சூனியன் தன்னுடைய எதிரியான பா.ரா.வை எதிர்கொள்ள வேண்டும் என்கிற முதன்மையான பணியை முடிக்கும்வரை வேறெந்த பணியையும் தொடுவதில்லை என்கிற முடிவுக்கு வந்தபின் கோவிந்தசாமியோ அல்லது அவனது நிழலோ அவனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.
அதனால் தன் எதிரியை எதிர்கொள்ளும் முயற்சியின் முதல்படியாக கோவிந்தசாமியின் உள்நுழைந்து தன் வேலைகளை தொடங்குகிறான்.
ஒரு இடத்தில் பிரச்சினை இருக்கிறது அதை ஒருவர் எதிர்த்து குரல் கொடுக்கிறார் என்றதும், அந்த பிரச்சினைக்குரிய நபர்களின் பக்கம் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள்?
1. இது போன்ற பிரச்சினை இதற்கு முன்பு வந்தபோது அவர் ஏன் குரல் எழுப்பவில்லை ?
2. அவர் யோக்கியமா? அவர் தலைவர் யோக்கியமா?
3. அவரின் பின்புலம் நோண்டப்படும்.
4. குறிப்பிட்ட ஒரு இனத்தை / மதத்தை குறிவைத்து நடக்கும் சதி இது.
5. இந்த பிரச்சினையைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? இவரது தாத்தாவின் தாத்தா வேறு இனத்து பெண்ணை திருமணம் செய்தது தெரியாதா?
இதுபோன்ற எதிர்வினைகள் சகஜம். இப்படிப்பட்ட எதிர்வினைகளை ஏற்படுத்தி சம்மந்தப்பட்டவர்களை மனரீதியாக பலவீனப்படுத்தி மைய பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வது வழக்கம்.
இதில் பெரும்பாலும் பொய்களே அதிகம் இருக்கும். அப்படிப்பட்ட பொய்களை சம்மந்தப்பட்டவர் கண்டுபிடித்து சட்டநடவடிக்கை எடுப்பதாகச் சொன்னால் உடனே காலில் விழுந்துவிடுவார்கள்.
ஆனால் அதை பரப்பி கூடி கும்மியடித்த 1000 பேர் சிறு வருத்தமும் தெரிவிக்க மாட்டார்கள். ஒன்றிரண்டு வருடங்களில் அது லட்சம் பேரை அடைந்து உண்மையாகவே உருமாறி இருக்கும்.
அதுபோன்ற ஒரு தாக்குதலை சூனியன் சாகரிகாவை நோக்கி தொடங்குகிறான். பாவம் நம் பா.ரா.. அவர் என்ன செய்யப் போகிறார் என அடுத்த அத்தியாயம் சொல்லும் என எதிர்பார்க்கிறேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.