவின் அனுபவங்களை அறிந்து கொள்ள வெகு ஆர்வமாய் உள்ளது. என்னளவில் எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாய் இருக்கிறது. பொதுவாக அடுத்தவர் வாழ்வில் சுத்தமாய் ஈடுபாடு காட்டாத எனக்கு இந்த இருவரின் பிணக்குகளுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதையும், யார் உண்மையை சொல்கிறார், யார் மீது பிழை என்று கண்டறியும் ஆவலும் தான் காரணமாய் இருக்கும் என நினைக்கிறேன்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!